இவ்வார இறுதி வாஷிங்க்டன் போஸ்ட் சீனாவும் வத்திகானும் பரஸ்பர புரிந்துணர்வு, ஒத்துழைப்பு ஒப்பதங்களில் ஈடுபடவிருப்பதாகத் தெரிவிக்கிறது (China-Vatican Edge Toward Accord)

இந்த ஒப்பந்தத்தின்படி சீனாவிற்கான கத்தோலிக்க பிஷப்புகள் வத்திகானால் நியமனம் செய்யப்பட்டு சீனாவின் கம்யூனிஸ(!?) தலைமையினால் ஆசிர்வதிக்கப்படுவார்களாம். கத்தோலிக்கத்தை முன்னிருந்தி புரட்சியில் ஈடுபடும் பிஷப்புகள் சீனா அடையாளம் காட்ட வத்திகான் அவர்களை நீக்கும் என்றும் தெரிகிறது.

சீனா இரட்சிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. கேட்கவே அற்புதமாக இருக்கிறது. கம்யூனிஸமும் கடவுளும் (கத்தோலிக்கமும்) கைகோர்த்தால் சாத்தியமாகாதது எதுவுமில்லை என்று தோன்றுகிறது.