இன்றைய NewIndPress -ல் இளையராஜாவின் பேட்டி வெளியாகியிருக்கிறது.

இப்படியாகத் தலையுமில்லாமல் வாலுமில்லாமல் நோக்கமும் இல்லாமல் தெளிவுமில்லாமல் ஏன்தான் பேட்டியெடுத்துத் தொலைகிறார்களோ என்று தெரியவில்லை.

அச்சுப்பதிப்பில் இது எப்படி வந்திருக்கிறது என்று தெரியவில்லை. முப்பெத்தெட்டாம் பக்கத்து மூலை கணக்காக ஏதாவது வரிவிளம்பரங்களுக்கிடையே மிஞ்சிப்போன வெற்றிடத்தை நிரப்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

* * *

சீனி கம் பாடல்கள் கம்போஸிங்க் பற்றி நேரம் கிடைக்கையில் கொஞ்சம் எழுத வேண்டும்.