• அணுசக்தி மறுமலர்ச்சி காலம

    by  • February 23, 2006 • அறிவியல்/நுட்பம் • 9 Comments

    இம்மாத Physics Today செய்தியில் உலகம் முழுவதும் புது உத்வேகத்துடன் அணுசக்தி நிலையங்கள் கட்டப்பட்டுவருவதாக வெளியாகியிருக்கிறது. ஐந்து/பத்து வருடங்களுக்கு முன்பு “அணுசக்தி” என்றாலே கெட்ட வார்த்தையாக இருந்த நிலை மாறி இப்பொழுது விரிவடைந்துவரும் சக்தி தேவைக்கு ‘தற்சமயம்’ அணுசக்தியை விட்டால் வேறு நல்ல வழியில்லை என்று ஒத்துக் கொள்ளத் தலைப்பட்டிருப்பது ஆறுதலளிக்கும் விஷயம். (தற்சமயம் என்பதற்கான விளக்கம் பின்னால்).

    சமீபத்திய தரவுகளின்படி அமெரிக்கா:15, பிரிட்டன:6-8, பிரான்ஸ:4 ஜப்பான:5, இந்தியா:9, சீனா:30, கனடா:14 (12 புதியவை 2 புணரமைப்பு) கட்டிவருகின்றன. இவைத் தவிர ஈரான், அர்ஜெண்டினா, செக் குடியரசு, பிரேஸில், பல்கேரியா, சிலி போன்ற நாடுகளில் குறைந்தது 2 அல்லது அதிகபட்சம் ஐந்து அணு உலைகள் தயாராகி வருகின்றன. தற்சமயம் உலகின் 14 சதவீத சக்தித் தேவையை அணுசக்தி ஈடுசெய்கிறது. இது வரும் தலைமுறையில் அதிகரிக்கும்.

    அணுசக்தி பயன்பாட்டில் தேக்கம் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. செர்னோபில், மூன்றுமைல் தீவுபோன்றவற்றில் ஏற்பட்ட விபத்துகள் ஒருபுறமிருக்க, பெட்ரோலியம், நிலக்கரி போன்றவற்றினால் பயனடையும் இராட்சத சக்தியுற்பத்தி நிறுவனங்களின் பலம்பொருந்திய அரசாங்க அழுத்தங்களே அணு சக்தியைப் பல நாடுகளும் ஒத்திப்போடக் காரணமாக இருந்தன என்று சொல்வதில் தவறில்லை. ஒதுக்க முடியாது என்று தெரிந்துகொண்டு ஒத்திப்போட்டிருந்த இந்த திட்டங்களைப் பல நாடுகளும் மீட்டெடுக்கத் துவங்கியிருக்கின்றன். முதல் பத்தியில் ‘தற்சமயம்’ என்று நான் குறிப்பிட்டதற்குக் காரணமிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்ப சமாச்சாரங்களில் நிரந்தர ஒற்றைத்தீர்வு என்று எதுவுமே கிடையாது. வருங்காலத்தில் சீரமைப்பு சக்தி வழிமுறைக்ளான சூரியசக்தி, காற்றாலைகள், அலை சக்தித் திரட்டிகள் மற்றும் நுண்ணுயிரிகளின் துணையுடன் ஹைட்ரஜனை உற்பத்திசெய்யும் சக்தி முறைகள் என்பன பெரிய அளவில் முன்னேறக்கூடும். ஆனால் இன்றைக்கு இருக்கும் நிலையை வைத்துக் கொண்டு கணித்தால் இவற்றில் எதுவுமே பெரிய அளவிற்கு சக்தித் தேவைகளை நிவர்த்தி செய்வது அடுத்த ஐம்பதாண்டுகளுக்குச் சாத்தியமாகப் போவதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் அணுசக்தி ஒன்றுதான் தெளிந்த தீர்வாக இருக்கிறது. பொருளாதார ரீதியாகப் பார்த்தாலும் அணுசக்திதான் மலிவானது.

