புதிய தமிழ்மணத்திற்கான சோதனை
by வெங்கட் • January 20, 2006 • பொது • 4 Comments
ஊரில் இல்லாத பொழுது தமிழ்மணத்தில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. சோதனை கட்டத்திலேயே காசி இதெல்லாம் பற்றி மடல் எழுதியிருந்தாலும் எங்கோ உட்கார்ந்துகொண்டு இதையெல்லாம் சோதித்துப் பார்க்க முடியவில்லை. இனி இதைச் சரி செய்த பிறகுதான் மீண்டும் எழுதவேண்டும்.
BlogCMS-ல் இதை எப்படிச் செய்வது என்ற உதவிகள் இல்லை. யாருக்காவது தெரிந்து சொல்லி, என் நேரத்தை மிச்சப்படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன்.
வெங்கட்,
பயணம் இனிதே முடிந்து ஊர் திரும்பியதுகேட்டு மகிழ்ச்சி.
blogcmsக்கான அனுசரணையில் இரண்டு விதம். முதல்விதம் உங்கள் இடுகைகளை திரட்டி வழியாக காட்டுவது. அதுவே இப்போது சரியாக இல்லை. அதற்கு உங்கள் atom.php செய்தியோடையில் கொஞ்சம் செப்பனிடவேண்டும். தேசிகன் செய்தார். அதாவது சார்முகவரிகள் சாராமுகவரிகளாக மாற்றப்படவேண்டும்.
உ.ம். உங்கள் ஓடையில் 15வது வரியில்: <link rel="alternate" type="text/html" href="atom.php?item=682" /> என்று இருப்பது <link rel="alternate" type="text/html" href="http://www.domesticatedonion.net/blog/?item=682…" /> என்று வரவேண்டும்.
இதைச் செய்தால் நீங்கள் தேசிகனைப்போல நேரடியாகத் தமிழ்மணம் முகப்பில் http://www.domesticatedonion.net/blog/… என்ற உங்கள் வலைமுகவரியை இட்டு திரட்டச் செய்யலாம்.
இரண்டாம் கட்டம் கருவிப்பட்டை. அதில் சில சோதனைகள் நடக்கின்றன. விரைவில் தீர்வு கிட்டும்.
ஆடம் ஓடை மாற்றங்கள் சரியாக வந்தவுடன், பத்மாவைன் பதிவுக்கும் செய்துவிடுங்கள். அவர்களும் காத்திருக்கிறார்கள்.
[1] நன்றி காசி, நாளை ஒரு வார சான்ப்ரான்ஸிஸ்கோ பயணத்திற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். வந்துதான் செய்ய வேண்டும்.
[2] இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள். போய்விட்டு வந்த பின் சொல்லுங்கள் BlogCMSக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறேன்.
nice post