பாரதி கிருஷ்ணகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த ‘ராமய்யாவின் குடிசை’ என்ற ஆவணப்படம் டொராண்டோ நகரில் காலம் சிற்றிதழால் திரையிடப்படுகிறது. தமிழக வரலாற்றில் படிந்த துயர சம்பவமான கீழ்வெண்மணி கொலைகள் குறித்த பல சரித்திர உண்மைகளை வெளிக்கொணரும் இந்த ஆவணப்படம் மிகவும் முக்கியமானது. 36 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாதிக்கொடுமை கொலைகளின் பின்னணியையும் கோரத்தையும் 64 சாட்சியங்கள், மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் மூலம் பாரதி கிருஷ்ணகுமார் திறமையாக தெளிவுபடுத்தியிருப்பதாக இந்த ஆவணத்தைக் குறித்த விமர்சனங்கள் பாராட்டுகின்றன.

இத்திரையிடலின் கூடவே டேமியன் சூரியின் இயக்கத்தில் ஏகலைவன் என்ற நாட்டுக்கூத்தும் நிகழ்த்தப்படவிருக்கிறது.

ராமய்யாவின் குடிசை
கீழவெண்மணி குறித்த ஆவணப்படம்
இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார்

ஏகலைவன்
நாட்டுக்கூத்து
இயக்கம்: டேமியன் சூரி

இடம் : ஸ்கார்புரோ சிவிக் செண்டர்

நாள் : மார்ச்சு 12, 2006

காலம்: மாலை 6:00 மணி

அனுமதி : $5.00

புகையோடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்
குருவிகள் இவை என்றார்
குழந்தைகள் இவை என்றார்
பெண்களோ இவைகள்? காளைக்
கன்றுகள் இவைகள் என்றார்

இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரீகம் ஒன்று நீங்க

ஞானக்கூத்தன்

ராமையாவின் குடிசை – குறித்த பத்ரியின் பதிவு