• Archive for April, 2006

    விபரீத விளம்பரம்

    by  • April 25, 2006 • நகைச்சுவை • 3 Comments

    சில சமயங்களில் ரொம்ப கிரியேட்டிவாக விளம்பரங்கள் செய்கிறோம் என்று எண்ணிக் கொண்டு அசட்டுத்தனமான சரக்கையும் சேர்த்துவிடுகிறார்கள். இன்றைக்கு Slate தளத்தின் வழியாக Dunkin’ Donuts -ன் இந்த விளம்பரத்தைப் பார்க்க நேரிட்டது.  அமெரிக்காவை அவர்களுடைய காப்பிதான் இயக்குகிறது என்று தொனிக்கும்படியாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.  சுமாராக இருக்கிறது.  போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லோரும் கையில் ஒரு காப்பிக் கோப்பையுடன் திரிகிறார்கள்.  கடைசியில் பாதாள சாக்கடையிலிருந்து  வெளிவரும் அன்பரும் கையில் காப்பி ஏந்தியிருக்கிறார். சிலவற்றை சில சூழல்களில் நன்றாக இரசிக்கலாம். [...]

    Read more →

    சீனாவைக் கடவுள் காப்பாற்றுவாராக

    by  • April 24, 2006 • சமூகம் • 2 Comments

    இவ்வார இறுதி வாஷிங்க்டன் போஸ்ட் சீனாவும் வத்திகானும் பரஸ்பர புரிந்துணர்வு, ஒத்துழைப்பு ஒப்பதங்களில் ஈடுபடவிருப்பதாகத் தெரிவிக்கிறது (China-Vatican Edge Toward Accord) இந்த ஒப்பந்தத்தின்படி சீனாவிற்கான கத்தோலிக்க பிஷப்புகள் வத்திகானால் நியமனம் செய்யப்பட்டு சீனாவின் கம்யூனிஸ(!?) தலைமையினால் ஆசிர்வதிக்கப்படுவார்களாம். கத்தோலிக்கத்தை முன்னிருந்தி புரட்சியில் ஈடுபடும் பிஷப்புகள் சீனா அடையாளம் காட்ட வத்திகான் அவர்களை நீக்கும் என்றும் தெரிகிறது. சீனா இரட்சிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. கேட்கவே அற்புதமாக இருக்கிறது. கம்யூனிஸமும் கடவுளும் (கத்தோலிக்கமும்) கைகோர்த்தால் சாத்தியமாகாதது எதுவுமில்லை என்று தோன்றுகிறது.

    Read more →

    தமிழ் லினக்ஸ் குறித்த என் காலச்சுவடு பேட்டி

    by  • April 18, 2006 • அறிவியல்/நுட்பம், சமூகம் • 0 Comments

    தமிழ் லினக்ஸ், தளையறு மென்கலன், திறந்த ஆணைமூலம் குறித்த என்னுடைய பேட்டி ஏப்ரில் 2006 காலச்சுவடில் வெளியாகியிருக்கிறது.  பதிப்பிக்கப்பட்ட பதில்களின் யுனிகோட் வடிவத்தை இங்கே தருகிறேன். ஏற்கனவே எழுதியதைப் போல என் பதில்கள் சுருக்கப்பட்டிருக்கின்றன.   நான் அளித்த பதில்களின் முழுவடிவத்தையும் நாளை இங்கே உள்ளிடுகிறேன். கருத்துக்களை வரவேற்கிறேன்.

    Read more →

    க்ரீன்பீஸ் நிறுவுனர் அணுசக்தியைப் பரிந்துரைக்கிறார்

    by  • April 16, 2006 • அறிவியல்/நுட்பம் • 3 Comments

    சில நாட்களுக்கு முன் நான் அணுசக்தி மறுமலர்ச்சி காலம் என்ற தலைப்பில் உலகம் முழுவதும் சக்தி தேவைக்கு அணுப்பிளவு பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவது குறித்து எழுதியிருந்தேன். அணுசக்தி என்றாலே அழிவு என்றும் அது சூழலுக்கு ஒவ்வாதது என்றும் பொய்ப்பிரச்சாரங்கள் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகின்றன. விஷயம் தெரிந்தவர்கள் அணுசக்தியின் தேவையை ஒத்துக் கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்பொழுது க்ரீன்பீஸ் சூழியல் குழுவைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவரான பாட்ரிக் மூர் இன்றைய வாஷிங்க்டன் போஸ்ட் நாளிதழில் அணுசக்தியின் உன்னதத்தைப் [...]

    Read more →

    தங்க அரளி விஷம் – இலங்கையின் பெரும்பிரச்சினை

    by  • April 13, 2006 • அறிவியல்/நுட்பம், சமூகம் • 0 Comments

    இவ்வாரம் பிபிஸி வானொலியில் வெளியான ஒரு அலசலின்படி  இலங்கையில் மிக முக்கியமான விஷமாக தங்க அரளி அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  நானறிந்த வகையில் தமிழகத்திலும் இது முக்கியமான பிரச்சினைதான். பிபிஸி கட்டுரையால் உந்தப்பட்டு கொஞ்சம் Lancet, British Medical Journal போன்றவற்றில் அரளி குறித்து வாசித்துப் பார்த்தேன். Lancet கட்டுரை இலங்கையில் ஆண்டுதோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சாவுகளுக்கு அரளி விஷம் காரணம் என்று சொல்கிறது. மிக அற்பமான காரணங்களுக்காக்கூட அரளி விதையை அறைத்துக் குடித்து மாண்டுபோகிறார்கள் என்பதைக் [...]

