மினிஸோட்டா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை ஆராய்ச்சி ஒன்றில் அமெரிக்கர்கள் எல்லோரையும்விட நாத்திகர்களைப் பெரிதும் நம்பவில்லை என்று தெரியவந்திருக்கிறது.   (U of M study reveals America’s distrust of atheism)

From a telephone sampling of more than 2,000 households, university researchers found that Americans rate atheists below Muslims, recent immigrants, gays and lesbians and other minority groups in “sharing their vision of American society.” Atheists are also the minority group most Americans are least willing to allow their children to marry.

எனக்கொன்றும் இந்த முடிவு வியப்பைத் தரவில்லை.    கடவுளுடன் அவ்வப்பொழுது உரையாடல்கள் நடத்தும், கடவுளின் ஆணைப்படி போர் தொடுக்கும் ஒரு குடியரசுத் தலைவரைப் பொறுத்துக்கொள்ளும் நாட்டில் நாத்திகர்கள் வெறுக்கப்படுவது நியாயம்தானே.

அதாவது முஸ்லீம்கள், புதுக் குடிவரவாளர்கள்,  தற்பாலர்கள், இன்னும் சொச்சமிச்ச சிறுபான்மைக் குழு எல்லாவற்றையும் விட நாத்திகர்களே அபாயகரமானவர்களாம்.   இந்த இலட்சணத்தில் அமெரிக்காவில் தொடர்ச்சியாக  முஸ்லீம்கள் தற்பாலர்கள் இவர்களுக்கு எதிராக நிறுவனமயமாக்கப்பட்ட, அரசு ஆதரவு பெற்ற பிரச்சாரம் வேறு இருக்கிறது.  நாத்திகர்களை இலக்குவைத்து எந்த அரசுப் பிரச்சாரமும் நடப்பதாகத் தெரியவில்லை.  முழு மூச்சாகப் பரிணாமத்துக்குப் போட்டியாக படைத்தலைப் பள்ளிகளில் போதிக்க ஆரம்பதித்த பிறகு அதில் கல்விபெற்று வரும் தலைமுறையினர்  நாத்திகர்களைக்  கழுவேற்றுவார்கள் என்று நம்பலாம்.