நேஷனல் போஸ்ட்டில் இன்னொரு தலையங்கம்

புலிகளைத் தடைசெய்யச் சொல்லி கனடாவின் முன்னணி நாளிதழ்களில் ஒன்றான நேஷனல் போஸ்ட் பிரசூரித்துவரும் கட்டுரைகள், செய்தியறிக்கைகள், ஆய்வறிக்கைகள், தலையங்கம் குறித்து நேற்று எழுதியிருந்தேன்.

ஆச்சரியப்படத்தக்க வகையில் இன்றைக்கு போஸ்ட் இன்னொரு தலையங்கத்தை எழுதியிருக்கிறது. Tamil Congress shoots the messenger என்று தலைப்பிடப்பட்டு (அதிர்ச்சி அழைப்பு விடுக்கும் தலைப்பு) இன்றைக்கு மற்றொரு தலையங்கம் வந்திருக்கிறது.

இதைப் பற்றிய விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

You question their heading of “… Shoots the messenger” yet you are doing exactly that: instead of talking about the findings in the report, you talk about how National Post is biased. What do you have to say about the contents of the report. I am a SL Tamil living in Toronto and I can personally confirm many of their findings, including the amounts quoted, intimidation tactics, etc.

The biggest joke of the whole thing is the fact that Tamil Congress defended the LTTE. Where was the other independent organization with no links to the LTTE? Most of the Tamils here the report is very accurate. Who are they trying to fool. The truth is slowly coming out.

Thanks for your comment. If you read at the end of my previous blog, I mentioned that I will comment on this over the weekend.

I do not know if the report is true or false. There are just too many conflicting views, that makes an outsider (non SL tamil) like myself very difficult to draw any conclusion. This can change only if LTTE critics (within the community) come with clear statements to prove the Tamil Congress claims wrong.

On the other hand, my idea of bring this issue is to inform those outside Toronto/Canada to be aware of what is happening in the largest non-asian Tamil diaspora community.

Human Rights Watch ஆவணத்தை முழுவதுமாகப் படித்தேன். மிகத் தீவிரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை பற்றி அரசல் புரசலாகச் செய்திகள் முன்னமேயே வந்துள்ளன. ஆனால் மெதாடிகலாக இப்படி எழுதப்பட்டதில்லை. HRW எதோ உள்காரணங்களை வைத்து இந்த ஆவணத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. HRW தொடர்ந்து தீவிரமாக மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவந்திருக்கிறது. காஷ்மீரில் இந்தியப் படைகளின் அத்துமீறல்கள் பற்றி 1994, 1996, 1999 வருடங்களில் அறிக்கைகள் எழுதியிருக்கிறார்கள். அதிலும் காஷ்மீர் ஆயுதப்போராளிகளின் அத்துமீறல்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார்கள்.

அதனால் மெசஞ்சரைச் சுடுவதற்கு பதில் கனேடிய (ஈழத்)தமிழ்ச் சமுதாயம் தங்களையே சற்று ஆழமாகக் கேள்விகள் கேட்கலாம்.

ஆனால் ஒரு விஷயம்: கனேடிய காவல்துறையும் சரி, ஐரோப்பிய நாடுகளின் காவல்துறைகளும் சரி, வெறும் மிரட்டல்களை, அல்லது மிரட்டல் போன்ற தொனியில் இருக்கும் எச்சரிக்கைகளை (”நீ கவனமாய் இரு. உன்னைக் கவனிப்போம். நீ போறதைப் பார்ப்போம்.”) புரிந்துகொண்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது கடினம். மேலும் இந்தக் காவல்துறைகளே சொல்வதுபோல இருக்கும் எத்தனையோ பிரச்னைகளில் இந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் தருவது கடினம்.

புலிச்சார்பு தமிழ்நெட் தளத்தில் நான் கண்ட ஒரே செய்தி விவரம்: Canadian Tamils protest against HRW charges

பத்ரி - ஏதோ காரணத்தினால் காத்திருப்பில் இருந்த உங்கள் கருத்தைப் பற்றி எனக்கு மின்னஞ்சல் வரவில்லை.இப்பொழுதுதான் பார்த்து உள்ளிட்டேன். மன்னிக்கவும்.

இது குறித்து என்னுடைய கருத்துக்களை விரைவில் தொகுத்தெழுத முயற்சிக்கிறேன்.

Leave a comment

(required)

(required)