    அணுசக்திக்குத் தற்பொழுது இருக்கும் ஒரே போட்டி நிலக்கரியை எரித்து மின்சாரம் உற்பத்திசெய்யும் வெப்பமின் நிலையங்கள்தாம். பொது மக்களிடையே அணுவுலைகளுடன் ஓப்ப இவை சுத்தமானவை (சூழலை மாசுபடுத்துவதில்லை), இவற்றிலிருந்து கதிரியக்கம் கிடையாது என்ற தவறான தகவல்கள் இருக்கின்றன. உண்மையில் சூழலை மாசுபடுத்துவதில் வெப்பமின் நிலையங்களுடன் ஒப்பிட அணுமின் நிலையங்கள் பத்தில் ஒரு பங்குகூட ஆபத்தானவையல்ல. மறுபுறத்தில் அணுசக்தியின் கோரமுகமாக வருணிக்கப்படும் கதிரியக்கத்தில் நிலக்கரி கழிவுகள் சற்றும் சளைத்தவையல்ல. அணுமின் நிலையத்தின் கழிவுகளையாவது பத்திரமாக அடைத்து வைக்க முடியும், வெப்பமின் நிலையங்க்ளில் கதிரியக்கம் தீயுடன் சேர்ந்து காற்றில் கலந்து நம் எல்லோரையும் தாக்குகிறது.

    மறுவுருவாக்க சக்தி வழிகளான சூரியசக்தி, காற்றாலைகள் போன்றவை தனி இல்லங்களுக்கு சக்தியளிக்க முடியும் என்றாலும் தடையற்ற சக்தித் தேவையைக் கொண்டுள்ள தொழிற்சாலைகளுக்கு இவை பயன்படப் போவதில்லை. என்னைப் பொருத்தவரை இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அணுசக்தி ஒன்றுதான் தீர்வு. இதிலும் இந்தியாவில்தான் உலகிலேயே அதிக அளவு தோரியம் கிடைக்கிறது. அறிவியல் அடிப்படைகள் தெரியாமல் சூழலைப் பற்றி முழக்கமிடும் வெற்றுக்கூச்சல்களைக் காற்றில் விட்டு இந்தியா அணுசக்தியின் பக்கம் கவனத்தைத் திருப்பி பாதுகாப்பான அணு உலைகளை வடிவமைப்பதில் முனைய வேண்டும். இந்தியாவிடம் எரிபொருளை மீட்டுருவாக்கம் செய்யும் வேகப் பெருக்கி உலைகளுக்கான (Fast Breeder Reactors) தொழில்நுட்பம் ஏற்கனவே இருக்கிறது. இதில் இந்தியா கவனம் செலுத்துவது முக்கியம்.

    இதைப்பற்றிய மறுகருத்துகள் யாருக்காவது இருந்தால் பதிலளிக்கத் தயார். சந்தேகங்களும் வரவேற்கப்படுகின்றன.

    9 Responses to அணுசக்தி மறுமலர்ச்சி காலம

    1. raghs
      February 23, 2006 at 12:15 pm

      dear writer,
      am 100% with you, we need to create a mass awareness for this
      but still am not convinced that it is more safer than conventional energy sources.
      similarly world has to get a relief from petrol/diesel/kerosene an by products of petroleum , then only we can really think of full economic freedom for developing countries.

    2. venkat
      February 23, 2006 at 12:23 pm

      >but still am not convinced that it is more safer than conventional energy sources.

      ராக்ஸ் – வருகைக்கு நன்றி! உங்களுக்கு இருக்கும் விசனங்கள் குறிப்பாக என்ன என்று சொன்னீர்களானால் இயன்ற அளவு விளக்க முயற்சிக்கிறேன்.

      பலரும் “எல்லாம் சரிதான், ஆனா அணுசக்தின்னா ஆபத்துதான்” என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு விஷயமாக எடுத்துக் கூர்ந்து கவனித்தால் பல கவலைகள் விட்டுப் போகும் என்பது உண்மை.

