Archive for July, 2006

கண் குறைபாடுகளுக்கான லேசர் சிகிச்சை செயல்படும் விதம்

நம் நண்பர்கள் செல்வராஜ், மூக்கு சுந்தர் இருவரும் லேசிக் சிகிச்சை செய்துகொண்ட தங்கள் அனுபவங்கள் குறித்து எழுதியிருந்தார்கள். இவர்கள் பதிவில் தோழி ஜெயஸ்ரீ-யும் அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். செல்வராஜின் விரிவான அனுபவப் பகிர்ந்தலையொட்டி கண்களின் குறைபாடுகள் (குறிப்பாக கிட்டப்பார்வை) நீக்க லேசர்கள் கொண்டு செய்யப்படும் லேசிக் சிகிச்சை செயல்படும் விதம் பற்றி எழுத வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நண்பர் கேட்டிருந்தார். நீண்ட நாட்களாக ஒத்திப்போட்டுக்கொண்டே வந்தேன். நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் [...]


நண்பர் உமர் மறைவு

என்னால் சமீப காலமாக அதிகம் வலைப்பதிவுகளைப் படிக்க முடிவதில்லை. எழுதுவதும் நெருக்கியடிக்கும் வேலைகளுக்கிடையே சாத்தியமில்லாமல் இருக்கிறது. இன்று எதேச்சையாக தமிழ்ப்பதிவுகளைப் படிக்கலாம் என்று ஆரம்பித்தபொழுது இந்த அதிர்ச்சிதரும் செய்தி கண்ணில்பட்டது.
தேனீ யுனிகோட் என்ற எழுத்துருவை வடித்து இலவசமாகத் தந்த நண்பர் திரு. உமர் மறைந்துவிட்டதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. சொல்லமுடியாத வேதனை மனதைப் பிழிகிறது. இது சற்றும் எதிர்பாராத விதத்தில் வந்து தாக்கியிருக்கும் செய்தி. அவரைப் பிரிந்து தவிக்கும் அவரது உறவினர்கள், [...]