• இயற்கையின் விளையாட்டு

  by  • June 27, 2007 • Video • 9 Comments

  பல சமயங்களில் நிஜத்தில் நடப்பை திரைப்படங்களைக் காட்டிலும் நம்ப முடியாதனவாக இருக்கும். இந்த வனவிலங்குகள் படம் அப்படிப்பட்ட ஒன்று. (எனக்குத் தெரிந்த வகையில் இதில் வெட்டியொட்டும் சித்துவேலைகள் எதுவுமில்லை. வேறு யார் கண்ணுக்காவது புலப்பட்டால் சொல்லுங்கள்). படம் எடுத்தவர்கள் கையில் அதிஉயர் நுட்பம் கொண்ட கருவிகள் இருந்திருந்தால் இது இன்னும் அற்புதமாக இருந்திருக்கும்.

  9 Responses to இயற்கையின் விளையாட்டு

  1. kannan
   June 27, 2007 at 9:04 am

   By seeing this one thing was proven.If Tamil buffalows join together like this then the bramin lions has to run.So tamils are buffalows.

  2. வடுவூர் குமார்
   June 27, 2007 at 9:06 am

   அப்பாடியோவ்!!!
   ஒன்று பட்டால் உண்டு வாழ்வு... அப்பட்டமாக மொழியில்லாமல் சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது.
   நிஜமான திரில்லர்.

  3. வெங்கட்
   June 27, 2007 at 11:17 am

   கண்ணன் - அப்படியே முதலை யாருங்கறதையும் சொல்லிடுங்க :)

   குமார் - சிங்கத்தையும் எருமையையும் விடுங்க. சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கும் முதலை இயற்கையின் ஒரு அற்புதமல்லவா?

  4. June 27, 2007 at 11:24 am

   மிருகங்களில் காணப்படும் ஒற்றுமை மனிதர்களுக்கு உண்டா?
   ஆச்சர்யம் தான் .. எருமை மாடுகள் எல்லாம் ஒன்டா சேர்ந்து வந்திருக்கு.
   இனி யாரும் எள்ளை எருமை மாடு என்டு திட்டினா இதை அவங்களுக்கு அனுப்பிடுவன்
   :-)

  5. June 28, 2007 at 4:01 am

   இதை யூ டியூப் மூலம் பார்க்க முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு சொல்லியுள்ளேன்.

  6. June 28, 2007 at 5:11 am

   இதில் அதிகம் கவனத்தைக் கவர்ந்த விஷயம், திரும்ப படையெடுத்து வந்த எருமைக்கூட்டம் சிங்கங்களை கொல்லவோ, குத்திக்குதறிப் பழிவாங்கவோ இல்லை. கன்றை மீட்கும் தமது இலக்கு முடிந்தவுடன் சிங்கங்களைத் துரத்தி விடுகிறது. அவ்வளவுதான்.

   இதுதான் இயற்கைச் சமனிலை.

  7. June 30, 2007 at 6:28 pm

   சிங்கங்கள் பசியோடு இருக்க வேண்டியதாகி விட்டனவே..

   எருமைகள் (water buffaloes) எண்ணிக்கையில் அதிகமாய் உள்ளன; சிங்கங்கள் மோர்ச்சாதம் சாப்பிட்டு உயிர் வாழ முடியாது,
   எருமைத்தயிர்+பழையது+வடு மாங்காய் உன்னதமானது, தேவாமிர்தத்தையும் தோற்கடிக்கக்கூடியது என்றாலும்.

   எருமைகள் மாமிசம் சாப்பிடற பிராணிகளாய் இருந்தால் சிங்கக்கறி சாப்பிட பார்த்திருக்கலாம்.. சரிவராவிட்டால் - அடுத்து, ஒளித்துண்டு எடுக்கற ஆசாமிகளை சிங்கங்களும்,எருமைகளும் ஒன்று சேர்ந்து குறி வைத்திருக்கலாம்; முட்டாள் முதலை மட்டும் எச்சிலை வழிய விட்டுக் கொண்டு கிடக்க வேண்டியிருக்க வேண்டும்.. இப்படி ஒரு ஒளித்துண்டு வருமோ..?

   நிற்க.

   30 வருடத்து பழம் நினைவை அசைபோட வைத்தது ஒளித்துண்டு. அதற்கு ரொம்ப நன்றி.

   * 3/4வது படிக்கறப்ப (உத்தேசமாய்) கோடை விடுமுறைக்கு கிராமத்திற்கு போயிருந்த போது, எருமை கன்றுகுட்டி ஒன்று எனக்குச் செல்ல பிராணியானது. கொஞ்சம் வெளுத்த எருமை; albino மாதிரி இருக்கும். என் மீதும் அதற்கு ஒரு வாஞ்சை இருந்ததாக ஞாபகம். செய்வது என்னவென்று தெரிந்தே வாலை ஒரு முறை வேகமாக இழுத்துப் பார்த்தேன். என்னை மணல்சாலையில் இழுத்துக் கொண்டோடி குளத்திற்குள் தாவியது. கயிறை விட்டுத் தொலைக்காமல், இடிப்பிலிருந்த அரைக்கால் சட்டை நழுவ, பார்த்துக் கொண்டிருந்த மாமாக்களெல்லாம் சிரிக்க சிரிக்க நானும் குளத்திற்குள் பின் தொடர்ந்தேன்.

   காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு திரும்ப ஊருக்கு போன போது கன்றுகுட்டியை காணவில்லை. கணைப்பான் நோய் வந்து செத்துப் போயிருந்தது.

   [ * 1969-70 வருடம் | புரட்டாதி மாதம் | உடையார் குளம்/திருமீயச்சூர் கிராமம், பேரளம் வழி - திருவாரூர் மாவட்டம் ]

  8. Radha
   July 1, 2007 at 1:34 am

   உங்களை எட்டு விளையாட்டுக்கு அழைச்சிருக்கேன் முடிஞ்சப்போ எழுதுங்க......

  9. kavi
   July 1, 2007 at 11:58 am

   venakt,
   romba naala music pathi serious'a yedhuvum padhivu potta madiri theriyalaye? hope u remember about "eera vizhi kaaviyangal" album... i am waiting...

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *