வலைப்பதிவின் அடுத்த கட்டம் – சோனி-கூகிள் செல்போன்
by வெங்கட் • March 2, 2006 • அறிவியல்/நுட்பம் • 5 Comments
சோனி-எரிக்ஸன் உலகில் முதன் முறையாக வலைப்பதிவர்களுக்கென் ஒரு செல்பேசியை வெளியிட்டிருக்கிறது.
சோனியின் cybershot காமெரா உள்ளடங்கிய இந்த செல்பேசியில் படமெடுத்து, கூடவே சில வார்த்தைகளைப் பேசி, இந்த செல்பேசி வழியாகவே வலையேற்ற முடியும்.
பிறமொழிகளில் நிறையபேர் moblogging என்ற செல்பதிவு முறையில் ஏற்கனவே பதிவு செய்கிறார்கள். இந்த முறையில் செல்பேசியில் பேசி, ஒரு நிர்வாகச் செயலகத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசிய வார்த்தை mp3 அல்லது வேறு வடிவில் மாற்றப்பட்டு வலையேற்றப்படும். இந்த புதிய செல்பேசியில் அப்படி சுற்றி வளைக்காமல் நேரடியாக பேசிய உடனே படத்துடன் வலையில் சேர்த்துவிடலாம்.
இன்னொரு விஷயம். இந்த செல்பேசியின் வடிவமைப்பில் கூகிளுக்கும் பங்குண்டு. இதில் முதல் முறை Blog பொத்தானை அழுத்தியவுடன், அது இந்த செல்பேசிக்கென blogspot தளத்தில் சேவைகளை உருவாக்கிவிடும். பின்னர் எந்தக் கடவுச் சொல்லும் இல்லாமலேயே இதிலிருந்து நேரடியாக வலைப்பிக்கலாம்.
nalla seithi
வெங்கட், நேற்றைக்குதான் நான் புது செல்பேசி வாங்கினேன். கொஞ்சம் முன்னாடியே சொல்லக்கூடாது?
அப்படியே மின்னஞ்சல் ஒன்னு அனுப்பியிருக்கேன், பார்க்கவும்.
comment sodhanai.
sodhanai mEl sOdhanai..
-Mathy
மதி – சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன்.
BlogCMS-லிருந்து wordpress நகர்த்தும் வேலை எப்படிப் போகிறது? மின்னஞ்சல் அனுப்பவும்.
needed some tweaking around.
and because both your data were together. it took everything..
didnt have much time to devote to this. so kindof dropped it for the moment..
-Mathy
p.s. – pls do delete this comment and the last one from me.