    Read more →

    கனேடிய அரசாங்கம் விடுதலைப்புலிகளைத் தடைசெய்திருக்கிறது

    by  • April 10, 2006 • சமூகம் • 4 Comments

    கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் தொடுக்கப்பட்ட பலமுனை அழுத்தங்களுக்கு இணக்கமாக கனடாவின் தற்பொழுதைய ஆளும் கன்ஸர்வேடிவ் கட்சி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தீவிரவாத இயக்கமாக அடையாளம் கண்டிருக்கிறது. இதன்மூலம் கனேடியர்கள் விடுதலைப்புலிகளுக்கான பிரச்சாரங்களில் ஈடுபடுவதையும், நிதி திரட்டுவதையும் கிரிமினல் குற்றம் என அறிவித்திருக்கிறது. இது கன்ஸர்வேடிவ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியின் செயலாக்கம்தான், இதை ஓரளவு தமிழர்கள் எதிர்பார்த்ததுதான் என்ற போதும் நான் அவதானித்த வகையில் கனேடிய ஈழத் தமிழர்களிடையே இவ்வளவு விரைவாக இது வந்தது அதிர்ச்சியளித்திருக்கிறது. இன்று [...]

    Read more →

    காலச்சுவட்டில் என் பேட்டி

    by  • April 10, 2006 • அறிவியல்/நுட்பம் • 2 Comments

    இந்த மாதக் காலச்சுவடு கணினி சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது.  இதில் லினக்ஸ், தளையறு மென்கலன், திறமூலம் குறித்த என்னுடைய பேட்டி வெளியாகியிருக்கிறது.   சில மாதங்களுக்கு முன்னரே காலச்சுவடு என்னிடம் இதுபற்றி கேட்டிருந்தபொழுதும் இதழை முடிவு செய்ய ஒருசில தினங்களுக்கு முன்னரே எனக்கு இன்னும் ஒரு வாரத்தில் வேண்டும் என்று கேள்விகள் அனுப்பப்பட்டன.   என்னுடைய வேலைப்பளுவின் காரணமாக காலக்கெடு முடிவடைந்தபிறகு மறு இரவில் உட்கார்ந்து பதில்களை எழுதியனுப்பினேன்.  இன்னும் கொஞ்சம் பொறுமையாகச் செய்திருந்தால் நன்றாக வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.   (இதழ் [...]

    Read more →

    கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை திரைப்படமாகிறது

    by  • April 7, 2006 • அறிவியல்/நுட்பம், கலைகள் • 14 Comments

    ஏதோ ஒன்றுக்காகத் தேடிக்கொண்டிருந்தபொழுது இந்த தவறவிட்ட பிபிஸி செய்தி கண்ணில்பட்டது. கணிதமேதை ராமானுஜனின் வரலாற்றைத் திரைப்படமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  பிரிட்டிஷ் இயக்குநர் ஸ்டீஃபன் ஃப்ரையும்  இந்தியர் தேவ் பெனகல்-ம் சேர்ந்து இந்த முயற்சியை மேற்கொள்கிறார்கள்.   இது மிகத் துவக்க நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. சென்ற வருடம் The Indian Clerk  என்ற தலைப்பில் புனைவாக்கம் செய்யப்பட்ட ராமானுஜனின் வரலாறு புத்தகமாக வெளிவரவிருந்து இதுவரை வந்ததாகத் தெரியவில்லை.   நியூயார்க் க்வீன்ஸ் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறை பேரா. இரா ஹாப்ட்மன் [...]

    Read more →

    உயிர்நிழல் கலைச்செல்வன் நினைவு-கூடல்

    by  • April 5, 2006 • இலக்கியம், கனடா • 0 Comments

    நேற்றுதான் கேள்விப்பட்டதைப் போல இருக்கிறது.  உயிர்நிழல் கலைச்செல்வன் மறைந்து பதின்மூன்று மாதங்கள் ஆகப் போகின்றன.   அவரை நினைவுகூறும் வகையில் டொராண்டோ நண்பர்கள் ஒழுங்கமைத்திருக்கும் கூட்டத்தின் விபரங்கள்; இடம் : Mid Scarborough Community Centre,  2467 Eglington Ave E (Near Kennedy Subway) காலம்:   ஏப்ரில் 08, 2006.  சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணி நிகழ்ச்சிகள் கனடா பழங்குடி மக்களின் வாழ்வும் வளமும்,   Simon Ortz, பூர்வகுடி பேச்சாளர்/கவி நினைவு கூரல் – சுசீந்திரன் (ஜெர்மனி) [...]

    Read more →