• Archive for December, 2005

    இந்தியா இந்தியா

    by  • December 30, 2005 • பொது • 5 Comments

    நீண்ட நெடும்பயணத்தின் பின் பெங்களூர் வந்து கிட்டத்தட்ட மூன்று நாட்களாகப் போகின்றன. முன்னெப்போதும் இல்லாதவகையில் மிக மோசமான பயணக்களைப்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது. வேறெந்த பயண சாத்தியமும் இல்லாமற்போக பயந்துகொண்டே ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானத்தில் வந்தாக வேண்டியிருந்தது. வாழ்க்கையின் மிக மோசமான விமானப் பயணம் இது (கிட்டத்தட்ட பிஹாரில் முன்பு ஒருமுறை மேற்கொண்ட இரயில் பயணத்தைப் போலவே). இதில் சில அற்புத நகைச்சுவை தருணங்களும் அடக்கம். மாஸ்கோ விமான நிலையம், ஏரோஃப்ளோட் விமானம் இவற்றையெல்லாம் பற்றி விரிவாக ஊர் திரும்பிதான் [...]

    Read more →

    இந்தியப் பயணம்

    by  • December 25, 2005 • பொது • 14 Comments

    நாளை இங்கிருந்து கிளம்பி இந்தியா செல்லவிருக்கிறேன். கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளிக்குப் பின் இந்தியா திரும்புவது மிகுந்த எதிர்பார்ப்பைத் தருகிறது. இதற்கு முந்தைய பயணத்தில் ஒரு வாரம்தான் இந்தியாவில் செலவிட்டிருந்தேன். இந்த முறை மூன்று வாரங்கள் சாத்தியமாகியிருக்கிறது. இதில் முதல் பத்து நாட்களை பெங்களூரிலும் மீத நாட்களை சென்னையிலும் செலவிட உத்தேசம். (சென்னையிலிருந்து இடையில் ஒன்றிரண்டு நாட்கள்கும்பகோணம், தஞ்சாவூர் செல்லக்கூடும்; இன்னமும் முடிவாகவில்லை).

    Read more →

    மோகன்குமார், ரோசா வஸந்த் – குவாண்டம் கணினி தொடர்பாக

    by  • December 22, 2005 • அறிவியல்/நுட்பம் • 7 Comments

    மோகன்குமாரின் குவாண்டம் கணிப்பு குறித்த வலைப்பதிவில் என் பின்னூட்டத்தைப் பற்றி ரோசா வஸந்த இப்படி ஆச்சரியம் தெரிவித்திருக்கிறார்; ‘குவாண்டம் கணணி’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய வெங்கட் பதிவை ஒழுங்காய் படித்தாரா என்று தெரியவில்லை. படித்துவிட்டு பாராட்டியிருந்தால் ரொம்பவே கஷ்டம்தான். ஒழுங்காய் படித்திருக்க மாட்டார் என்று மிகவும் நம்புகிறேன். (அதனால் படிக்காமல் பாராட்டியிருந்தால் கொஞ்சம் குறைவான கஷ்டம் மட்டுமே).’… …வெங்கட்டும் வந்து பாராட்டியிராவிட்டால் நான் எழுதியிருக்கவே மாட்டேன்… …மோகன் எழுதியது அப்பட்டமான ஒளரல் என்பதை, ஏற்கனவே சொன்னதுபோல், [...]

    Read more →

    மருந்து களப்பரிசோதனை: இந்தியச் சந்தையும் மோசடிகளும்

    by  • December 19, 2005 • பொது • 0 Comments

    Wired தளத்தில் இன்றைக்கு வெளியாகியிருக்கும் செய்தி மிக முக்கியமானது. சமீபத்திய இந்தியப் பொருளாதாரப் பெருவளர்ச்சியின் மிக முக்கியமான கோரமுகத்தை அடையாளம் காட்டுகிறது இந்தக் கட்டுரை. பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் புது மருந்துகளின் களப்பரிசோதனைக்கு இந்தியர்களை பலிகடாவாக்குகின்றன. மேற்கத்திய நாடுகளில் புது மருந்துகளைச் சோதனை செய்வதில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. என் ஆய்வகம் இருக்கும் அதே தெருவில் பல சிறு நிறுவனங்கள் இந்த மருந்துக் களப்பரிசோதனைகளில் பெயர் பெற்றவை. டொராண்டோ மாநகரம் உலகிலேயே மிக அதிக அளவு [...]

    Read more →

    கனேடியத் தேர்தல் பிரச்சாரம் – முதல் வாரப் போக்கு

    by  • December 16, 2005 • கனடா • 2 Comments

    கனேடியப் பாராளுமன்றக் கலைப்பு மற்றும் தேர்தல் குறித்த என்னுடைய முந்தைய பதிவு. தேர்தல் பிரச்சாரம் துவங்குவதற்கு முன்னால் என்னுடைய கருத்துக்களை எழுத நினைத்திருந்தேன். நேரம் கிடைக்கவில்லை. பிரச்சாரம் துவங்குவதற்கு முன்பு என்னுடைய கணிப்பில் பால் மார்ட்டினின் லிபரல் கட்சியும் (கலைக்கப்பட்ட அரசு) ஸ்டீவன் ஹார்ப்பரின் கன்ஸர்வேட்டிவ் கட்சியும் சமநிலையில் இருக்கின்றன. புதிய ஜனநாயகக் கட்சி தன் நிலையை முன்னேற்றிக் கொள்ளக்கூடும். க்யூபெக் மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக பிரிவினைவாதக் கட்சியான பார்ட்டி க்யூபெக்வா அள்ளிச் செல்லப்போகிறது (இருந்தபோதும் க்யூபெக் [...]

