US_army_microwave_weapon.jpg அமெரிக்க இராணுவம் ஒரு புதிய ஆயுதத்தைப் பரிசோதித்திருக்கிறது. இது நுண்ணலை (microwave) அடுப்பின் மறுவடிவம். ரேத்தியான் என்ற ஆயுத உற்பத்தி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த சாதனம் கிட்டதட்ட கண்ணீர்புகைக் குண்டைப் போல கூட்டத்தைக் கலைக்கப் பயன்படுத்தப்படும்.

ஊர்தியின் மீது பொருத்தப்பட்ட சட்டி போன்ற வடிவம் கொண்ட ஆண்டனாவைக் கொண்டு நுண்ணலைகள் கூட்டத்தை நோக்கிச் செலுத்தப்படும். அந்த அலைகளை உள்வாங்கும் மக்களின் தோல்பரப்புக்குச் சற்றுக் கீழேயுள்ள அடுக்கில் அது சூட்டை உருவாக்கும். தாளமுடியாத சூட்டினால் மக்கள் கூட்டதிலிருந்து சிதறியோடிவிடுவார்கள். இது மைக்ரோவேவ் அடுப்பில் நாம் சமைப்பதைப் போன்றதுதான். அடுப்பினுள் வைக்கப்படும் இறைச்சி மற்றும் பிற உணவுவகைகள் நுண்ணலையை உள்வாங்கும்பொழுது அதிலிருக்கின்ற புரதம், கொழுப்பு போன்றவற்றின் மூலக்கூறுகள் (molecules) அதிவேகமாக அதிரத்தொடங்கும். அந்த அதிர்வு பொருளின் சூட்டை மிகவிரைவாக உயர்த்த அவை வெந்துபோகும். இதேபோலவே, ஆனால் மிதமான அளவிற்கு சூட்டை அளிப்பதன் மூலம் கூட்டத்தைச் சிதறவைக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அமெரிக்க இராணுவத்தின் மூடி விண்படை சோதனை நிலையம் (Moody Airforce Base, Georgia), இந்தச் சோதனையை நடத்தியிருக்கிறது. இதில் ஆயிரத்தில் ஒருவருக்குக் காயம் உண்டாகும் சாத்தியம் இருப்பதாக அவர்கள் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இந்த முறையை இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் அமெரிக்க இராணுவத்தை எதிர்த்துக் கல்லெறியும் கூட்டங்களைக் கலைக்கப் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது.

“The pain is comparable to an intensified version of opening an oven and feeling the initial blast of hot air,” said Staff Sgt. Jason Delacruz, an ADS operator who has also been exposed on several occasions for training purposes. “The effects are extremely sudden, and natural instincts automatically force you to quickly exit the target area.”

ஆனால் இவர்கள் செய்திக் குறிப்பு ஒரு விஷயத்தை மறைக்கிறது. இந்தச் சோதனை நடத்தப்பட்டபொழுது அந்தக் கூட்டத்திலிருந்தவர்கள் தங்கள் மூக்குக்கண்ணாடிகளைக் கழற்றிவிடும்படி கோரப்பட்டிருக்கிறார்கள். அதேபோல அவர்கள் உடலில் எந்தவிதமான உலோகங்களும் (கைக்கெடிகாரங்கள், மோதிரங்கள்) நீக்கப்பட்டிருக்கின்றன. மைக்ரோவேவ் உடலில் படும்பொழுது இதுபோன்ற உலோகங்கள் மனிதர்களின் தோலைக்காட்டிலும் மிக விரைவாகப் பாதிக்கப்படும் என்வே அந்த இடங்களில் அதீத சூடு உருவாகும் (local hot spots). எனவே அவை சோதனையில் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. நியூ சயிண்டிஸ் அறிவியல் சஞ்சிகையின் கட்டுரை இப்படிச் சொல்கிறது;

However, concerns over the safety of such weapons remain. During previous tests, conduced at Kirtland Air Force Base in Albuquerque, New Mexico, volunteers were asked to remove glasses and contact lenses, as well as any metal objects in their pockets (see Details of US microwave-weapon tests revealed).

Further experiments suggested that the weapon’s may create hotspots of intensity in built-up areas and that its effects can be increased by sweaty skin (see Microwave weapon ‘less lethal’, but still not safe).

உண்மையாக இராக்கியர்களிடம் பயன்படுத்தும்பொழுது இதற்கெல்லாம் சாத்தியமில்லை. எனவே களத்தின் இதன் தீவிரமும் இழப்பும் மிக அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இருந்தாலென்ன, அவை அமெரிக்க உயிர்களா? வேண்டுமென்றால் கல்லெறிய வரும்பொழுது கைக்கெடிகாரம் கட்டிக்கொண்டு மணிபார்க்க வேண்டாம் என்று இராக்கியர்களுக்கு ஒரு பொது அறிக்கை விட்டால் போயிற்று. ஜனநாயகத்தை நிலைநாட்டுவது எவ்வளவு சிக்கலான செயலாக இருக்கிறது என்பது அமெரிக்காவுக்குத்தான் தெரியும்.

சூடுபட்டுத்தான் அமெரிக்கர்களிடமிருந்து ஜனநாயகத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற்ய் இராக்கியர்களும் ஆப்கானிகளும் விரைவிலேயே தெரிந்துகொள்லக்கூடும்.