பியரும் நேரமும் கிடைத்தால் என்ன செய்யலாம்? கொஞ்சம் கொஞ்சமாக இரசித்துக் குடிக்கலாம். நிறைய பியரும் கொஞ்சம் நேரமும் கிடைத்தால் அப்படியே வாயில் கவிழ்த்துக் கொள்ளலாம். கொஞ்சம் பியரும் நிறைய நேரமும் கூடவே ஒரு மைக்ரோஸ்கோப்பும் கிடைத்தால் என்ன செய்யலாம்? அற்புதமான படங்களை உருவாக்கலாம்.
beer_becks_dark.jpgbeer_elephant_red.jpgbeer_hineken_dark.jpgbeer_irish_red_lager.jpg

(Click on the images to enlarge)

Molecular Expressions என்ற இந்த தளத்தில் ஆதிகாலம் தொட்டு இன்றுவரையான பல்வேறு நுண்ணோக்கிகளைப் பற்றிய அற்புதத் தகவல்கள் இருக்கின்றன. அறிவியலில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் இந்தத் தளம் சுவாரசியமானதாக இருக்கும். நுண்ணோக்கியின் உதவிகொண்டு அற்புதக் கலைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அறிவியலும் கலையும் ஒருங்கிணையும் இந்தப் புள்ளி மிகச் சுவாரசியமானது. நேரங்கிடைக்கும்பொழுது சில நிமிடங்கள் இந்தத் தளத்தில் செலவிடுவது என் வழக்கம்.

இன்று இந்தத் தளத்தில் கண்ட அற்புதப் படங்கள் இங்கே. இவை எல்லாம் நுண்ணோக்கியின் உதவிகொண்டு எடுக்கப்பட்ட பியர் படங்கள். இன்னும் தேசவாரியாக பல்வேறு பிராண்ட் பியர்களின் படங்களும், அதிகுறை தட்பநிலையில் பியரை உறையவைத்தும், பியர் படிகங்கள் வளர்த்தும் எடுக்கப்பட்ட படங்களும் உண்டு. இதுபோல அறிவியல்-கலை இயைபு குறித்த தளங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.