• Archive for May, 2006

    இட ஒதுக்கீடு – பதிலும் சில விளக்கங்களும்

    by  • May 24, 2006 • பொது • 11 Comments

    என்னுடைய முந்தைய பதிவில் இட ஒதுக்கீடு செயலாக்க வழிமுறைகளைப் பற்றிப் பேசும்பொழுது பயன்பெற்றவர்களை அதிலிருந்து வெளியேற்றும் வழியையும் ஆராய வேண்டும் என்று சொல்லியிருந்தேன். இதைப் பற்றிப் பேசும் “என் உளவியலை” கார்த்திக் விமர்சித்திருந்தார். அவருக்குப் பதிலாக இது. {இந்தப் பதிவை நான் எழுதுவதால் நான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் என்று தயவு செய்து நினைக்க வேண்டாம்.   இதன் நடைமுறைகளின் ஒரே ஒரு கூறை மட்டுமே நான் விமர்சிக்கிறேன். சொல்லப்போனால் கார்த்திக் இதை எழுப்பியிராவிட்டால் நான் இதைப் பற்றி [...]

    Read more →

    சொந்த தளத்திற்கான ஜிமெயில்

    by  • May 22, 2006 • அறிவியல்/நுட்பம், பொது • 3 Comments

    நான் கடந்த நான்கு வருடங்களாக என்னுடைய வீட்டிலிருந்து என் தளத்தை நிர்மாணித்து முற்றாக இயக்கி வருகிறேன்.  ஒரு பழைய பெண்டியம் 2 கணினியில் லினக்ஸ் இயக்குதளத்தில் இது இயங்குகிறது.  இது என் domesticated onion தளத்தை வழங்குவதுடன், என்னுடைய சொந்த கோப்பு பறிமாற்றியாகவும் (FTP server)  என் வீட்டிற்குள்ளே  எந்த அறையிலிருந்தும் என் 70 கிகா பைட்டுக்கு மேற்பட்ட இசை நூலகத்தைப் பெற வசதியான இசை வழங்கியாகவும் (Music Streaming server) செயல்படுகிறது. இருந்தபோதும் நான் இதில் [...]

    Read more →

    இட ஒதுக்கீடு – இரைச்சல்களுக்கிடையில்

    by  • May 17, 2006 • பொது • 9 Comments

    அருளின் பதிவு வழியாக இடதுசாரிகளின் இந்த நிலைப்பாடு தெரியவந்தது. வி.பி.சிங் காலத்தில் இட ஒதுக்கீட்டு எதிராக இருந்த என் மனநிலையையும் இன்று அர்ஜுன் சிங் காலத்தில் மாறிவரும் என் எண்ணங்களையும் நினைத்து எனக்குள்ளே சிரித்துக் கொள்கிறேன். சமீபத்திய பதவி உயர்வும் அது தொடர்பான கூடுதல் வேலைகளும் விரிவாக எழுத எனக்கு நேரமளிப்பதில்லை. இந்த முறை இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என்ற நம்பிக்கையிருக்கிறது.  அதன் கூடவே  சில தெளிவான நடைமுறைகளும் வகுக்கப்பட வேண்டும்.  இடதுசாரிகளின் பரிந்துரை இந்த [...]

    Read more →

    சிலிக்கன் கிராபிக்ஸ் நிறுவனம் திவால்

    by  • May 8, 2006 • அறிவியல்/நுட்பம் • 1 Comment

    இன்றைய வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வந்த செய்தியைப் படித்தவுடன் இனம் புரியாத வருத்தமாக இருக்கிறது. கணினி வரைவியல் துறையில் பல சாதனைகளைப் புரிந்தது சிலிக்கன் கிராபிக்ஸ் நிறுவனம். ஹாலிவுட் படங்களில் வரைவியல் கலையை வளர்த்தெடுத்ததில் அதற்கு நிறையவே பங்குண்டு. இதைப் போலவே இராணுவத்தில் விமான சோதனையோட்ட சலனப்படங்களையும், பயிற்றுவித்தலுக்கான கருவிகளையும் வடிக்க சிலிக்கன் கிராபிக்ஸின் அற்புதமான கணினிகள் முக்கிய காரணம். இன்னும் மூலக்கூறு உயிரியல் துறையில் உயிர்வேதிப் பொருட்களின் சிக்கலான வடிவங்களைத் துல்லியமாகக் காட்டி புரிய வைத்ததிலும் [...]

    Read more →