கொல்கத்தாவில் இரண்டாவது ஐஐஎஸ்ஸி வளாகம
இன்றைய டெக்கான் ஹெரால்ட் நாளிதழில் கொல்கத்தாவிற்கருகில் இரண்டாவது இந்திய அறிவியல் கழக வளாகம் வரவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜீ இதற்கென மத்திய அரசு 500 கோடி ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறது என்றும் இத்திட்டத்திற்குப் பிரதமரின் அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
ஐஐஎஸ்ஸியின் முன்னாள் மாணவன் என்ற வகையில் எனக்கு இன்னும் அதனுடன் நெருங்கியத் தொடர்பு உண்டு. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னால் அங்கே சென்றிருந்தபொழுதுகூட இப்படியொரு திட்டம் பரிசீலனையில் இருப்பதாக யாரும் சொல்லவில்லை. இதை ஏன் இவ்வளவு இரகசியமாக முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. டெக்கான் ஹெரால்டில் வந்ததற்கு மேலதிகத் தகவல்களை வேறெந்த ஊடகங்களிலிருந்தும் பெறமுடியவில்லை.
சென்றவாரம் ஐஐஎஸ்ஸி வந்த இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஐஐஎஸ்ஸி இளமறிவியல் வகுப்புகளைத் துவங்க வேண்டும் என்றும் உலக அளவில் ஸ்டான்ஃபோர்ட், கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழங்களுக்கு இணையக வளரக்கூடிய தகுதியுள்ள ஒரே நிறுவனம் ஐஐஎஸ்ஸி-தான் என்றும் சொல்லியிருந்தார். (ஐஐஎஸ்ஸியில் இளமறிவியல் படிப்பித்தல் குறித்த என்னுடைய கருத்துக்களை இந்த ஆங்கில வலைப்பதிவில் காணலாம்). அப்பொழுதுகூட அவர் வங்கத்தில் வரவிருக்கும் இரண்டாம் வளாகம் பற்றி பேசியதாகத் தெரியவில்லை.
இருந்தபோதும் இந்த இரண்டாம் வளாகம் வங்கத்தில் வருவது முற்றிலும் பொருத்தமானதுதான் என்று தோன்றுகிறது. இதைப் பற்றிய விபரங்கள் வந்தவுடன் என் மேலதிக கருத்துக்களை எழுதுகிறேன்.
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
Comments
வெங்கட், இதைப் பற்றிய அறிவிப்பு முன்னமே வெளியானதாய் நினைவு. இரண்டு இடங்களில், அதாவது கல்கத்தா மற்றும் புனேயில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது.
//இருந்தபோதும் இந்த இரண்டாம் வளாகம் வங்கத்தில் வருவது முற்றிலும் பொருத்தமானதுதான் என்று தோன்றுகிறது//
இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தியா ஒரு மிகப்பெரும் மக்கள் தொகையை கொண்ட நாடு. ஒரே இடத்தில் அனைத்து வசதிகளையும் குவிப்பது என்பது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை. ஏற்கனவே நல்ல பல ஆராய்ச்சி நிறுவனங்கள் கொல்கத்தாவில் உள்ளன. (Saha, S.N.Bose, Culivation of Sciences, VECC, Jadhavpur(also near Kolkatta I understand)) இதை உணர்ந்தும் தான் இப்படி சொல்கிறீர்களா என்று தெரியவில்லை.
Venkat
It is PTI news from kolkaata, hence you cant expect more than what they give , rather asked to give. Same contents were appearing in the business standard, link is given below.
http://www.business-standard.com/common/storypage.php?storyflag=y&leftnm=lmnu2&leftindx=2&lselect=1&chklogin=N&autono=217027
As balu rightly pointed out, WB has the cream of Institutes in every field, (science, arts, statistics,) Even IIT they have two (Kharagpur and Jadhavpur)
Unfortunately in Tamilnadu no such institute in science eventhough we produce the scientists in good number (who all chose to go elsewhere to study like you)
Onthe other hand in Kerala, it is still worse.
Jharkant or MP would be ideal
srinivas Venkat
பாலு, ஸ்ரீனிவாஸ் வெங்கட்,
அருள் சொன்ன அதே காரணம்தான். இன்றைக்கு இந்தியாவிலேயே அடிப்படை அறிவியல் பயிற்றுவித்தல் மேற்கு வங்கத்தில்தான் நன்றாக இருக்கிறது. ஒரு காலத்தில் தமிழகத்திலிருந்து ஐஐஎஸ்ஸிக்கு வருபவர்கள் நிறைய் இருந்தார்கள். ஐடி வெள்ளம் வந்து இதையெல்லாம் அடித்துக் கொண்டு போய்விட்டது. இன்றைக்கு இந்தியாவின் முன்னணி அறிவியல், கணித ஆய்வு நிலையங்களில் இருக்கும் இளைய அறிவியலாளர்கள், ஆய்வு மாணவர்களில் வங்காளிகளின் பங்கு மிகமிக அதிகம்.
