• பாடலைக் கண்டுபிடியுங்கள் - சோதனை

  by  • April 2, 2006 • இசை • 17 Comments

  நீண்ட நாட்களாக இடை நிறுத்தியிருந்த என்னுடைய இசைப் பதிவுகளைத் திரும்பத் துவக்கவிருக்கிறேன். வேர்ட்பிரஸ்ஸில் எம்.பி3 சோதனைக்காக இடப்படும் பதிவு இது. எனக்கு மட்டும் சோதனையாக இல்லாமல் உங்களுக்கும் சேர்த்து சோதனையாக்கியிருக்கிறேன்.

  Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

  கொடுக்கப்பட்டிருக்கும் முப்பது நொடிகளுக்கும் குறைவான இசைத் துணுக்கைக் கொண்டு என்ன பாடல் என்று கண்டுபிடியுங்கள். இந்தப் பாடலைக் குறித்து ஏற்கனவே ஒருமுறை நான் என் இசைப்பதிவொன்றில் எழுதியிருக்கிறேன். இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுவேன்.

  அப்படியே இசையை நன்றாகக் கேட்கமுடிகிறதா, ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்றும் அறியத்தாருங்கள்.

  17 Responses to பாடலைக் கண்டுபிடியுங்கள் - சோதனை

  1. April 2, 2006 at 1:08 am

   soRgame endrAlum athu nammuuru pOLa varuma...

  2. April 2, 2006 at 1:19 am

   Movie: Ooru Vittu Ooru Vanthu
   Song: Sorkame Entralum Athu Nam Oora Pola Varuma?

   Sariya?

   The music also sounds like "Malligaiye Malligaiye" song from "Periya Veetu Pannaikaran" (Karthick, I believe) movie.

  3. April 2, 2006 at 1:19 am

   "ஊரு விட்டு ஊரு வந்து" படத்தின் பாடல்... தலைவன் இளையராஜா-வின் இசையில் வந்த பாடல்... சொர்கமே என்றாலும்.... நன்கு கேட்க முடிகிறது. இது
   (ப்ளேயர்) எந்த முறையில் செயல் படுகிறது என்பதைச் சொன்னால்... நானும் கூட பாடல்களை பதிவு போடத்தொடங்கி விடுவேன்.

  4. April 2, 2006 at 1:27 am

   இன்ப அதிர்ச்சி...

   பதிலைப் போட்டுட்டு, இப்ப அந்தப் பாட்டைக் கேட்டேன்... ஹைய்யோ... என்ன பாட்டுங்க அது...... 'தமிழ் போல இனித்திடுமா..' எவ்வளோ உயரத்துக்குப் போவது? "காள ரெண்டு பூட்டி, கட்ட வண்டி மேச்சு..கானம் பாட வழியில்லையே.... லே என்னா lilt? தோண்ட தோண்ட இது போல முத்து எத்தனை வரப்போதுன்னு தெரியலையே எளயராசா..

  5. April 2, 2006 at 2:32 am

   சொர்க்கமே என்றாலும் அது கோயமுத்தூர் போல வருமா..

  6. April 2, 2006 at 3:02 am

   இசை துணுக்கு மிகவும் அருமை. தொழில்நுட்பததையும் விளக்கினால் நன்று.

  7. April 2, 2006 at 3:20 am

   இசை கேட்பதில் எந்தப்பிரச்சினையும் எனக்குத் தெரியவில்லை.

   பாடல் - இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே - சிங்காரவேலன், மொட்டையின் அற்புத இசை.

  8. rsl
   April 2, 2006 at 3:34 am

   சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர் போல வருமா ?

  9. April 2, 2006 at 3:45 am

   இசையை நன்றாகக் கேட்க முடிகிறது (ஃபயர்பாக்ஸ் உலாவி).

   சொர்க்கமே என்றாலும்... ஞாயத்துக்கிழமையன்னிக்கு ஊர் ஞாபகத்தைக் கிளப்பிவிடுறீங்களே...

  10. sankarmanicka
   April 2, 2006 at 9:03 am

   ஆப்பிள் மாகின்தோஷ் 'ல் உள்ள சபாரி உலாவியிலும் நன்றாகவே பாடல் கேட்கிறது.

   நன்றி,
   ஷங்கர்.

  11. April 2, 2006 at 11:23 am

   ஃப்ளாஷ் பிளக்-இன் எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. உங்க பாட்டின் கோப்பு இருக்குமிடம் மறைக்கப்படாமல் இருக்கு, பரவாயில்லையா?

  12. April 2, 2006 at 12:28 pm

   என்னங்க...இந்தப் பாட்டு தெரியாதா.........சொர்க்கமே என்றாலும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது நம்மூரப் போல வருமா...............எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு இது.

  13. venkat
   April 2, 2006 at 5:00 pm

   சரியாக விடை சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

   இந்தச் சோதனைப் பதிவை எழுதிய முகூர்த்தம் இன்று முழுவதும் ஓய்வே கிடைக்கவில்லை. கடுங்குளிர் முடிந்து முதன் முறையாக 18 செல்சியஸ் 'கடும் வெப்பம்' இருந்ததால் நாள் முழுவதும் தோட்டத்தைச் செப்பனிடவே சரியாகப் போனது. நண்பர்கள் மன்னிக்கவும்.

  14. venkat
   April 2, 2006 at 5:03 pm

   சுரேஷ் - இன்னும் என்னை - தவறான விடை. ஆனாலென்ன இந்தப் பாடலையும் பற்றி ஒரு பதிவு எழுதத்தானே போகிறேன்.

  15. venkat
   April 2, 2006 at 5:05 pm

   சங்கர் மாணிக்கம் - ஆப்பிள்/ஸஃபாரி பற்றி சொன்னதற்கு உங்களுக்கு ஸ்பெஷஸ் தேங்க்ஸ். வேறு யாரும் இதைச் சொல்லியிருக்க மாட்டார்கள்.

   யக்ஞா - தெரிந்தால் தெரிந்துவிட்டுப்போகிறது :) இந்த ஃப்ளாஷ் சமாச்சாரத்தைப் போட்டதற்குக் காரணம் வேறு பொதியைத் தேடாமல் உலாவியிலிருந்தே கேட்டு விட்டுப் போகலாம் என்பதுதான்.

   நாகராஜன் - தொழில்நுட்பத்தை விரைவில் விவரிக்கிறேன்.

  16. rajasaranam
   April 6, 2006 at 12:25 pm

   nandri Venkat,
   Intha isai thunukku matrum paadal patriya vivaranaikku.
   Suresh pondrae intha thunukku kaetathum satendru ninaivil vantha paadal 'innum ennai enna seiya pogiraai thaa' Yaeno irandu isai korvaiyilum etho thodarbu irupathu pol thondrugirathu enakku?!! isai aringyan illai naan-Vilakkam thaarungal.
   Melum ethirpaarkiraen Raajavai patriya pathivugalukku.
   thozhamaiyudan
   rajasaranam

  17. January 9, 2010 at 2:07 am

   இந்த பாடலின் முழு வரிகளும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு
   Google Search அடிக்கப்போய்,தங்கள் வலைப்பதிவில் வந்து
   விழுந்தேன். இந்த இசைத்துணுக்கினை பதிவிறக்கம் செய்து கொண்டேன்.நன்றி.நன்றாகக் கேட்க முடிகிறது.பிரச்சினை ஏதுமில்லை.

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *