துரித ஸ்கலிதத்திற்கு துருக்கியர் களிம்பு

துரித ஸ்கலிதம் நம்முரில் நிரந்தர வியாதி. எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இன்றுவரை துரித ஸ்கலிதத்திற்கு நிவாரண விளம்பரம் இல்லாமல் துக்ளக் பத்திரிக்கை வெளிவந்ததே இல்லை. சோ கருணாநிதியைத் திட்டாமல் ஒரு இதழையாவது வெளியிடுவார். ஆனால் சொப்பன ஸ்கலிதம், நரம்புத் தளர்ச்சி, மூட்டுவலி, ஒற்றைத் தலைவலி, செயல்பாட்டில் ஊக்கமின்மை, நடுமுதுகில் வலி, கண் எரிச்சல் போன்ற ஆண்மை குறைவு சமாச்சாரங்களுக்கு ஒரு பக்கத் தீர்வில்லாமல் துக்ளக் ஒரு இதழ்கூட வெளிவராது. (ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா, சிவராஜ் வைத்தியர் குடும்பத்தில் ஆண்மை குறைவை போக்கப் புறப்பட்டிருக்கும் ஆறாவது தலைமுறை வைத்தியருக்கு நாலு வயது கூட இருக்காது. அந்த வயதில் நாமெல்லாம் ‘வெல்லா’-வைக் காட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்திருப்போம். இவரோ உலகத்தை உய்விக்கும் தனது பிறவிக்கடனில் முழ்கத் தொடங்கிவிட்டார். பிரமிப்பாக இருக்கிறது.)

அது கிடக்க, நேற்று யாகூ தளத்தில் வந்த ஒரு செய்தியின்படி துருக்கியர்கள் ஒரு புதிய களிம்பைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதைத் தடவிக்கொண்டால் ‘நின்று விளையாட’ முடியுமாம். இதைச் சோதிக்க 84 ஆண்களிடையே இந்த மருந்தையும், வயாகரா குளிகையையும், வெற்றுக் களிம்பையும் கொடுத்திருக்கிறார்கள். கண்டுபிடிப்பு: வெற்றுக் களிம்பால் 40 சதவீதம் பேரும், வயாகராவால் 55 சதவீதம் பேரும், துருக்கிக் களிம்பால் 77.3 சதவீதம் பேரும் நீடித்த ஆயுளை (அதுக்குத்தாங்க) பெற்றிருக்கிறார்களாம். வயகராவை விழுங்கி களிம்பையும் பூசிக்கொண்டவர்களில் 86.4 சதவீதம் பேர் வூடுகட்டி விளையாடியிருப்பதாகத் தெரிகிறது.

நல்ல சேதிதான். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. வயகராவை உட்கொண்டவர்களுக்குச் சோதனையின் போது தலைவலியும், பளீரென மின்வெட்டு போன்ற வலிகளும் வந்திருக்கின்றன. (நல்ல வேளையாக களிம்பில் இந்தச் சிக்கல்கள் இல்லை). சோதனையில் பாதியில் நிறுத்திவிட்டு அமிர்தாஞ்சனம் களிம்பைத் தேடிப்போனால் அந்த நேரத்தையும் விளையாட்டில் கணக்கில் கொள்வார்களா அல்லது டைம் அவுட் போலக் கழித்துவிடுவார்களா என்று தெரியவில்லை. ஏற்கனவே வயகரா விழுங்கினால் கண் பார்வை குறைந்துபோகும் என்று தெரியவந்திருக்கிறது. எனவே கண் தெரியாமல் போய் தலைவலி மருந்தையும் தேட வேண்டுமென்றால் கொஞ்சம் கஷ்டம்தான்.

எல்லாம் இருக்கட்டும். இந்தக் களிம்பு Topical Anaesthetics வகையைச் சார்ந்ததாம். அதாவது தடவிக்கொண்ட இடத்தில் உணர்ச்சியற்று மரத்துப்போகும். இப்படியொரு களிம்பு இந்த விளையாட்டுக்கு உண்மையிலேயே தேவைதானா என்றும் சந்தேகமாக இருக்கிறது. வயகராவை முழுங்கி, களிம்பைப் பூசிக்கொண்டு தலைவலி மருந்து தேடப்போய் திரும்பி வருபவர், பாதியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பரிசோதனை செய்யும் டாக்டரிடம் “ஆங், நா(ன்) இப்ப என்ன பண்ணனும் சார்” என்று அபத்தமாகக் கேட்டால்…?

