நவீன உலகின் முக்கியமான உடல்நலப் பிரச்சினையாக அறியப்படுவது கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு. உடல்நலத்தைப் பேண உதவும் உணவுப்பிரிவுகளில் (மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து) கொழுப்பு முக்கியமான ஒன்று. இதில் நல்ல கொழுப்பு/தீய கொழுப்பு என இரண்டு வகைகள் இருக்கின்றன. Low Density Lipoprotein (LDL) – தீய கொழுப்பு எனவும், High Density Lipoprotein (HDL) நல்ல கொழுப்பு என்றும் அவற்றின் உடலியல் செயற்பாடுகளினால் அறியப்படுகின்றன.

நல்ல உணவுப் பழக்கத்தின் அடிப்படை HDLLDL வகை கொழுப்புகளைக் குறைப்பதில் இருக்கிறது. HDLLDL அளவைக் குறைக்க உதவும் பத்து உணவுகளென fightcholesterol.org என்ற தளம் பின்வருவனவற்றைத் தருகிறது.

  1. ஷித்தாக்கே காளான்கள் (எனக்கு மிகவும் பிடித்த ஒன்று)
  2. வால்நட்
  3. சமைக்காத சோயா
  4. ப்ளூபெர்ரி
  5. சால்மன் மீன்
  6. பூண்டு
  7. அவொகாடோ
  8. கருப்புப் பயறு
  9. ஆப்பிள்
  10. கரும்பச்சை, இலை உணவுகள்

எதேச்சையாகப் பார்வையிட நேர்ந்த அந்தத் தளத்தில் கொழுப்பு சம்பந்தமான பல அற்புத தகவல்களும் இருக்கின்றன.

powered by performancing firefox