நேற்று எங்களுடைய ஆய்வகத்தில் டிஸ்கவரி சேனலின் Daily Planet நிகழ்ச்சிக்காக The Science of Star Wars என்ற ஒரு சிறிய நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டது. நேற்று இரவு இது முதன்முறையாக ஒளிபரப்பானது. (நேற்று முழுவதும் என்னுடைய ஆய்வகப் பொந்திலிருந்த வேலைப்பளுவினால் என்னால் இதைப் பார்க்க முடியவில்லை). என்னுடைய சகாவான மார்க் நான்டெல் (Marc Nantel) பங்குபெறுகிறார். இது எங்களுடைய Ultrafast Laser Micromachining Facility -ல் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. பொதுவில் இந்த Daily Planet நிகழ்ச்சி பலமுறை வெவ்வேறு தொலைக்காட்சிகளினால் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இன்றுகூட ஒளிபரப்பாகலாம். யாராவது பார்த்துவிட்டு எப்படியிருந்தது என்று சொல்லவும்.

சென்ற வருடம் என்னுடைய ஆய்வகத்தின் ஒரு பகுதியான Microraman Spectroscopy Facility -ல் டிஸ்கவரி Photonic Crystals – The Semiconductors of Light என்ற ஒரு மணிநேர நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்தார்கள். அது எனக்குத் தெரிந்து இன்னும் திரையிடப்படவில்லை. இதில் சம்பந்தப்பட்ட எங்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர் சஜீவ் ஜான் – க்கு இந்த வருடமோ இன்னும் சில வருடங்களுக்குள்ளாகவோ நோபல் பரிசு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒருக்கால் டிஸ்கவரி அதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறதோ என்று தெரியவில்லை.