(பின் குறிப்பு : 84 ஆண்களில் 77.3 சதவீதம், 86.4 சதவீதம் என்று துல்லியமாகக் கொடுத்திருக்கும் புள்ளிவிபரம் வேறு கொஞ்சம் இடிக்கிறது. அதெப்படி வயகராவுக்கும், வாசனைக்களிம்புக்கும் முழு எண்களிலும் தங்கள் களிம்புக்கு மாத்திரம் துல்லியமாகவும் சோதனையாளர்கள் வினைபுரிந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என் நண்பன் ஒருவன் புள்ளி விபரம் கொடுக்கும்பொழுது எப்பொழுதும் முழு எண்களாகத் தராதே, ஒருவரும் நம்பமாட்டார்கள் என்று சொல்வான். இந்தியாவில் 67.13 சதவீத ஆண்கள் வேறு பெண்களைத் தேடி அலைகிறார்கள் என்று சொன்னால் நம்புவோமா, 67 சதவீதம் என்று சொன்னால் நம்பிக்கை வருமா?).

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

ஒரே அடல்ட்ஸ் ஒன்லி’பா.
சின்னப் புள்ளிங்கோ வெக்கப்படாது? :)

பரி - நா சின்ன புள்ளே வெயாதியையே தீக்குதுன்னு சொல்றேன், நீ இன்னான்னா புள்ளீங்கோ வெக்கப்புடும்னு ஸொல்றே? :)

நல்ல காமெடி. 67.13 என்றால் தான் நம்புவோம். ஏங்க புள்ளிவிவரம் புள்ளியில்லாம இருந்தா எப்படிங்க?

ஆனா சோவை போட்டு எதுக்கு தாக்கறீங்க சம்பந்தமில்லாம! அவர் தான் காசு கொடுத்தா அதிமுக என்ன திமுக விளம்பரம் கூட போடுவோம்னு சொல்றாரே!

குங்கும்ம வைக்ககூடாதுன்னு சொல்லிட்டு பத்திரிக்கைக்கு அந்த பேர் வைச்சுக்கிறது மட்டும் என்னவாம்?

Endangered species எண்ணிக்கையை அதிகப்படுத்த இதை உபயோகிக்கலாமென்று நினைக்கிறேன்; ஒரு களிம்பு தடவல் கமிட்டி உருவாக்கி காட்டுக்குள் அனுப்பிவிட்டால் போகிறது ;-)

தயா - ஐய்யய்யோ, நான் ஏனுங்க சோவைத் தாக்கப்போறேன். இந்தத் தலைப்புக்குச் சம்பந்தமான விஷயம் அப்புடீக்கறதுனாலதான எளுதினேன். அரசியல் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு துக்ளக்கில் பலரும் விரும்பிப்ப்படிக்கும் (அல்லது) பலருக்கும் பிரயோசனமான ஒரே சமாச்சாரம் இதுவாதத்தானே இருக்கமுடியும். இதுல போய் என்னாங்க சர்ச்சை? :)
அப்புறம் குங்குமம் பத்தியெல்லாம் நீங்கள் சொல்லியிருப்பதைப் போலக் கட்டுடைப்பது அத்தியாவசியமானதுதான். இல்லைன்னா, குங்குமப்பொட்டின் மங்கலம் என்று தொட்ங்கி, பட்ச நாயே உள்ளே வராதே என்று நான்லினியரா பாடிப்புட்டுப் போகலாம். :)

கருணாநிதியை தாக்காம ஒரு இதழ் கூட வெளியிடமாட்டார் என்பது என்னவாம்?

ரொம்பவே பிரயோசனமான சமாச்சாரம் தாங்க! :)
அது என்ன நான் லீனியரான பாட்டு சம்பந்தா சம்பந்தமில்லாத-ன்னு புரிகிறது.
ஆனா அதை எதுக்ககு சம்பந்தமில்லாம சொன்னீங்க?

