நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்த Hitchhiker’s Guide to the Galaxy (H2G2) திரைவடிவம் வரும் ஏப்ரிலில் வெளியாகவிருக்கிறது.

இன்றைக்கு அமேசான்.காமில் இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் கதையிலிருந்து இது மாறுபட்டிருக்கும் என்று சொல்கிறார்கள். (டக்ளஸ் ஆடம் வானொலி நாட்கம், புத்தகம், திரைப்படம் இவற்றின் வடிவங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருக்க வேண்டும் என்று சொன்னார். முடிந்தால் ஒன்றுக்கொன்று முரண்படுவதும் நல்லது என்று விரும்பினார்). எனவே திரைவடிவத்தில் நிறைய புதுமைகளை எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

முன்னோட்டத்தில் இருப்பதைப் பார்த்தால் நடிகர்கள் தேர்வு நன்றாகத்தான் இருக்கிறது. குறிப்பாக ஆர்தர் பாத்திரத்திற்கு மார்ட்டின் ஃப்ரீமன் சரியாகப் பொருந்துகிறார்.

ம்ம்.. ஆவலைத் தூண்டுகிறது. முடிந்தால் உடனடியாகத் திரையரங்கில் துண்டு போட்டுவிட வேண்டியதுதான்