விபரீத விளம்பரம்
சில சமயங்களில் ரொம்ப கிரியேட்டிவாக விளம்பரங்கள் செய்கிறோம் என்று எண்ணிக் கொண்டு அசட்டுத்தனமான சரக்கையும் சேர்த்துவிடுகிறார்கள்.
இன்றைக்கு Slate தளத்தின் வழியாக Dunkin’ Donuts -ன் இந்த விளம்பரத்தைப் பார்க்க நேரிட்டது. அமெரிக்காவை அவர்களுடைய காப்பிதான் இயக்குகிறது என்று தொனிக்கும்படியாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறார்கள். சுமாராக இருக்கிறது. போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லோரும் கையில் ஒரு காப்பிக் கோப்பையுடன் திரிகிறார்கள். கடைசியில் பாதாள சாக்கடையிலிருந்து வெளிவரும் அன்பரும் கையில் காப்பி ஏந்தியிருக்கிறார்.
சிலவற்றை சில சூழல்களில் நன்றாக இரசிக்கலாம். அந்த வகையில் டங்கின் டோனட்டின் காப்பிக்குச் சாக்கடை தேவை போலிருக்கிறது.
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

வறியவர்களின் வாயை மணக்க வைக்கும் வடிநீரை வெறுப்பதற்கு என்ன காரணமோ?
ஸ்லேட் கட்டுரை முழுக்கப் படித்தீரா? விளம்பரத்தின் டார்கெட் ஆடியன்ஸ் யார் என்று சொல்லி இருக்கிறார்களே…