வெளங்கலீயே! :(

வெங்கட்,
சுவாரஸ்யமாய் இருக்கிறது. “இந்த மாதிரி” சமாச்சாரங்களுக்கு, குறிப்பாய் ஆண்களுக்கு Topical Anaesthetics வகைக் களிம்புகள் வெகுகாலமாய் உபயோகத்தில் இருப்பதாய்ப் படித்த ஞாபகம். ஆயிரக்கணக்கான வருஷமாய்ப் பயன்படுத்தும் நம்ம ஊர் மஞ்சளுக்குத் திடீரென நேற்று வந்த அமெரிக்கா உரிமை கொண்டாடும் கதையாய் துருக்கியர்கள இந்த வகைக்களிம்பின் உபயோகத்தினைக் கண்டறிந்ததாய் உரிமை கொண்டாடுகிறார்களோ எனச் சந்தேகம் :-).

இறக்குமதி பண்ணி இந்தியாவில் சிட்டுகுருவி மார்க்கோடு போட்டி போடலாம்; அல்லது ஆப்ஷோரில் இந்தியாவில் களிம்பு உற்பத்தி பண்ணி ,சோதனியும் பண்ணி அமெரிக்காவிலும் விக்கலாம்; ஆனால் இதுதான் புரியவில்லை, சன்னாசிக்கு அப்படி என்ன Endangered Species மேல் ஆத்திரமோ? ;-)

முத்து - அந்த வகைக் களிம்புகள் நிறைய இருக்கின்றன. எங்க ஊரில் ஒரு பாட்டியம்மா தொலைக்காட்சியில் வந்து இதுபோன்ற சமாச்சாரங்களையெல்லாம் சொல்லுவார். சில சமயம் பொம்மைகளெல்ல்லாம் கொண்டுவந்து விளையாட்டுகூடா காட்டுவார்.

அந்த வகையில் இது இன்னொரு புதுக்களிம்பு. இதில் கண்டுபிடிப்புரிமை, காப்புரிமை, வர்த்தக உரிமை இத்யாதி சகல உரிமைகளும் துருக்கியரையே சாரும்.

Venkat,

ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா, சிவராஜ் வைத்தியர் குடும்பத்தில் ஆண்மை குறைவை போக்கப் புறப்பட்டிருக்கும் ஆறாவது தலைமுறை வைத்தியருக்கு நாலு வயது கூட இருக்காது. அந்த வயதில் நாமெல்லாம் ‘வெல்லா’-வைக் காட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்திருப்போம். இவரோ உலகத்தை உய்விக்கும் தனது பிறவிக்கடனில் முழ்கத் தொடங்கிவிட்டார். பிரமிப்பாக இருக்கிறது.)

sema comedy than ponga!!!!!….oops ladies llam coment pannalama koodaadha?? edha padichodane…..enga tv la vara commercial nyabagam vandhudhu….about some warming lotion…….

Radha

வெங்கட்,

நல்ல “எழுச்சியான” நகைச்சுவை பதிவு. :-)
இது போன்ற விஷயங்களை படிக்கும் போது எனக்கு தோன்றுவது இதுதான். ஆண் தன்னுறுப்பின் எழுச்சி குறித்தும், அது நீடித்திருக்கின்ற காலத்தைப் பற்றியும் கவலையும், அச்சமும் கொண்டிருக்கிற வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு இந்தக் கவலையெல்லாமில்லாமல் பைல்ஸ் ஆப்ரேஷன் நோயாளி பொஷிஷனில் படுத்துக் கொண்டிருந்தால் போதுமானது. மேலும் சம்பவத்திற்கு கிடைக்கும் சுகானுபவமும் பெண்களுக்கே அதிகம் என்பதை எந்தவித புள்ளிவிவரமுமில்லாம் கூறலாம்.

குச்சிய வெச்சி காது கொடையற போது எதுக்கு சுகம் கெடைக்குது? குச்சிக்கா, காதுக்கா? என்று கேட்கிறார், கி.ராஜநாராயணன்.

//குச்சிய வெச்சி காது கொடையற போது எதுக்கு சுகம் கெடைக்குது? குச்சிக்கா, காதுக்கா? என்று கேட்கிறார்//
அப்ப உங்க குச்சிக்கு உசிர் இல்லேயா? செத்த கிளிக்கு ஏன்யா சிங்காரம். :-)

மிகச் சுவையான; குத்தல் -நகைச்சுவையில், மிகத் தூக்கலாக உண்மையும் தொக்கு நிற்கிறது. சிரித்துச்
சிரித்தே வாசித்து முடித்தேன். சிவராஜ் வைத்தியர் குடும்ப ஆறாம் தலைமுறை;;;;;யதார்த்தமான கேலி
தொடரவும்.
யோகன்
பாரிஸ்

வெங்கட்,
துருக்கி களிம்பா.. நடக்கட்டும் நடக்கட்டும்.. எங்களத் திட்டுவாங்க. ஆனா, இந்த மாதிரி ஆளுகளுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணாத குறைதான நம்மூர்ல.

“டேய் தடிப்பசங்களா.. நீங்கள்லாம் கல்யாணம் பண்ணிக்கவே லாயக்கு இல்லடா”ன்னு டிவியில் இந்த சிவராசு விடற ரவுசு இருக்கே.. சிரிக்கறதா அழறதான்னே தெரியல. இந்த மாதிரி கூட்டத்துக்கு prime time slot வேற. இந்தாளுக்கு UPA வ விட பெரிய கூட்டணி. ஜெயஸ்வரூபா, அவங்க அண்ணாவோ தம்பியோ முறுக்கு புழியுற மஷின் வச்சு EMF வைத்தியம்னு அப்புறம் இராஜவைத்தியசாலை அப்புறம் என்ன வாணியம்பாடி காதர்(?)னு கலக்கறாங்க… டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் சோ மச், ஐ சே!

//“ஆங், நா(ன்) இப்ப என்ன பண்ணனும் சார்” என்று அபத்தமாகக் கேட்டால்…?//
எங்க பிஸியாலஜி பேராசிரியர் ஜோக்கடிப்பார். நீங்கள்லாம் பிஸியாலஜி புக் படிக்கறீங்களோ இல்லையோ முக்கியமா “சில” புஸ்தகங்களப் படிங்கப்பான்னு. நான் பார்த்தவரைக்கும் படித்த நண்பர்களுக்கே ஆயிரக்கணக்கான அபத்த சந்தேகங்கள். போதுமான கல்வியறிவு இவ்விஷயத்தில் இல்லாதது நம்மூரில் மிகப்பெரிய குறை. அதான் சிவராஜும் அவர் நாலுவயசு பேரனுமெல்லாம் கொடிகட்டி பறக்கிறார்கள்.

//அமிர்தாஞ்சனம் களிம்பைத் தேடிப்போனால் அந்த நேரத்தையும் விளையாட்டில் கணக்கில் கொள்வார்களா அல்லது டைம் அவுட் போலக் கழித்துவிடுவார்களா என்று//
:))))

A

கோடிட்ட இடங்களை நிரப்புக

1.முத்துலிங்க வைத்தியர்
2.சுப்ரமணிய வைத்தியர்
3.—
4.சிவராஜ் வைத்தியர்
5.சிவராஜ் சிவக்குமார்
6.சிவராஜ் சஞ்ஜய்

[...] முழு மேட்டரையும் படிங்க.. வாத்யார் ஸெம மூட்ல கீறார் [...]

romba nalla irukku ..

[...] துரித ஸ்கலிதத்திற்கு துருக்கியர் களிம்பு என்று வெங்கட் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். கட்டாயமாக வயது வந்தவர்கள் மட்டுமே படிக்கவேண்டிய பதிவு. வயது வராதவர்கள் விண்டோவை சின்னதாகக்கி ஒருத்தருக்கும் தெரியாமல் புரிந்தவரை படிக்கலாம். படித்தவர்கள் எல்லோரும் கலீலியோ மாதிரி யோசித்து என்னமா…பின்னூட்டம் போட்டிருக்கிறார்கள். படித்தால் சிரித்து வயிற்று வலி வருவது நிச்சயம். [...]

