• Archive for January, 2006

    இவ்வருட இயல் விருது : பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்

    by  • January 30, 2006 • இலக்கியம் • 1 Comment

    கனடா இலக்கியத் தோட்டம் அமைப்பும் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் பிரிவும் இணைந்து வழங்கு வருடாந்திர இயல் விருது இந்த முறை அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் (Prof. George L. Hart) அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜோர்ஜ் எல்.ஹார்ட் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் (பேர்க்லி) தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்துறை உட்பட நான்கு தலைமைப் பீடங்களை அலங்கரிக்கும் இவர் ஆரம்பத்தில் விஸ்கான்சின் (மாடிஸன்) பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராக கடமையாற்றியவர். இவருக்கு லத்தீன், கிரேக்கம், [...]

    Read more →

    சான் ஓஸே, சான்பிரான்ஸிஸ்கோ நண்பர்களுக்கு

    by  • January 21, 2006 • பொது • 1 Comment

    நாளை சான்பிரான்ஸிஸ்கோ செல்லவிருக்கிறேன். ஒருவாரப் பயணம். சான் ஓஸே-யில் தங்கியிருப்பேன். ஒரு வாரப் பயணம் என்பதால் முதலிரண்டு நாட்களுக்குப் பிறகு மாலை நேரங்களில் ஓய்வாக இருக்க முடியும். இப்பகுதியில் வசிக்கும் நண்பர்கள் யாராவது இருந்தால் சந்திக்கலாம். vvenkat அட் sympatico டாட் ca முகவரியில் அஞ்சல் அனுப்பினால் என் ஹோட்டல் விபரங்களையும் செல்பேசி எண்ணையும் தருகிறேன்.

    Read more →

    புதிய தமிழ்மணத்திற்கான சோதனை

    by  • January 20, 2006 • பொது • 4 Comments

    ஊரில் இல்லாத பொழுது தமிழ்மணத்தில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. சோதனை கட்டத்திலேயே காசி இதெல்லாம் பற்றி மடல் எழுதியிருந்தாலும் எங்கோ உட்கார்ந்துகொண்டு இதையெல்லாம் சோதித்துப் பார்க்க முடியவில்லை. இனி இதைச் சரி செய்த பிறகுதான் மீண்டும் எழுதவேண்டும். BlogCMS-ல் இதை எப்படிச் செய்வது என்ற உதவிகள் இல்லை. யாருக்காவது தெரிந்து சொல்லி, என் நேரத்தை மிச்சப்படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

    Read more →