• Cerebration – Ultimate Jeopardy

    by  • May 23, 2005 • பொது • 0 Comments

    <%image(20050523-jeapardy_finalists.jpg|345|144|Jeopardy finalists)%>

    நான் அதிகம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது கிடையாது. ஆர்வத்துடன் பார்க்கும் மிகச்சில நிகழ்ச்சிகளில் ஜெப்பர்டியும் ஒன்று. இப்பொழுது இதில் Ultimate Tournament of Champions நடக்கிறது. எட்டு மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக வெற்றிபெற்று 2.5 மில்லியன் டாலர்களுக்கு மேலாகப் பரிசு பெற்ற கென் ஜென்னிங்க்ஸ்-உடன் மோத பல முன்னாள் சாம்பியன்கள் அழைக்கப்பட்டனர். இந்தத் தொடரை நான் ஆரம்பம் முதலே ஒன்று விடாமல் பார்த்து வருகிறேன். இதில் எங்கள் உள்ளூர் (ஓக்வில், ஒண்டாரியோ) ஆளும் ஒருவர் – மைக்கேல் டாண்ட் – இருந்தார். இதைத் தவிர இரண்டு நம்மாட்கள் இருந்தனர் (பாபு ஸ்ரீனிவாசன், வினிதா கைலாசநாத் – இருவரும் முதல் சுற்றில் தோற்றுவிட்டனர்). எனக்கு ஆரம்பம் முதலே ப்ராட் ரட்டர்மீது நிறைய நம்பிக்கை இருந்தது. கிட்டத்தட்ட கென் ஜென்னிங்கஸைப் போலவே இவருக்கும் மிக விரைவாகப் பதில் சொல்லும் திறமையிருக்கிறது. கால் இறுதி வந்தவுடன் நான் எதிர்பார்த்தவர்கள் இரண்டு பேர் ஒருவர் பாம் முயெல்லர் மற்றவர் ஜெரோம் வெரெட். இதில் பாம்-தான் இறுதிப்போட்டிக்கு வருவார் என்று நினைத்திருந்தேன். ஜெரோமிற்குத் துல்லியமான தெரிந்தெடுக்கும் திறமையிருக்கிறது. இவர் அதிகம் தவறாகச் சொல்வதில்லை. பொத்தானை அழுத்தினால் பெரும்பாலும் சரியான விடைதான். இதுவே அவரது அரையிறுதி வெற்றிக்கு உதவியது.

    இன்றைக்கு மூன்று போட்டித் தொடரில் முதலாவது முடிந்துவிட்டது. இப்பொழுது ப்ராட் ரட்டர் முதலிடத்திலும், ஜெரோம் வெரெட் இரண்டாமிடத்திலும் கென் ஜென்னிங்க்ஸ் மூன்றாமிடத்திலும் இருக்கிறார்கள். ஆனால் வித்தியாசம் $1,800 தான். போட்டி இன்னும் சுவாரசியமாக மாறியிருக்கிறது. இன்றைய கேள்விகள் மிகவும் சிக்கலானவை. ஆனால் என்னால் அமெரிக்க உள்ளூர் சமாச்சாரம், பைபிள் தவிர்த்த கேள்விகளில் பாதிக்கும் மேலாக விடை சொல்ல முடிந்தது. என்னுடைய பணம் – ப்ராட் ரட்டருக்குத்தான், ஆனால் கென் ஜென்னிங்க்ஸ் மிக மிக அருகில் இரண்டாமிடத்தில் வரலாம் (அல்லது அதே மாதிரி இடைவெளியில் முதலிடத்தில்). பார்க்கலாம்.

    மேலுள்ள படத்தில் பாப் ரட்டர், ஜெரோம் வெரெட், கென் ஜென்னிங்க்ஸ் (இடமிருந்து வலம்)

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *