நீங்களாகவே மாற்றிக் கொள்ளக்கூடிய செய்தியோடைத் திரட்டி

உங்களுடைய வலைப்பதிவின் ஓடையை நீங்களாகவே உள்ளிட்டுத் திரட்டியில் சேர்க்கும் வசதி ஒன்றை என் தளத்தில் சோதனை முறையில் நிறுவியிருக்கிறேன். சென்ற இரண்டு வாரங்களாக இணையத்தின் இப்பொழுதைய பரபரப்பான AJAX - Asynchronous JavaScript And XML தொழில்நுட்பம் குறித்து கொஞ்சம் விளையாடிப் பார்த்தேன். இதன் சாத்தியங்கள் பிரமிப்பூட்டுபவையாக இருக்கின்றன. முழுப்பகத்தையும் மாற்றியமைக்காமல் ஒரு குறிப்பிட்ட பகுதியை நகர்த்த, மாற்றியமைக்க இது உதவுகிறது (இது அஜாக்ஸின் ஒரு சிறிய வசதிதான். இதைவைத்துக்கொண்டு பல அற்புதமான கருவிகளை வடித்து வருகிறார்கள்).

என்னுடைய தளத்தில் நிறுவப்பட்டிருக்கும் செய்தியோடைத் திரட்டியைப் பாக்கவும். இதில் உங்களூடைய வலைப்பதிவின் செய்தியோடையை நீங்களாகவே உள்ளிட்டுச் சேமிக்க முடியும். ஆர்வமிருப்பவர்களை இதனுடன் விளையாடிப்பார்க்க அழைக்கிறேன் (அப்படியே உங்கள் செய்தியோடையை உள்ளிட்டுச் சேமித்தால் எனக்கும்/பிறருக்கும் படிக்க வசதியாக இருக்கும்).

பிரச்சனை ஏதுமிருந்தால் தெரிவிக்கவும். செய்தியோடைத் திரட்டியை புத்தகக் குறியிட்டுச் சேமிக்க விரும்புவர்களுக்காக இதன் நேரடி முகவரி:  http://domesticatedonion.net/rss/

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

அன்பரே எனது http://www.tamilpayani.com/tamilsatiram/rss.php
சுட்டியில் சில எழுத்துகள் தாறுமாறாக தெரிகிறதே என்ன செய்ய வேண்டும்…?
தனியஞ்சலில் ஏதும் யோசனை சொன்னாலும் சரியே…

நன்றாகவுள்ளது. Drag & dropஇல் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது. (என் Firefox உலாவியில் மட்டுமாவது). அதாவது, ஒரு feedஐ கொஞ்சம் மேலே நகர்த்த முயன்றால், அதற்குக் கீழே உள்ள feed மேலே சென்று விடுகிறது.

சில யோசனைகள்:
- feeds பக்கம் முழுவதும் எடுத்துக் கொள்ளாமல், sidebarஇல் மட்டுமே வரிசையாகத் தோன்ற வேண்டும், ஒன்றின் கீழ் ஒன்றாக.
- main content frameஇல், சொடுக்கிய பக்கம் தோன்ற வேண்டும் (தற்போது புதிய பக்கத்தில் தோன்றுகிறது)
- sidebarஇல் உள்ள feedsஐ collapse / expand செய்ய இயல வேண்டும்
- categorizing for feeds
- இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் ;)

மேலும் சில கருத்துக்கள் / feedback:
- தமிழ்மணத்தின் தொகுப்பை உருவாக்கிக் கொண்டு, அதை நான் Firefoxஇல் சேர்த்துக் கொண்ட Live Bookmarkஉடன் ஒப்பிட்டால், சில வேறுபாடுகள் தெரிகின்றன. உங்கள் நிரலில் latest 2 - 3 இடுகைகள் காட்டப்படுவதில்லை.
- மேலும், தமிழ்மணத் தொகுப்பிலுள்ள 20 இடுகைகளுக்கு பதிலாக, உங்கள் நிரலில் 10 items என்றுக் குறிப்பிட்டு உருவாக்கினால், latest 10 வருவதில்லை, previous 10ஏ வருகிறது.
- Reload intervalஐ மாற்றுவது அவ்வப்போது வேலை செய்வதில்லை. உ-ம், 10minutes என்பதை 1 minute என்று மாற்றினால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
- Collapse/expand இருப்பதை கவனித்தேன், நன்று.
- POP அனுமதியளிக்கும் மின்னஞ்சல் கணக்குகளையும் பார்க்கும் வசதியை வழங்க முடியுமா? அப்படியென்றால் ஒரே திரையில் பல கணக்குகளுக்கு வரும் மின்னஞ்சல்களையும் படிக்க வசதியாக இருக்கும்.
- ஒரு non-technical கருத்து. நீங்கள் (மற்றும் பலரும்) RSS feedடுக்கு ‘செய்தியோடை’ என்றப் பதத்தைப் பயன்படுத்துவதைப் பார்த்தேன். ஓடை implies streaming. A feed is not a stream, it’s just a list of items. ஒலியோடை (audio stream), ஒளியோடை (video stream) போன்ற இடங்களில் ‘ஓடை’ பொருத்தமாக இருக்கும். Feedடுக்கு ‘செய்தித் தொகுப்பு’ என்பது மேலும் பொருத்தமாகப் படுகிறது.

Leave a comment

(required)

(required)