ஒருவழியாக சதாம் ஹுசேனைத் தூக்கில் தொங்கவிட்டாகியது. இன்னும் கொஞ்சம் சில்லரை உபதேவதைகளையும் கடந்த வாரத்தில் கழுவேற்றியாகிவிட்டது. ஜனநாயகக் காவலன் அமெரிக்காவின் அடுத்த நகர்வு என்ன?

சந்தேகமில்லாமல் எண்ணெய்க் கிணறுகளைக் காபந்து செய்துகொள்வதுதான். அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இன்னும் 30,000 படைவீரர்களை ஈராக் அனுப்ப அனுமதி கேட்டிருக்கிறார். அமெரிக்க செனட் வெளியுறவுக் கொள்கைகள் குழு காண்டலீஸா ரைஸை வரவிருக்கும் ஈராக்கிய ஹைட்ரோகார்பன் சட்டங்கள் குறித்து துழாவியிருக்கிறது. ஈராகின் இந்தச் சட்ட வரைவு இரகசியம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ரைஸ் அம்மையார் அதுபற்றி எனக்கு எல்லாம் தெரியும்; அமெரிக்காவின் நலன்களுக்கு முற்றிலும் சாதகமாகவே இருக்கும் என்று செனட் கமிட்டியிடம் உறுதியளித்திருக்கிறார்.

முப்பது வருடங்களுக்குக் குறைவில்லாமல் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு ஈராக்கிய உற்பதியில் பங்களிக்க இந்தச் சட்டம் வழிவகுப்பதாக தி இண்டிபெண்டென்ட் நாளிதழ் எழுதியிருக்கிறது.

Now, unnoticed by most amid the furore over civil war in Iraq and the hanging of Saddam Hussein, the new oil law has quietly been going through several drafts, and is now on the point of being presented to the cabinet and then the parliament in Baghdad. Its provisions are a radical departure from the norm for developing countries: under a system known as “production-sharing agreements”, or PSAs, oil majors such as BP and Shell in Britain, and Exxon and Chevron in the US, would be able to sign deals of up to 30 years to extract Iraq’s oil.

PSAs allow a country to retain legal ownership of its oil, but gives a share of profits to the international companies that invest in infrastructure and operation of the wells, pipelines and refineries. Their introduction would be a first for a major Middle Eastern oil producer. Saudi Arabia and Iran, the world’s number one and two oil exporters, both tightly control their industries through state-owned companies with no appreciable foreign collaboration, as do most members of the Organisation of Petroleum Exporting Countries, Opec.

இனியென்ன கொண்டாட்டம்தான். வாழ்க ஜனநாயகம்.