    3. February 23, 2006 at 1:27 pm

      ஆனா இந்த தோரியம் விஷயத்துல வேகப் பெருக்கி உலையின் மாதிரி [prototype] கட்டினோமே அதுக்கு அப்புறம் ஏதாச்சும் முன்னேற்றம் உண்டா? இன்னும் நடைமுறை சிக்கல்கள் இருக்கறதா சொல்றாங்களே.

    4. venkat
      February 23, 2006 at 2:47 pm

      யக்ஞா, வேகப்பெருக்கி உலை முதன் முதலில் பூரணத்துவம் அடைந்தது 1985ல் (இருபது வருஷங்கள் ஓடிவிட்டன). 50 மெகாவாட் தரவேண்டிய இந்த உலை 10-12 மெகாவாட்களைத்தான் தருகிறது. இதற்குக் காரணம் தேவைக்கு அதிகமான முன்னெச்சரிக்கையுடன் இந்த உலையின் உள்ளுருளையை மிகச் சிறியதாகக் கட்டியதுதான் என்று ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

      இதை மடங்குப்பெருக்கி 500 மெகாவாட் உற்பத்தி செய்யும் உலையின் வடிவம் தயாரிக்கப்பட்டு 1998ல் முதல் சுற்று தரக்கட்டுப்பாடு முடிந்தது. 2002ல் துவங்கிய இரண்டாவது சுற்று தரக்கட்டுப்பாடு இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. இது விரைவில் ஒத்துக் கொள்ளப்பட்டு நடைமுறைபடுத்தப்படும் என்று தெரிகிறது.

      இந்த வடிவமைப்பு அற்புதமான வளர் நுட்பங்களைக் கொண்டது என்று பல நாட்டு அணுசக்தி நிபுணர்களும் சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடக்கவிருக்கும் அணுசக்தி ஒப்பந்தம் (இராணுவ மற்றும் பொதுநல உலைகளைத் தனித்தனியான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்துவது) உண்டானால் வேகப்பெருக்கி உலை விரைவுபடும்.

      ஆனால் நேற்று நடந்த பத்திரிக்கையாளர்கள் மாநாட்டில் பிரதமரின் அறிவியல் ஆலோசகர் சி.என்.ஆர். ராவ் (முன்னால் ஐஐஎஸ்ஸி இயக்குநர்) வேகப்பெருக்கி உலைகளைப் பொதுநல உலைகளாக அறிவிக்கமாட்டோம் என்று சொல்லியிருக்கிறார். இதற்கு அமெரிக்கா முறுக்கிக் கொள்ளக்கூடும். இன்னும் இரண்டு நாட்களில் இதைப் பற்றி எழுதுகிறேன்.

