இன்றைய Business Standard-ன் Devangshu Datta: Centrefolds and chuddies என்ற இந்தக் கருத்தங்கத்தை (OpEd) நண்பர் அபி-யின் ஆங்கில வலைப்பதிவு மூலம் படித்தேன். படித்தவுடன் தோன்றிய எரிச்சல்; What a jerk!

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தராக ட்ரு கில்பின் ஃபாஸௌட் (Drew Gilpin Faust) நியமிக்கப்பட்டிருப்பதை முன்னிருத்தி தேவங்ஷு தத்தா அபத்தக் களஞ்சியமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். சமீபகாலத்தில் ஓரளவுக்கு மதிப்புள்ள எந்த பத்திரிக்கை/சஞ்சிகையிலும் இதுபோன்ற வெறுப்பை உமிழும், அறியாமையைப் பறைசாற்றும் கட்டுரையை நான் வாசிக்கவில்லை. கற்காலத்தில் உறைந்துபோன மாமிசப் பிண்டமாகத் தோன்றுகின்றார் தத்தா.

கட்டுரை முழுவதும் ஆண்களுக்குப் பெண்கள் சமமாக வருவதைப் பொறுக்கமுடியாத எரிச்சலை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆங்காங்கே சாதனை படைத்த பெண்களில் பொறுக்கியெடுத்த சில பெயர்களை (Indra Nooyi, Meg Whitman, Carly Fiorina, Michelle Manhart, Lisa Marie Nowak) அள்ளித்தெளித்திருக்கும் இந்தக் கட்டுரையின் அடிநாதமாக “பெண்கள் இப்பொழுது சகல துறைகளிலும் மேலிடத்தை அடைய முடிகிறது. ஆனாலும் அப்படி மேலுக்கு வந்தவர்களால் நிலைத்து நிற்க முடிவதில்லை (முடியாது), இதுபோன்ற கூத்துக்களை நாம் இன்னும் நிறையப் பார்க்கலாம்” என்பதே வலியுறுத்தப்படுகிறது.

“முன்னுக்கு வரும் பெண்களால் ஆண்களைவிட நன்றாகப் பணியாற்ற முடிகிறது. அதற்குக் காரணம் அவர்கள் பெண்கள் என்பதில்லை. பெண்களில் கழிசடைகள் வருவதில்லை. எனவே கொஞ்சமாக வருபவர்கள் எல்லோரும் நன்றாக செயல்படுவதைப் போன்ற தோற்றம் கிடைக்கிறது.” மூன்று தலைமுறைக்கு முன்னால் என் தாத்தா இப்படிச் சொல்லியிருந்தால் அவர் சூழலை வைத்து அவரை மன்னித்துவிட்டுப் போய்விடலாம். ஆனால் இன்றைக்கும் இதுபோன்ற அபத்தக் கருத்துக்களை, அதுவும் துணிவாக அச்சில் தெரிவிப்பதற்கு சிலவற்றைத்தான் காரணங்களாகக் காட்டமுடியும் – அறியாமை, ஆணவம், அகங்காரம்.

Lisa Marie Nowak is an icon. Test Pilot, astronaut, mother-of-three—“Robochick” to her colleagues at Nasa because she controlled the robotics on a Shuttle mission. Attractive and an over-achiever, Nowak drove 1,450 km wearing a disguise and adult diapers to threaten a romantic rival (also a NASA colleague) in what’s being called the “Space Triangle”. Charged with attempted murder and kidnapping, she said her relationship with Shuttle pilot William Oefelein was “more than a working relationship and less than a romantic one”. That brings us to the burning question: will she get an endorsement deal to model the diapers?

சந்தடி சாக்கில் இதுபோலத்தான் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் கருப்பர்கள் நிலை இருந்தது என்று அவருடைய வெறுக்கத்தக்க இனவெறியையும் பறைசாற்றிக் கொள்கிறார்.

As gender disparities ease, women in the workforce will also revert closer to quality norms and start making just as many mistakes as the men. That’s statistical inevitability. It is also statistically inevitable that they will make their mistakes in more bizarrely entertaining fashion. Vive Le Difference!

கட்டுரையில் வரும் சில வாக்கியங்களும் வார்த்தைகளும் எல்லை மீறிப்போயிருக்கின்றன.

  • “but only 21 out of all the Fortune 500 CEOs would admit to wearing bras under their power suits”
  • Fewer men opt for careers in entertainment, the media, Tupperware/Avon sales or advertising.
  • …the Russian partisankas during the Second World War used their flamethrowers as efficiently and brutally as the men during street-fighting episodes.
  • Lisa Marie Nowak is an icon. Test Pilot, astronaut, mother-of-three—“Robochick” to her colleagues at Nasa because she controlled the robotics on a Shuttle mission.

Not to talk about the title!

இந்தக் கட்டுரையை வெளியிட்டதற்கு ஆசிரியர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.