கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை திரைப்படமாகிறது

ramanujan.jpg

ஏதோ ஒன்றுக்காகத் தேடிக்கொண்டிருந்தபொழுது இந்த தவறவிட்ட பிபிஸி செய்தி கண்ணில்பட்டது.

கணிதமேதை ராமானுஜனின் வரலாற்றைத் திரைப்படமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  பிரிட்டிஷ் இயக்குநர் ஸ்டீஃபன் ஃப்ரையும்  இந்தியர் தேவ் பெனகல்-ம் சேர்ந்து இந்த முயற்சியை மேற்கொள்கிறார்கள்.   இது மிகத் துவக்க நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

சென்ற வருடம் The Indian Clerk  என்ற தலைப்பில் புனைவாக்கம் செய்யப்பட்ட ராமானுஜனின் வரலாறு புத்தகமாக வெளிவரவிருந்து இதுவரை வந்ததாகத் தெரியவில்லை.   நியூயார்க் க்வீன்ஸ் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறை பேரா. இரா ஹாப்ட்மன் ராமானுஜனுக்கும் ஹார்டிக்கும் இடையில் இருந்த நட்பையும் முரண்பாடுகளையும் முன்வைத்து 2003ல்  Partition என்ற மிகப் பொருத்தமான தலைப்பில் நாடகம் ஒன்றை இயக்கினார்.   பலத்த வரவேற்பு பெற்ற இந்த நாடகத்தை நண்பர் தூள் பாலாஜி தமிழில் மொழியாக்கம் செய்து இயக்கினார். இந்த நாடகம் சான்பிரான்ஸிஸ்கோ தமிழ் மன்றத்தில் அரங்கேற்றப்பட்டது.   தமிழ் நாட்கம் பற்றிய தளம் இங்கே.

இதற்கு உயரமும் வெளுப்புமான சல்மான்/அமீர்/ஷாருக்/அஜய் தேவ் இத்யாதி கான்களை விடுத்து ஒரு அக்மார்க் தென்னிந்த கருப்பர் கதாநாயகனாகத் தேவைப்படுவார்.   எனக்குத் தெரிந்தவரையில் இப்பொழுது நம்மூரில் எந்த நடிகரும் இந்தப் பாத்திரத்தைச் செய்ய பொருந்தமாட்டார்கள்.  யாராவது புதுமுகம்தான் வேண்டும்.   இல்லை, உங்களில் யாருக்காவது ராமானுஜனின் பாத்திரத்திற்கு இந்த நடிகர் பொருந்துவார் என்று தோன்றுகிறதா? எழுதுங்கள்.

பின்னணி இசைக்கு முழுமனதுடன் இளையராஜாவைப் பரிந்துரைப்பேன்.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

http://www.ibnlive.com/article.php?id=7069&section_id=8
நானும் பார்த்தேன் ஐபிஎன்னில், அக்மார்க் தென்னிந்திய கருப்பர்.
கூத்துப்பட்டறை புகழ் பசுபதி சரியா வருவார்னு நினைக்கிறேன்.

மோகன்தாஸ் - பசுபதி கொஞ்சம் புஜபல பராக்ரமத்துடன் வீரம் ததும்பும் முகம். இங்கெ கொஞ்சம் உருண்டையா, கறுப்பா, குள்ளமா தூங்கிவழியும் (எப்பொழுதும் கணக்கு பற்றி கனவுகாணும்) முகம் தேவை. :)

Venkat, have you seen Malgudi Days? adhOda hero paiyan, I think his name was Manjunath, avanaip pOttaa correctA irukkum. ippO eppadi iruppaannu theriyallai.

[...] கணித மேதை ராமாநுஜனை வைத்து ஒரு திரைப்படம் உருவாகிறது. வெங்கட் எழுதுகிறார். ராமாநுஜன் பாத்திரத்துக்கு பொருத்தமான இந்திய நடிகர் யார்? [...]

கவலை வேண்டாம், தேவ் பெனகல் இயக்கம், ஒரு மராட்டியரோ ஒரு வங்க தேசத்து நடிகரையொ பிடித்துவிடுவார்.

ஷங்கர்.

I expect a post on “Nano Technology”. Can u?

தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நகைச்சுவை நடிகர் செந்தில் சரியாக இருப்பாரா? அவரை விட பொருத்தமான நபரை, தமிழ் திரையுலகில் என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.

ஏ.ஆர்.ரகுமான் நிச்சயமாகப் பொருத்தமான நபராக இருப்பார். என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியும். சிறிது குள்ளம், கருமை நிறம், அமைதி தவழும் முகம். நீங்கள் கேட்கும் அனைத்து அம்சமும் நிறைந்த நபர். அவருக்கும் லண்டனுக்கும் பலத்த தொடர்பும் உண்டு. (படித்தது, வெப்பருக்காக மூன்று ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த அனுபவம்).

மோகன்லால் ஓரளவிற்குச் சரியாக வரலாம்.

நன்றி.

கார்த்திக்குக்கு கொஞ்சம் கறுப்பு பெயிண்ட் அடிச்சா ஒர்க் அவுட் ஆகுமா?

bb - Here is how Manjunath (Nayaker) looks now:

Not too far away. But read my answer to Shursal below.

Shankar - yes, why not a marathi/bengali.

ராம்கி - விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.

ஸ்ருசல் - செந்தில் கிட்டத்தட்ட பொருந்துவார். ரகுமான் கூடத்தான். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ராமானுஜன் வாழ்ந்தது 33 வயது வரைதான். எனவே இதற்கு 20-25 வயதிற்குள் (அந்த நாட்களில்தான் திரைப்படத்தில் நிறைய நேரம் வரும்) யாராவது ஒருவரைப் பிடித்துப் போடுவதுதான் உத்தமம்.

முத்து - கார்த்திக் ஆவுறதில்லை. வெளக்கெண்ணைய்யை வாய்ல வச்சுக்கிட்டுப் பேசுவார். அப்புறம் மூஞ்சில நெறய்ய்ய கெழடு தட்டியாச்சு. :)

[...] ராமானுஜன் வாழ்க்கை வரலாறு à®¤à®¿à®°à¯ˆà®ªà¯à®ªà®Ÿà®®à… à®¤à®²à¯ˆà®ªà¯à®ªà®¿à®©à¯ கீழ் அறிவியல்/நுட்பம் by வெங்கட் நிரந்தரச் சுட்டி • à®…ச்சிடு • à®®à®¿à®©à¯à®©à®žà¯à®šà®²à¯ • à®•ருத்து [...]

[...] ஆயத்தங்கள் நடக்கின்றன. (இது குறித்த முந்தைய பதிவு). இப்பொழுது இந்தப் புத்தகத்தையும் [...]

Leave a comment

(required)

(required)