    5. February 23, 2006 at 4:45 pm

      நம்ம ஹோமி பாபா ஆரம்பிச்ச 3 Tier திட்டம் முழுமையாக செயல்படுத்த முடியாம இருக்கு இன்னமும். அதாவது Natural uranium, உபயோகிச்சு, கனடாவின் PHWR (Presssurise Heavy water Reactor) அணு உலைகள் முதல் கட்டம். பிறகு Fastbreed Ractor இரண்டாம் கட்டம். பிரகு அளவுக்கதிமா கேரள கடற்கரை பகுதியில கிடக்கிற Thorium த்தையும், முதல் அணு உலைகள் இருந்து கிடைச்ச byproduct புளுட்டோனியத்தையும் கலந்து உருவாக்கிய Nuclear Reactor fuelல கட்டற அணு உலைகள் மூன்றாவது கட்டம்னு ஒரு 35 வருஷத்துக்கு முன்னமே போட்டத்திட்டம், எதுவுமே உருப்படியா செயல்படாம போச்சு! அதாவது CANDU Reactor டெக்னாலிஜியை நம்ம கரச்சி குடிக்கிறதுக்கு முன்னமே குண்டு வெடிச்சு, கனடா நாட்டின் technological supportஐ முதல்ல இழந்தோம். பிறகு மெல்ல அவங்க பாதில விட்டுட்டு போன ராஜஸ்த்தான் அணுமின்நிலையத்த கட்டி முடிக்க 6 வருஷமாச்சு. பிறகு நமக்கு நாமே டெக்னால்ஜியை வளர்த்து 235 MWe அணு மின்நிலையங்களை கட்ட ஒவ்வொன்னுக்கும் 15 வருஷமாச்சு! ஏற்கனவே கட்டின அணுமின்நிலையங்கள்ல calandria Reactor vessel பழுதுப்பட்டு, கசிவு ஏற்பட்டு அதை ரிப்பேர் பண்ணி, derated capacity ல எல்லா reactorயும் ஓட்டினோம். Madras, Rajasthan, Narora, Gujarath, Tarapur னு எல்லா இடத்திலேயும் இதே நிலமை தான். 500MWe அணுமின் உலை நம்மலே ஆராய்ச்சி பண்ணி, Design பண்ணி கட்டுவோம்னு ஆரம்பிச்சு, 25 வருஷம் கழிச்சுதான் முதல் உலையையே கட்டுனோம். Fast breed test Reactor, கல்பாக்கத்தில கட்டி ஒட்ட 25 வருஷம் ஆச்சு! ஆனா அதை கமர்சியலா கட்ட திட்டங்கள் வரை தான் போனோம். அதற்கு மேற்கொண்டு வழி செய்ல. திடீர்னு, ரஷ்ய தொழில்நுட்பத்தை கொண்டு, PWR(Pressurised Water Reactor) கூடாங்குளத்தில கட்டி ஓடுச்சா என்ன்மோ தெரியல. ஆக பாபா போட்ட திட்டத்தை அவர் மறைவுக்கு பிறகு, நம்ம இந்திய அரசாங்கத்தின் சரியான் ஆதரவு இல்லாததால், எதுவே ஒழுங்க நடக்கல. இதற்கு என்ன காரணம், யாரு பொறுப்பு ஏத்துக்குவாங்க!. நீங்க சொல்ற ‘பெட்ரோலியம், நிலக்கரி போன்றவற்றினால் பயனடையும் இராட்சத சக்தியுற்பத்தி நிறுவனங்களின் பலம்பொருந்திய அரசாங்க அழுத்தங்களே’ காரணம்னு ஒரு வார்த்தையில சொல்லிட முடியாது. ஏன்னா, அமெரிக்கா காரன், ‘Advanced energy Intiative’ னு கத்த ஆரம்பிச்சோன, அவன் சுலுவா வாங்கி வந்த ‘Oil and Gas’ தங்கு தடையில்லம வர தடைப்பட்டோன, அவன் கத்திற பாடத்தை நாமும் கத்த ஆரம்பிக்கிறோம்! இது தான் நிதர்சன உண்மை!

    6. சமுத்ரா
      February 24, 2006 at 1:04 am

      வெளிகண்ட நாதர்,

      1974ல் குண்டுவெடிச்சதே ரொம்ப லேட்!

      என்.பி.டி கையெழுத்து ஆகறதுக்கு முன்னாடியே நாம் குண்டு வெடிச்சு இருந்தா இன்னைக்கி நாமும் என்.பி.டி ஒரு அனு ஆயுத நாடா இருந்து இருக்கலாம்.

    7. kasi
      February 26, 2006 at 2:49 am

      test, pl ignore

    8. Pingback: உள்ளும் புறமும்

    9. April 17, 2006 at 12:55 am

      The efficiency of the atomic energy is said to be 1.5%. what about Antimatter. This is said to be 100% efficient. Whether any progress happening in this area? Antimatter technoloy may be the ultimate energy source in the present scenario.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *