பிபிஸி தளத்தில் வெளியான இந்தச் செய்தியின்படி இன்றைக்கு டோனி ப்ளேர் ஈராக்கிலிருந்து பிரிட்டனின் படைகள் வெளியேறுவது குறித்த கால அட்டவணையை அறிவிக்கவிருக்கிறார். இன்னும் இது அதிகார்வபூர்வமாக நடக்கவில்லை; எனினும் இதில் அதிகார்வபூர்வ அறிவிப்பு மாத்திரமே மீதமிருக்கிறது என்று நம்புகிறேன். எனவே இந்த அறிவிப்பு வெளியாகிவிட்டதாகவே கொள்ளலாம்.

இது மிகவும் முக்கியமான நிகழ்வு. ஏனென்றால் கடந்த வாரம்தான் வழக்கம்போல ஜார்ஜ் புஷ் மார்தட்டிக்கொண்டார். அவருடைய திட்டத்தின்படி ஈராக்கிற்கு இன்னும் கூடுதல் 21,500 படைவீரர்களை அனுப்பப் போகிறார். 9/11க்குப் பிறகு முதல் முறையாக பிரிட்டனும், அமெரிக்காவும் இரண்டு வேறு திசைகளில் பயணிக்கவிருக்கின்றன. இது வேறெந்த விடயத்தையும்விட அமெரிக்கப் பிரச்சாரங்களுக்கு மிகவும் இடைஞலாக இருக்கப்போகிறது.

பாஸ்ரா பிரதேசத்தில் அமைதி நிலவுவதாக ப்ளேர் சொல்வது ஜல்லியடி. அங்கே நடக்கும் கலவரங்கள் எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை. ஆனால், பிரிட்டனின் பொதுமக்கள் கருத்து தாளமுடியாத அளவில் ஈராக்கியப் போருக்கு எதிராக அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை. தனக்கு ஒவ்வாத போதும், அமெரிக்கர்களின் அழுத்தங்களை மீறியும்தான் பிளேர் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார். இது அமெரிக்க பொதுஜனக் கருத்தையும் பாதிக்கும் என்பது நிதர்சனம்.