• Archive for November, 2005

    புத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல்

    by  • November 8, 2005 • இலக்கியம் • 27 Comments

    (நரிக்குறவர் இனவரைவியல், கரசூர் பத்மபாரதி, முதல் பதிப்பு, டிசம்பர் 2004, தமிழினி, சென்னை -14, விலை ரூபாய் 160) தமிழில் இனவரைவியல் (ethnography) நூல்கள் அதிகம் வெளிவருவதில்லை (பொதுவில் சமூகவியல் நூல்கள் தமிழில் பதிப்பிக்கப்படுதல் மிகக் குறைவு), இந்த நிலையில் செல்வி பத்மபாரதியின் புதுச்சேரி பல்கலைக்கழக பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையை முழு இனவரைவியல் நூலாகப் பதிப்பித்திருப்பது முதலாகப் பாரட்டப்பட வேண்டிய காரியம். தொல்குடியினரான நரிக்குறவர்கள் வேளாண் கலாச்சாரத்திற்கு முந்துபட்ட வேட்டைக் கலாச்சாரத்தை அடியொற்றி வாழ்பவர்கள். வடக்கிலிருந்து (குஜராத்) [...]

    Read more →

    அஞ்சலி – ரிச்சர்ட் ஸ்மாலி (1943-2005)

    by  • November 6, 2005 • அறிவியல்/நுட்பம் • 5 Comments

    Buckey Ball, Buckministerfullerene, C60 என்ற புதிய கார்பன் வடிவமைப்பிற்காக 1996ஆம் ஆண்டின் நோபெல் பரிசைப் பெற்ற பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்மாலி (Richard Smalley) 28 அக்டோபர் 2005 அன்று காலமானார். டெக்ஸஸ் மாநிலத்தின் ரைஸ் பல்கலைக்கழகத்தில் அறுபது கார்பன் அணுக்களால் ஆன C60 என்ற மூலக்கூறினை உருவாக்கியதன் மூலம் நானோநுட்பம் என்ற சின்னஞ்சிறு அற்புத உலகத்திற்கு செயல்வடிவம் கொடுத்தவர்களுள் ஒருவர் ஸ்மாலி. கோடிக்கணக்கான மூலக்கூறுகள் கார்பனால் ஆனவை, குறிப்பாக உயிர்மூலக்கூறுகள். வேறெந்த தனிமமும் இத்தனை மூலக்கூறுகளை [...]

    Read more →

    CBSE : ஒற்றைப் பெண் குழந்தைக்கு இலவசக் கல்வி

    by  • November 5, 2005 • பொது • 35 Comments

    சமீபத்தில் இந்தியாவின் மத்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வி குழுமம் ஒற்றை பெண் குழந்தைகளுக்கு தனது மத்திய பள்ளிகளில் இலவசக் கல்வி தருவதாக அறிவித்திருக்கிறது. ஒற்றைக் குழந்தையாக இருந்தால் முழு உதவியும், இரண்டு பெண்குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் பாதி உதவியும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. வீட்டில் ஒரு ஆண் குழந்தை இருந்தால் கூட இந்தத் தகுதி கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இருக்கும் பராபட்சத்திற்குப் பரிகாரமாக இந்த உதவி இருக்கும் என்று [...]

    Read more →

    நோபெல் பரிசு :: இயற்பியல் – பகுதி மூன்று

    by  • November 4, 2005 • அறிவியல்/நுட்பம் • 8 Comments

    இதன் {முதல் பகுதி} {இரண்டாம் பகுதி} லேசர் கடிகாரம் இதைத் தவிர்க்க லேசர்களால் ஆன கால அளவீட்டை நிர்ணயிக்கத் தொடங்கினார்கள். இதற்கு உறுதுணையாக இருந்தது அதிகுறை அதிர்வு லேசர்கள், இவற்றில் வெளியாகும் லேசர் அதிர்வுகள் ஃபெம்டோ நொடி (Femtosecond) அளவிலானவை (ஒரு நொடியின் மில்லியனில் ஒரு பங்கு மைக்ரோ (micro), இது 10-6, ஆயிரம் மில்லியனில் ஒரு பங்கு நானோ (nano), 10-9, தொடர்ந்து 10-12 என்பதை பிக்கோ (pico) என்றும் 10-15 என்பதை ஃபெம்டோ நொடி [...]

    Read more →

    நோபெல் பரிசு விளக்கக் கட்டுரைகள்

    by  • November 2, 2005 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    சில வாரங்களாக வேலைப்பளு பயணங்கள் போன்றவை வலைப்பதிவுகளுக்கு அருகில் வரவிடுவதில்லை. சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் நோபெல் பரிசுகளைப் பற்றிய விளக்கக் கட்டுரைகளை எழுத உத்தேசம். முதலாவதாக இயற்பியல் பரிசினைப் பற்றிய கட்டுரையை இன்று துவங்கியிருக்கிறேன். இந்தக் கட்டுரைகள் சற்றே அடர்த்தியாக இருக்கும். அறிவியலில் அதிமுக்கிய பரிசாக நோபெல் கருதப்படுகிறது. நம்மில் பலர் அதைப் பற்றிய புரிதலையும், அறிவியல் செல்லும் போக்கையும் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. ஏதோ என்னாலானவகையில் தமிழில் இவற்றைப் பற்றிய கட்டுரைகளை எழுத உத்தேசம் [...]

    Read more →

    நோபெல் பரிசு :: இயற்பியல் – பகுதி ஒன்று

    by  • November 2, 2005 • அறிவியல்/நுட்பம் • 2 Comments

    < %image(20051102-laureates.jpg|405|179|இயற்பியல் நோபெல் 2005)%> உலகம் முழுவதும் இயற்பியல் ஆண்டாகக் கொண்டாடப்படும் இந்த வருடம் (2005)ல் இயற்பியலுக்கான அதிமுக்கியத்துவம் வாய்ந்த நோபெல் பரிசு ஒளியியல் துறையச் சேர்ந்த மூன்று அறிவியலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பரிசுப் பணத்தில் சரிபாதியை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் (அமெரிக்கா) பேராசிரியர் ராய் க்ளாவ்பர் (Roy Glauber) ஒளியின் அடிப்படை குறித்த நியதிகளை வரையறுத்ததற்காகப் பெறுகிறார். மறுபாதி ஒளியைப் பயன்படுத்தி காலத்தைத் துல்லியமாக அளக்கும் முறையைக் கண்டுபிடித்ததற்காக கொலராடோ பல்கலைக்கழகத்தின் (அமெரிக்கா) பேராசிரியர் ஜான் ஹால்-ம் (John [...]

    Read more →