இந்த மாதக் காலச்சுவடு கணினி சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது.  இதில் லினக்ஸ், தளையறு மென்கலன், திறமூலம் குறித்த என்னுடைய பேட்டி வெளியாகியிருக்கிறது.   சில மாதங்களுக்கு முன்னரே காலச்சுவடு என்னிடம் இதுபற்றி கேட்டிருந்தபொழுதும் இதழை முடிவு செய்ய ஒருசில தினங்களுக்கு முன்னரே எனக்கு இன்னும் ஒரு வாரத்தில் வேண்டும் என்று கேள்விகள் அனுப்பப்பட்டன.   என்னுடைய வேலைப்பளுவின் காரணமாக காலக்கெடு முடிவடைந்தபிறகு மறு இரவில் உட்கார்ந்து பதில்களை எழுதியனுப்பினேன்.  இன்னும் கொஞ்சம் பொறுமையாகச் செய்திருந்தால் நன்றாக வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.   (இதழ் இன்னும் கையில் கிடைக்கவில்லை.  என்னுடைய பேட்டியின் பக்கங்களை மாத்திரம் நண்பர் உமா மகேஸ்வரன் அலகிட்டு அனுப்பியிருக்கிறார்).

மிக முக்கியமான விஷயம்:  என்னுடைய பதில்கள் இடம் கருதி சுருக்கப்பட்டிருக்கின்றன.   மிக முக்கியமான சில இடங்களில் இந்தச் சுருக்கம் சில தவறான புரிதல்களுக்கு வழிதரக்கூடும்.     எனவே வரும் நாட்களில்  என்னுடைய முழு பதில்களையும் இங்கே வலையேற்றுகிறேன்.