ஸ்ரீ.வெ - உண்மைதான் தமிழகத்தில் நல்ல இயற்பியல் ஆய்வுக்கூடம் இருந்தால் நான் பல விஷயங்களில் சமரசம செய்துகொண்டு தங்கியிருந்திருப்பேன்.
முதல் நிலை ஆராய்ச்சிக்கூடங்களுக்கு நல்ல தரமான மாணவர்களின் வருகை மிகவும் முக்கியம். ஜார்கண்ட், ம.பி (நான் அங்கே இரண்டு வருடம் வேலையில் இருந்திருக்கிறேன்) போன்ற மாநிலங்களில் இப்படி முதன்மை ஆராய்ச்சி நிலையங்களைத் துவக்குவதற்கு முன் அடிப்படிஅ அறிவியல் கல்விக்கு நிறைய செலவிட்டாக வேண்டும்.
கேரளா - வேறு கதை. அது கிட்டத்தட்ட அனாதைக் குழந்தையாக இருக்கிறது.
வங்கத்தின் பங்கு அறிவியலில் நிச்சயம் அதிகம் தான். அவர்களின் அடிப்படை அறிவியல் பயிற்சி தான் அதற்கு காரணமாக இருக்க முடியும். எனவே அவர்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
அதே வேளையில் வேறொரு புள்ளி விபரத்தையும் பார்க்க வேண்டும். IIScல் எத்தனை சதவீதம் கர்நாடக மாணவர்கள்? பெங்களூரின் வளர்ச்சிக்கு IISc யின் பங்கு என்ன?
கர்நாடக மாணவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். (தற்சமயம் இது அதிகரித்திருக்கிறது). கர்நாடக மாணவர்கள் சேரவில்லை என்பதால் எந்த வகையிலும் IISc ன் தரம் குறைந்து போகவில்லை. மாறாக அவர்களை இன்னும் ஊக்குவித்துக் கொண்டே தான் இருக்கிறது. இப்பொழுது வந்து சேரும் மாணவர்கள் அதற்கு உதாரணம்.
இரண்டாவது கேள்விக்கு, நேரடி பங்களிப்பு என்று எதுவும் இருக்கிறதா என்றால் இல்லை. ஆனால் மறைமுக பங்களிப்பு!!. இதைத்தான் நான் முக்கியம் என்று கருதுகிறேன். இப்பொழுதைய பெங்களூரின் வளர்ச்சிக்கு (மென்பொருள் தவிர்த்து விட்டு பார்த்தால்), IIScன் இருப்பு ஒரு முக்கியமான காரணம். அதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். இதே IISc, மைசூரிலோ இல்லை பெல்லாரியிலோ இருந்திருந்தாலும் அதன் தரம் குறைந்திருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.(இதற்கு உதாரணமாக காமராசர் பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல் பிரிவு- ஆனால் இங்கே பெரிய பல்கலைக்கழகம் என்ற போர்வையில் எதுவும் வெளியில் தெரிவதில்லை) அதே நேரத்தில் அந்த நகரங்களின் தோற்றம் நிச்சயமாக மாறியிருக்கும்.
என்னைப் பொருத்தவரை ஒரு பெரிய ஆலையை மக்களுக்கு கொண்டு செல்வதை விட நல்ல சில கல்வி நிறுவனங்கள் இந்த மாற்றத்தை எளிதில் செய்து விடும். அதனாலேயே மீண்டும் கொல்கத்தா என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
[...] நாà®à¯à®à®³à¯à®à¯à®à¯ à®®à¯à®©à¯à®©à®¾à®²à¯ à®à®´à¯à®¤à®¿à®¯ à®à¯à®¤à®¾ ராமà®à®¾à®®à®¿à®¯à®¿à®©à¯ பà¯à®¤à¯à®¤à® ஠றிமà¯à®à®¤à¯à®¤à®¿à®©à… தà¯à®à®°à¯ பதிவ௠[...]

>>>
இருந்தபோதும் இந்த இரண்டாம் வளாகம் வங்கத்தில் வருவது முற்றிலும் பொருத்தமானதுதான் என்று தோன்றுகிறது
————
completely agree!
wb is *good* in university level basic science education. tn is way down in sciences. engineering is different ofcource.
arul