டொராண்டோவில் கீழ்வெண்மணி குறித்த ஆவணப்படம்
by வெங்கட் • March 7, 2006 • இலக்கியம், கலைகள், சமூகம் • 6 Comments
பாரதி கிருஷ்ணகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த ‘ராமய்யாவின் குடிசை’ என்ற ஆவணப்படம் டொராண்டோ நகரில் காலம் சிற்றிதழால் திரையிடப்படுகிறது. தமிழக வரலாற்றில் படிந்த துயர சம்பவமான கீழ்வெண்மணி கொலைகள் குறித்த பல சரித்திர உண்மைகளை வெளிக்கொணரும் இந்த ஆவணப்படம் மிகவும் முக்கியமானது. 36 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாதிக்கொடுமை கொலைகளின் பின்னணியையும் கோரத்தையும் 64 சாட்சியங்கள், மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் மூலம் பாரதி கிருஷ்ணகுமார் திறமையாக தெளிவுபடுத்தியிருப்பதாக இந்த ஆவணத்தைக் குறித்த விமர்சனங்கள் பாராட்டுகின்றன.
இத்திரையிடலின் கூடவே டேமியன் சூரியின் இயக்கத்தில் ஏகலைவன் என்ற நாட்டுக்கூத்தும் நிகழ்த்தப்படவிருக்கிறது.
| ராமய்யாவின் குடிசை கீழவெண்மணி குறித்த ஆவணப்படம் இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார் ஏகலைவன் |
இடம் : ஸ்கார்புரோ சிவிக் செண்டர் நாள் : மார்ச்சு 12, 2006 காலம்: மாலை 6:00 மணி அனுமதி : $5.00 |
புகையோடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்
குருவிகள் இவை என்றார்
குழந்தைகள் இவை என்றார்
பெண்களோ இவைகள்? காளைக்
கன்றுகள் இவைகள் என்றார்இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரீகம் ஒன்று நீங்கஞானக்கூத்தன்
Thankx for this info Venkat. Could you tell me what will be the date?
ஐயோ கடவுளே! நான் முக்கியமான விஷயத்தெயே தவறவுட்ருக்கேன். டி.சே. அது மார்ச்சு 12. மேல சேர்த்திருக்கேன். நன்றி!
அன்னிக்கு எனக்கு ராயல் கனேடியன் சொசைட்டில வருடத்துக்கு இரு முறை நடக்கும் குழந்தைகளுக்கான அறிவியல் நிகழ்ச்சி இருக்கிறது. அதே காலையில் வருடாந்திர ஆர்க்கிட் கண்காட்சி. எப்படி சமாளிக்கப்போறேனோ?
/அன்னிக்கு எனக்கு ராயல் கனேடியன் சொசைட்டில வருடத்துக்கு இரு முறை நடக்கும் குழந்தைகளுக்கான அறிவியல் நிகழ்ச்சி இருக்கிறது. அதே காலையில் வருடாந்திர ஆர்க்கிட் கண்காட்சி. எப்படி சமாளிக்கப்போறேனோ? /
ஏதாச்சும் ஒண்டை மிட்நைட்டுக்கு மாத்த ஏலுமோ எண்டு முயற்சி செய்து பாருங்கோவன்
சமீபத்தில் தான் பார்த்தேன் வெங்கட். சிறந்த முறையில் எடுக்கப்பட்ட (தொழிநுட்பக் குறைபாடுகள் தவிர) ஆவனப்படம்.
ஞானக்கூத்தனின் கவிதையை குறிப்பிட்டதற்கு நன்றி!
பதிவுக்கு நன்றி வெங்கட். செல்வம்கிட்ட இருந்து வந்த மடலைப் பார்த்துப் பிறகு மறந்துவிட்டேன்.
கவிதையைத் தேர்வு செய்து அறிவிப்பில் சேர்த்தது செல்வமா? செழியனா? என்னுடைய பாராட்டைச் சொல்லிருங்க.
-மதி
தங்கமணி,
படத்தை பார்த்தீர்கள் என்றால் ஒரு பதிவை எழுதுயிருக்கலாமே.
வெங்கட்டாவது செய்கிறாரா பார்க்கலாம்.