பின்னிப் பெடலெடுத்திட்டீங்க போங்க…
Have linked this in
http://www.desipundit.com/2006/05/04/turkeymatter/

அடே நீங்க இவ்வளவு நல்லா காமிக்கா எழுதுவீங்களா? ரொம்ப நல்ல இருந்திச்சு. first rank for this:“ஆங், நா(ன்) இப்ப என்ன பண்ணனும் சார்” என்று அபத்தமாகக் கேட்டால்…?

டுபுக்கு - டேங்க்ஸ் பா!

தருமி - அப்படின்னா நான் எழுதிய ஆணுறைகள், முழு நீலத் தமிழ்ப்படங்கள் இதெல்லாம் நீங்க படிச்சதில்லையா? :)

அடேங்கப்பா !!

shadanai than super extra-ordinary,wow,wonderful, appidi sollalam inu ninaikeren ana mudiyla

சுவையான நகைச்சுவை. ரஸித்தேன். வாழ்த்துக்கள்.

ஆனால், என் போன்ற கன்னிப்பையன்கள் உங்களது எழுத்தை படித்து கெட்டுப்போகிறார்கள் என்று ஒழுக்கம், கற்பு என்ற சத்தங்களோடு யாரும் ஆட்டோ அனுப்பாமல் இருந்தால் சரி.

நீங்க என்ன சொன்னாலும் சரி, நாக்குக்குப் பிடிச்சத வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, வீடு நிறைய குறட்டை விடற சுகத்திற்கு சமமாய் எதுவும் வராது.

அடப்பாவி மக்கா !!! இப்படி காமெடியில் பூந்து ஊடு கட்டுறியே ??? காலங்காத்தால இத்த படிச்சுட்டு அசமஞ்சமா சிரிச்சுண்டிருக்கேன் போங்கோண்ணா !!!

‘பெல்லா’ ன்ன்னா சொல்வீங்க நீங்க ? நாங்க ‘பல்லா’ ன்னில்ல சொல்வோம் ??!!!! துக்ளக்கை கலாய்ச்சது சூப்பர்….

அரசியல் பிடிக்காதவங்க / தெரியாதவங்க கூட மனம்விட்டு சிரிக்கலாம்…

hi,
please drop a line to ramanathanDOTblogATgmail.com

thanks

நல்ல ‘உபயோகமான’ பதிவுங்கோ… ;-) //ஜெயஸ்வரூபா, அவங்க அண்ணாவோ தம்பியோ முறுக்கு புழியுற மஷின் வச்சு EMF வைத்தியம்னு//
அந்த மொட்டை தலைக்காரர் அவங்க புருஷங்கோ…

//“ஆங், நா(ன்) இப்ப என்ன பண்ணனும் சார்”//
ஏதோ பொருட் குற்றம் மாதிரி தெரியுது… சந்தேகத்தை ‘மேடம்’ கிட்ட இல்ல கேக்கனும் இல்ல நாந்தான் சோதனையை தப்பா புரிஞ்சிகிட்டேனா??? :-))))

அன்புடையீர்

வணக்கம். பழனி இப்போது போலி வைத்தியர்களுக்குப் புகழ்பெற்று விட்டது. டிவியைப் பார்க்க முடியவில்லை, பத்திரிகைகளைப் புரட்ட முடியவில்லை. எங்கும் இந்த போலி வைத்தியர்கள் ஆக்ரமித்து, பணம் பண்ணத் தொடங்கி விட்டார்கள்.

எத்தனையோ போலி சாமியார்களைக் கைது செய்கிறார்கள். இந்த பழனி வைத்தியர்களை ஏன் இன்னும் கைது செய்யாமல் விட்டு வைத்துள்ளார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. என்றைக்கு பழனி வைத்தியர்களின் ஆதிக்கம் குறைகிறதோ, அன்றைக்குத்தான் தமிழக இளைஞர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

அன்புடன்
எழுத்தாளர் ஒளிர்ஞர்

Leave a comment

(required)

(required)