க்ரீன்பீஸ் நிறுவுனர் அணுசக்தியைப் பரிந்துரைக்கிறார்

சில நாட்களுக்கு முன் நான் அணுசக்தி மறுமலர்ச்சி காலம் என்ற தலைப்பில் உலகம் முழுவதும் சக்தி தேவைக்கு அணுப்பிளவு பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவது குறித்து எழுதியிருந்தேன். அணுசக்தி என்றாலே அழிவு என்றும் அது சூழலுக்கு ஒவ்வாதது என்றும் பொய்ப்பிரச்சாரங்கள் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகின்றன. விஷயம் தெரிந்தவர்கள் அணுசக்தியின் தேவையை ஒத்துக் கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்பொழுது க்ரீன்பீஸ் சூழியல் குழுவைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவரான பாட்ரிக் மூர் இன்றைய வாஷிங்க்டன் போஸ்ட் நாளிதழில் அணுசக்தியின் உன்னதத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.

இது முக்கியமான கட்டுரை. அணுசக்தியின் மீதான தவறான புரிதலுக்கு க்ரீன்பீஸின் அறிவியல் உண்மை மறுக்கப்பட்ட பொய்ப்பிரச்சாரம் மிக முக்கியமான காரணம். ஒரு காலத்தில் இந்தக் குழுக்கள் அலாஸ்கா துவங்கி நியூஸிலாந்துவரை அணு சாதனங்களுக்கு முன்னால் மறியல்கள் செய்திருக்கிறார்கள். இன்றைக்கு பாட்ரிக் மூர் அணுசக்தியைப் பரிந்துரைத்து கட்டுரை எழுதுகிறார் என்றால் அது அணுசக்தியின் தவிர்க்க முடியாமையைக் காட்டுகிறது.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

அணுசக்தி தவிர்க்க இயலாதது என்பதில் ஐயமில்லை ஆனால் அதன் கழிவுகளை அப்புறப்படுத்தலும் மீள்சுழற்சி செய்வதிலும் இன்னும் பிரச்சினை இருக்கிறது எங்கிறார்களே. ஒரு பூகம்பம் வந்தால் அது சமாதியிலிருந்து விழித்துக்கொள்ளும் (கொல்லும்?) அபாயம் இருக்கிறதாமே, உன்மையா?

அணுசக்தி எந்தவிதமான பிரச்சினைகளுமற்ற ஒரு தேவதூதன் என்றில்லை. சக்தி தேவை நம்முன்னே இருக்கும் தீர்க்கவியலாத பெரும்பிரச்சினை. இதன் தீர்வுகளுக்குள்ளே அணுசக்திதான் இப்பொழுது ஆகக்கூடி நடைமுறை சாத்தியமானதாக இருக்கிறது. (குறைந்தபட்ச் சூழியல்ல் பிரச்சினைகளுடன்).

கட்டாயமாக செலவிடப்பட்ட எரிபொருள்களைச் சேமிப்பது அணு உலைகளுக்கு முன்னுள்ள மிகப் பெரிய சவால். இதில் கவனம் அவசியம். ஆனால் அணு உலைகளின் வடிவமைப்பு முன்னேற முன்னேற நமக்கு இதற்கான தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்வரை அணுசக்தி == அழிவு என்று பிரச்சாரப்படுத்தப்பட்டது இனிமேலும் செல்லாது என்பது க்ரீன்பீஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்குள்ளே இருக்கும் ‘சூழியல் தீவிரவாதிகளுக்கு’ நிதர்சனமாகியிருக்கிறது.


Click here
to learn about messy work due to carlessnes or lack of regulations.

I do believe Nuclear energy should be cosidered, but it should be handled properly. All costs should be accounted for. Personally at this moment the energy produced from nuclear costs more than fossil fuels.

Leave a comment

(required)

(required)