கண் குறைபாடுகளுக்கான லேசர் சிகிச்சை செயல்படும் விதம்
by வெங்கட் • July 13, 2006 • அறிவியல்/நுட்பம் • 4 Comments
நம் நண்பர்கள் செல்வராஜ், மூக்கு சுந்தர் இருவரும் லேசிக் சிகிச்சை செய்துகொண்ட தங்கள் அனுபவங்கள் குறித்து எழுதியிருந்தார்கள். இவர்கள் பதிவில் தோழி ஜெயஸ்ரீ-யும் அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். செல்வராஜின் விரிவான அனுபவப் பகிர்ந்தலையொட்டி கண்களின் குறைபாடுகள் (குறிப்பாக கிட்டப்பார்வை) நீக்க லேசர்கள் கொண்டு செய்யப்படும் லேசிக் சிகிச்சை செயல்படும் விதம் பற்றி எழுத வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நண்பர் கேட்டிருந்தார். நீண்ட நாட்களாக ஒத்திப்போட்டுக்கொண்டே வந்தேன். நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இதை விரிவாக விளக்கியிருக்கிறது. அற்புதமான படங்களும், சலனச்சித்திரங்களும் இருக்கின்றன. தவறாமல் (படித்துப்)பாருங்கள்.
கூடவே எழுதியிருக்க வேண்டியது;
இந்த விளக்கங்களில் சந்தேகங்கள் இருந்தாலோ, மேலதிகத் தகவல் தேவைப்பட்டாலோ எழுதவும். இயன்ற அளவு விளக்க முயற்சிக்கிறேன்.
நன்றி.
படிக்கும்போது(ம்) த்ரில்லாக இருக்கிறது.;-)
வெங்கட்: மணி பௌமிக்கின் ‘Code Name God’ படித்திருக்கிறீர்களா?
பத்ரி, காலம் தாழ்த்தி உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடுவதற்கு மன்னிக்கவும். கடந்த மூன்று நாட்களாக ஸ்காட்லாந்திலிருந்து வந்திருக்கும் என் நண்பர்களுடன் ஆளில்லாத தனித்தீவில் கழித்திருந்தேன். நேற்று பின்னிரவுதான் வீடு திரும்பினேன்.
இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டதுகூட இல்லை. அறிந்துகொள்ள/படிக்க முயற்சிக்கிறேன். தகவலுக்கு நன்றி.