நீளமறிதல்

நான் நீண்ட நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்த ஒரு விஷயம் இவ்வார Slate சஞ்சிகையில் எழுதப்படிருக்கிறது.

ஆய்வகத்தில் ஏதாவது ஒன்றை அளக்க முற்படும்பொழுது அதை எவ்வளவு துல்லியமாக அளக்க வேண்டும் என்று முடிவெடுப்பது முக்கியமான காரியம். எனக்கு கல்லூரி நாட்களிலிருந்தே இந்த விஷயத்தில் தீவிர ஈடுபாடு உண்டு. எனவே ஒவ்வொருமுறையும் மின்னஞ்சலில் குறிநீட்டிப்புச் சித்தர்களிடமிருந்து எட்டே நாட்களில் இரண்டு மடங்கு நீளமாக்குவோம் ரீதியில் வரும்பொழுது இதை எப்படி அளப்பார்கள் என்று வியப்பதுண்டு.

இதே கேள்விகளை கெண்ட் ஸேப்கோவிட்ஸ்-ம் கேட்கிறார். எப்படியையா நீளத்தை அளப்பீர்கள்? எங்கிருந்து துவங்கி எங்கு முடிப்பது? குண்டானவர்களுக்கு ஏதாவது சலுகை உண்டா? அறையின் வெப்ப அளவைக் கணக்கில் எடுத்துக் கொள்வீர்களா? (இது இன்னொரு பழைய ஜோக். +2ல் படிக்கும் பொழுது Coefficient of Linear Expansion of a Rod என்றொரு பாடம் வரும் இதில் வகுப்பில் மாணவர்கள் கிளுகிளுக்க சக மாணவிகள் “இதுக்கென்ன சிரிப்பு” ரீதியில் வியந்ததும். வகுப்பு முடிந்தவுடன் சிரிப்பின் காரணம் என்ன என்று கேட்டதும்…).

எல்லாவற்றையும்விட அதிமுக்கியமான கேள்வி; யார் அளப்பார்கள்? இங்கே அளவீடு அளப்பவரின்பாற்பட்டது என்பதால் யார் இந்தக் காரியத்தைச் செய்தார்கள் என்பது அதிமுக்கியம். அப்படியிருக்க பல்வேறு சோதனைகளில் கிடைக்கும் தரவுகளை எப்படி ஒப்பிடுவது என்பது பெரிய சிக்கலான காரியமில்லையா?

ம்ம்.. நானோநுட்பம் எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு இதை முதலில் கவனிப்பது நல்லது என்று தோன்றுகிறது.

—–

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

Venkat, Welcome back. I missed you all these days and hope you again write regularly.

வெங்கட் புது வீடு ஜோரா இருக்கு.À¼òÐÄ Â¡Õ ¿£í¸Ç¡?

கார்த்திக் - நன்றி.

ஒரு வழியாக தமிழ்மணம் பட்டையை வேலை செய்ய வைத்தாகிவிட்டது.

அனான் - பெயர் சொல்லாத உங்களூக்கும் நன்றி. :)

[...] மேலே வாசிக்க [...]

Leave a comment

(required)

(required)