இட ஒதுக்கீடு - இரைச்சல்களுக்கிடையில்
அருளின் பதிவு வழியாக இடதுசாரிகளின் இந்த நிலைப்பாடு தெரியவந்தது.
வி.பி.சிங் காலத்தில் இட ஒதுக்கீட்டு எதிராக இருந்த என் மனநிலையையும் இன்று அர்ஜுன் சிங் காலத்தில் மாறிவரும் என் எண்ணங்களையும் நினைத்து எனக்குள்ளே சிரித்துக் கொள்கிறேன்.
சமீபத்திய பதவி உயர்வும் அது தொடர்பான கூடுதல் வேலைகளும் விரிவாக எழுத எனக்கு நேரமளிப்பதில்லை.
இந்த முறை இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என்ற நம்பிக்கையிருக்கிறது. அதன் கூடவே சில தெளிவான நடைமுறைகளும் வகுக்கப்பட வேண்டும். இடதுசாரிகளின் பரிந்துரை இந்த வகையில் மிகவும் முக்கியமானது. இனி, தொடர்புடையது என்பதால் அருளின் பதிவில் நான் எழுதிய கருத்து;
அருள் - சற்றேறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னால் நான் இந்த Deliverables and Exit Strategy இரண்டையும் பற்றி எழுதப்போக மானாவாரியாக தர்ம அடி வாங்கினேன். (ஏன் தர்ம அடி வாங்கினேன் என்று என்னைப் பெத்தவளைத்தான் கேட்க வேண்டும்). நீங்கள் தர்ம அடி வாங்காமலிருக்க பரமண்டலத்திலிருக்கும் பரமபிதா இரட்சிக்க இறைஞ்சுகிறேன்.
கடந்த இரண்டு வருடங்களாக பல High Tech start-up களில் பங்கெடுத்து வருகிறேன். எந்த ஒரு ரிஸ்க் எடுக்கும் முயற்சிகளிலும் Checks and Balances மிக முக்கியம் என்பதை அனுபவ ரீதியாக அறிந்து வருகிறேன்.
ஐம்பது வருட ஜனநாயகம் என்பது பல நூற்றாண்டு அடிமைத்தனத்துடன் ஒப்பிட்டால் இன்னும் இந்தியா ஒரு Start-up company தான். இதில் கண்கொத்திப் பாம்பாக முன்னேற்றத்தை அளவிடுவதும் போக்குகளை மாற்றியமைப்பதும் முக்கியம்.
சலுகை என்று அளிக்கும் பொழுது அதனுடன் கால வரையறையை பிணைக்க வேண்டியது முக்கியம். அது சில நூறு ஆண்டுகளாவது இருந்துவிட்டுப் போகலாம். ஆனால் பத்தாண்டுக்கு ஒருமுறை திட்டத்தின் செயல்பாட்டைக் கணக்கிடும் வசதியும் நடைமுறைகளைச் சற்று தளர்த்தியும் மாற்றியும் அமைக்கும் வசதியும் வேண்டும்.
–
இட ஒதுக்கீடு என்பது அரசியல்வாதிகளால் வெறும் பசிக்குச் சோறிடும் தர்மமாக இல்லாமல் சமைக்கக் கற்றுக்கொடுக்கும் உன்னதமாக இருக்க வேண்டும். பிச்சையிடும்பொழுது பெறுபவனைக் காலமெல்லாம் காலடியில் வைக்க வேண்டும் என்ற அகந்தைதான் நிலைக்கும். கைகொடுத்துத் தூக்கிவிட்டால் எல்லோரும் சமநிலையில் இருப்போம்.
கைகொடுக்க வேண்டியது பள்ளத்தின் மேலிருப்பவனின் கடமை.
(மற்றபடி இங்கே தகுதி பாதிக்கப்படும் என்ற கூச்சலெல்லாம் ஜல்லியடிதான். இவற்றை முற்றாகப் புறக்கணிப்பது நல்லது. செயல் திட்டங்களில் மாத்திரமே கவனம் தேவை).
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
Comments
வெங்கட்
வாழ்க! அதுதான் ஆளையே சில நாளாக்காணமா.
வடக்கே நிலைமை அவ்வளவு சீக்கிரம் சரியாகும்னு தோணல .
அருள்
.
பதவி உயர்வா… வாழ்த்துக்கள்; சால்ஜாப்பு சொல்லாமல் தொடர்ந்து நேரம் கண்டுபிடித்து எழுதவும் வாழ்த்துக்கள் ![]()
>> மற்றபடி இங்கே தகுதி பாதிக்கப்படும் என்ற கூச்சலெல்லாம் ஜல்லியடிதான். இவற்றை முற்றாகப் புறக்கணிப்பது நல்லது. செயல் திட்டங்களில் மாத்திரமே கவனம் தேவை >>
பதிவுக்கு நன்றி வெங்கட் அவர்களே! ![]()
(ஹையா! பதிவுக்குத் தொடர்பான முதல் பின்னூட்டம் என்னுதுதான்!
)
Venkat,
Congrats. U shd find time and write in blog. I always look forward to ur views. In this issue i agree that there shd be a mechanism that filters the creamy layer from availing the benefits of reservation. BTW the 2 series article by Ygendra yadav in hindu shows how to do that effectively.

adhu kedakkattum. padhavi uyarvukku congrats