    Read more →

    குட்டிக் கணக்குப் போடுங்களேன்

    by  • December 16, 2005 • நகைச்சுவை • 6 Comments

    வலைப்பதிவுகளில் எல்லோரும் 1=2 என்று நிரூபிக்கும் கணக்குகளையெல்லாம் அவ்வப்பொழுது போட்டு வருகிறார்கள் (நேற்று ரஷ்யா இராமநாதன்). நமக்கு அதெல்லாம் வேண்டாம். வாரக்கடைசில ஒரு சின்ன கூட்டல் கணக்கு போடுவோம்; ஆயிரத்து முப்பதும் ஆயிரத்து முப்பதும் கூட்டுங்க அதோட ஒரு முப்பது கூட்டுங்க அதோட ஒரு பத்து கூட்டுங்க எவ்வளவு? (நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்க, முதல் தடவைல சரியான விடை சொன்னீங்களா?).

    Read more →

    கர்நாடகக் காவல்துறையின் வலைப்பதிவு

    by  • December 13, 2005 • நகைச்சுவை • 14 Comments

    கர்நாட்க அரசின் காவல்துறையினர் வலைப்பதிவைத் துவங்கியிருக்கிறார்கள் என்று பிரகாஷ் வலைப்பதிவில் எழுதியிருந்தார். அடுத்த வார விகடனின் இப்படி வரலாம்; சமீபத்தில் கர்நாடக அரசின் காவல்துறை ஒரு பிளாக்கை ஆரம்பித்திருப்பதாகச் சொல்லி நெட்டில் வெட்டிப்பேச்சு பேசுபவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அமெரிக்கா போஸ்ட்-டாக்களையும் சியாட்டிலில் கம்யூட்டர் ஜாபிதா எழுதும் சிலரையும்போல கர்நாடாகா போலிஸும் வெட்டியாக இருக்கிறது போலிருக்கிறது. வீரப்பன் ஒழிந்த பிறகு இவர்களுக்கெல்லாம் நிறையவே நேரம் இருக்கிறது. கொஞ்சம் வேளச்சேரி பக்கம் வந்தால் பள்ளத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரை இறைத்துக் கொடுத்து [...]

    Read more →

    தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – பதின்மூன்று

    by  • December 11, 2005 • இசை • 3 Comments

    இந்தத் தொடரின் முடியும் கட்டத்தில் ஜாஸின் அடிப்படை பாதிப்புகளைக் கொண்டு வேற்று இசைகளின் வடிவங்களையும் கொண்ட ஒன்றிரண்டு பாடல்களைப் பார்க்கலாம். பாடல் : தேடினேன் வந்தது… படம் : ஊட்டி வரை உறவு (1967) பாடியவர்: பி.சுசீலா பாடலாசிரியர் : கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் [Audio clip: view full post to listen]

    Read more →

    மங்களாம்பா விலாஸில் திருடியது

    by  • December 9, 2005 • நகைச்சுவை • 5 Comments

    எங்கள் ஊரில் (கும்பகோணம்) மங்களாம்பா விலாஸ் என்ற பிரபலமான ஹோட்டல் ஒன்று இருந்தது. அங்கிருந்த பாத்திரங்களிலெல்லாம் “மங்களாம்பா விலாஸில் திருடியது” என்று பொறித்து வைத்திருப்பார்கள். டம்பளர் டபராவில் ஆரம்பித்து (அந்த நாட்களில் ஸ்பூனை வாயில் நுழைத்துக்கொண்டு சாப்பிடும் வழக்கமெல்லாம் கிடையாது, எனவே மிகச் சிறிய பாத்திரம் டம்ளர்தான்), அண்டா, இட்லிச்சட்டி வரை எல்லாவற்றிலும் அப்படி எழுதியிருக்கும். சாப்பிட வந்தவர்கள் நல்ல கனமான பித்தளையில் இருக்கும் பாத்திரங்களை ‘லவுட்டி’ வேட்டியில் கட்டிக்கொண்டு போய்விடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    Read more →

    தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – பன்னிரண்டு

    by  • December 4, 2005 • இசை • 5 Comments

    இன்னும் இரண்டு வாரங்களில் இந்தத் தொடர் முடியும் என்ற நிலையில் ஒரு தவிர்க்க முடியாத இடைவெளி. நான் ஏற்கனவே எழுதியிருந்ததைப் போல இளையராஜாவின் நீண்ட தமிழ்த் திரையிசை வரலாற்றில் மிகத்தாமதமாகத்தான் அவருடைய ஜாஸ் முயற்சி நடந்திருக்கிறது. இந்தத் தொடரை வாசித்துவரும் பலராலும் இதை நம்பவே முடியவில்லை. இன்னும் சிலபேர் புன்னகை மன்னன் (கவிதை கேளுங்கள்), மௌனராகம் (மன்றம் வந்த தென்றலுக்கு) போன்ற இளையராஜா பாடல்கள் ஜாஸ் வகையைச் சேர்ந்தவையா என்று கேட்டிருந்தார்கள். இல்லை. மன்றம் வந்த தென்றலுக்கு [...]

    Read more →