என்னுடைய பழைய இடுகைகள் அனைத்தின் தலைப்பும் இங்கே கிடைக்கிறது. வலைப்பதிவு எழுதத் துவங்கி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகப்போகின்றன. எழுதிய சில கருத்துக்கள் இன்றைய என் சிந்தனைக்கு ஒவ்வாதனவாகத் தோன்றினாலும் ஓடி ஒளியும் உத்தேசமில்லை.

தமிழ்த்திரையிசையில் ஜாஸ் வடிவம் என்று தலைப்பிட்டு எழுதியவற்றை ஒரே பக்கத்தில் தொகுத்திருக்கிறேன். சிலருக்குப் பயன்படலாம். எழுதும்பொழுது ரியல் ஆடியோ வடிவில் குறைந்த ஒலித்தரத்தில் வெளியிட்டிருந்தவற்றை இப்பொழுது எம்பி3 வடிவில் தந்திருக்கிறேன்.

என்னுடைய அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு குவாண்டம் கணினி என்ற பெயரில் 2003 டிசம்பரில் வெளியிடப்பட்டது. ஆறு மாதங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டதென யுனைட்டெட் ரைட்டர்ஸ் பதிப்பகம் தெரிவித்தது. மறுபதிப்பு சென்ற அக்டோபரில் வெளியிடப்பட்டது. சென்ற வாரத்தில் இது கிடைக்கும் விபரம் குறித்து இருவர் என்னிடம் மின்னஞ்சலில் கேட்டிருந்தார்கள். சென்னையில் சில கடைகளில் விற்பனையில் இருப்பதாக நண்பர்கள் தெரிவித்தார்கள். ஆனால் எந்தக் கடைகளில் என்று தெரியவில்லை. யாராவது விற்பனையில் இருக்கும் கடைகள் குறித்த தகவல்களைச் சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன். (என்ன ஒரு அபத்தமான வேண்டுகோள்!).

வலது பக்க ஓரத்தில் புத்தகத்தின் முகப்பைப் போட்டு வைத்திருக்கிறேன். தகவல் தெரிந்தால் இற்றைப்படுத்த உத்தேசம். (பதிப்பாளரிடமும் கேட்டிருக்கிறேன், பதில் வர நாளாகலாம்)