சொந்த தளத்திற்கான ஜிமெயில்

நான் கடந்த நான்கு வருடங்களாக என்னுடைய வீட்டிலிருந்து என் தளத்தை நிர்மாணித்து முற்றாக இயக்கி வருகிறேன்.  ஒரு பழைய பெண்டியம் 2 கணினியில் லினக்ஸ் இயக்குதளத்தில் இது இயங்குகிறது.  இது என் domesticated onion தளத்தை வழங்குவதுடன், என்னுடைய சொந்த கோப்பு பறிமாற்றியாகவும் (FTP server)  என் வீட்டிற்குள்ளே  எந்த அறையிலிருந்தும் என் 70 கிகா பைட்டுக்கு மேற்பட்ட இசை நூலகத்தைப் பெற வசதியான இசை வழங்கியாகவும் (Music Streaming server) செயல்படுகிறது.

இருந்தபோதும் நான் இதில் மின்னஞ்சல் சேவையை முயற்சித்தபொழுதெல்லாம் தோல்விதான் கிட்டியது.  என்னுடைய அகலப்பாட்டை வழங்கு நிறுவனம் மின்னஞ்சல் வழங்குவதை மறிக்கிறது.  ஒருவகையில் எரிதத்தை (spam) கட்டுப்படுத்த நல்ல முயற்சிதான் என்றாலும் சொந்த தளத்தை வைத்துக்கொண்டு அதில் மின்னஞ்சல் முகவரி பெற முடியாமலிருந்தது வருத்தம்தான்.

இப்பொழுது புதிதாக கூகிள் ஒரு அஞ்சல் சேவையைத் தருகிறது. இதன் மூலம் உங்கள் சொந்த தளம் இருந்தால் அதன்மின்னஞ்சல் வழங்கு பொறுப்பை கூகிளிடம் ஒப்படைக்கலாம்.  25 மின்னஞ்சல் முகவரிகள் கிடைக்கின்றன.  இன்னும் பீட்டா சோதனையில் இருக்கும் இந்தச் சேவைக்கு சென்ற வாரம் விண்ணப்பித்துக் காத்திருந்தேன்.  நேற்று அனுமதி வந்தது.   அடுத்த ஐந்து நிமிடத்தில் என் தளத்தில் மின்னஞ்சல் தயார்.  இது முழுக்க முழுக்க ஜிமெயில்-தான் எனவே அதிலிருக்கும் வசதிகள் எல்லாம் இதிலும் உண்டு (நாட்காட்டி உட்பட). சொந்த தளம் இருப்பவர்கள் இதை முயற்சித்துப் பார்க்கலாம்.

இனி venkat {at} domesticatedonion {dot} net  முகவரியைத் தொடர்ந்து பயன்படுத்த உத்தேசம்.

பல நாட்களாக தமிழ்மணத்தில் என் இடுகைகளைப் புதுப்பிக்க முடியாமல் இருந்ததும் சரியாக்கியிருக்கிறேன் (என்று நினைக்கிறேன்).

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

So, your mails are not yours anymore. Good luck archiving all mails from your Gmail folders locally :)

வெங்கட், அருமையான இடுகைகளை இடும் நீங்கள் தமிழ்மணத்தில் மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

enna pannuviingkalo ededo panringka

Leave a comment

(required)

(required)