என் வலைப்பதிவின் புதுவடிவம்
by வெங்கட் • February 17, 2006 • பொது • 1 Comment
கடந்த சில வாரங்களாக அதிகம் எழுதமுடியவில்லை. கடுமையான வேலைப்பளு ஒரு காரணம் என்றாலும் தளத்தின் சீரமைப்பில் ஏற்பட்ட பல பிரச்சனைகளும் கூடவே. BlogCMS -ல் அமைந்திருந்த தளம் சரியான ஆட்டம் செய்தியோடையைத் தராத காரணத்தால் தமிழ்மணம் என்னுடைய பதிவுகளை இற்றைப்படுத்தவில்லை. பின்னர் பல முயற்சிகளுக்குப் பின்னர் (இதில் உதவிய நண்பர் தேசிகனுக்கு என் நன்றிகள்) ஒருவழியாக BlogCMS-ன் அதிநவீன வடிவத்திற்குத் தளத்தை மாற்றிவிட்டு வந்தால் அது Atom 1.0 (இப்பொழுதைய செய்தியோடைத் தரம்) ஓடையைத் தருகிறது. ஆனால் தமிழ்மணத்திற்கு பழைய Atom 0.3 வடிவம் தேவைப்படுகிறது.
இதற்கிடையில் வேர்ட்பிரஸ்-க்கு மாறினால் என்ன என்று கொஞ்சம் யோசனை. என்னுடைய ஆங்கில வலைப்பதிவு ஏற்கனவே வேர்ட்பிரஸ்-ல்தான் இயங்குகிறது. இப்பொழுதிருக்கும் வலைப்பதிவு கருவிகளுக்குள்ளே வேர்ட்பிரஸ் உலகில்தான் அதி முக்கிய தொழில்நுட்ப முயற்சிகள் நடக்கின்றன. ஒற்றை நபரின் முயற்சியால் நடக்கும் ப்ளாக் சி எம் எஸ் நுட்ப முயற்சிகளை விரைவாக அறிமுகப்படுத்துவதில்லை. எனவே ஒரேயடியாக வேர்ட்பிரஸ்க்குக்கே போய்விடலாம் என்று முடிவெடுத்தேன்.
ஆனால் இதுவரை பழைய பதிவுகளை வேர்ட்பிரஸ்க்கு எப்படிக் கொண்டுவருவது என்று தெரியவில்லை. எனவே இன்னும் கொஞ்சம் நாட்களுக்குப் புதியன இங்கும் பழையவை தேக்கத்திலும் இருக்கும்.
வெங்கட்,
தமிழ்மணம் மற்றும் எனது தளத்தில் சில மாற்றங்கள் செய்த பின் இப்போது blogcms சரியாக வேலை செய்கிறது. wordpress நன்றாக இருக்கிறது ஆனால் blogcms தான் எனக்கு பிடித்திருக்கிறது. இப்பவும் நீங்கள் திரும்பவும் blogcmsக்கு தாவலாம். உதவி வேண்டும் என்றால் சொல்லுங்கள்
தேசிகன்