Archive for September, 2005

மின்மசி திரை - சோதனை வடிவம் வெளியீடு

மின்புத்தகங்கள் (eBooks), மின்மசி (eInks), நெகிழ்திரைகள்(Flexible Displays) போன்ற நுட்பங்களில் ஏற்பட்டுவரும் வளர்ச்சியைப் பற்றி தொடர்ந்து இந்த வலைப்பதிவில் எழுதிவருகிறேன். இதற்கு முன் என்டெர்ரா (nTera) நிறுவனத்தின் நானோநுட்பத் திரையைப் பற்றியும் சோனியின் மின்புத்தகத்தைப் பற்றியும் எழுதியிருந்தேன். மின்புத்தகத்தின் அடிப்படையில் உள்ள மின்மசி பற்றியும் அதன் இயற்பியல் அடிப்படையான மின்துளைபரவல் (electrophoresis) பற்றியும் சிட்டிஸன் நிறுவனத்தின் வளையும் மின்கடிகாரம் பற்றியும் ஏற்கனவே எழுதியிருந்தேன்.


காலம் : இலக்கிய மாலையும் அறிவியல் சிறப்பிதழ் வெளியீடும்

புலம்பெயர்ந்த மக்கள் வாழ்கின்ற மண்ணில் இருந்து மிக நீண்ட காலமாக தொடர்ந்து வெளிவரும் சஞ்சிகை காலம். கடந்த பதினைந்து வருடங்களாக பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து வெளிவரும் காலம் சஞ்சிகையின் இருபத்தைந்தாவது இதழ் வெளியீட்டு விழாவும் அது தொடர்பாக நாட்டார் கலை நிகழ்வும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

இடம் : யொர்க்வுட் நூலக அரங்கம் (Yorkwood Library Theatre, 1785 Finch Avenue West, Toronto)
காலம்: அக்டோபர் 8, சனிக்கிழமை, மாலை 6:00 மணி

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டனின் [...]


யோகப் பாயும் ட்டண்ட்ரா செக்ஸும்

நேற்று டிஸ்கவரி இணைய தளத்திலிருந்து குழந்தைகளுக்கு ஏதாவது புதிய அறிவியல் சம்பந்தமான விளையாட்டுக் கருவிகள் வந்திருக்கின்றனவா என்று தேடிக்கொண்டிருந்தேன். எதேச்சையாகக் கண்ணில் பட்டது இந்த் உயர்தர யோகாசனப் பாய்.
யோகாசனத்திற்குத் தேவையான மேலதிக இழுவை கொண்டது. (எசகுபிசகாக காலை முடிச்சுப் போட்டுக்கொண்டிருக்கும் பொழுது முதுக்கு அடியில் பாய் விலகித் தடம்புரளாமல் இருக்க உத்தரவாதம்). இரண்டடிக்கு ஐந்தடி பரப்பும் காலங்குலத் தடிமனும் கொண்டது. [...]


தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - எட்டு

ஏ.ஆர். ரஹ்மான் தமிழ்த் திரையுலகிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் பல தொழில்நுட்ப விஷயங்களை அறிமுகப்படுத்தியவர். என்னுடைய கணிப்பில் இந்திய இசையமைப்பாளர்களில் சோதனை முயற்சிகளில் மிக மிக அதிகமாக முனைந்து ஈடுபட்டவர் (ஈடுபடுபவர்) எ.ஆர்.ரஹ்மான். இவருடைய பாடல்களில் கற்பனையைவிட அசாத்திய உழைப்புதான் மேலோங்கி நிற்கிறது. இதற்காகவே இவர் ஒவ்வொரு பாடலுக்கும் இசையமைக்க நிறைய நாட்கள் எடுத்துக்கொள்கிறார்.

பாடல்: ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
படம் : இருவர் (1997)
பாடியவர்கள்: ஹரிணி, ராஜகோபால் [...]


நாஸாவின் அடுத்த திட்டங்கள்

டிஸ்கவரி விண்ணோடத்தின் கடந்த பயண முடிவில் தன்னுடைய விண்ணோட முயற்சிகளைக் காலவரையறையின்றி ஒத்திப் போடுவதாக அறிவித்திருந்த நாஸா நேற்று தன்னுடைய வருங்காலத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. அடுத்த பத்து வருடங்களுக்குள் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஏவுகலங்கள் மூலம் தன்னுடைய விண்ணாய்வாளர்களை நிலவில் இறக்கி ஆராய்ச்சிகள் நடத்துவது என்றும் அதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வாக்கில் மனிதர்களை செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்புவது என்றும் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.


தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - ஏழு

ஜாஸின் ஆதாரம் ப்ளூஸ் என்று சொல்லப்படும் சோக இசையில்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்தாலும் நாளாக ஆக அது ஆட்ட அரங்குகளுக்கான இசை என்று மாறிப்போனது (பின்னர் அது மைல்ஸ் டேவிஸ் போன்ற முதல்தரக் கலைஞர்களால் மீட்டெடுக்கப்பட்டது). இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு ஒன்று ஜாஸிற்கே அடிப்படையாக உள்ள ரிதம் அமைப்பு. தட்டையான சுரங்களைக் கொண்டு இசைக்கப்பட்டாலும் ஜாஸில் ட்ரம்ஸ், ரிதம் கிடார், பாஸ் கிட்டார் போன்றவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. [...]


கூகிள் வலைப்பதிவுத் தேடல்

இன்றைக்கு கூகிள் வலைப்பதிவுகளில் தேடும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கூகிள் செய்திகளின்கூட, வலைப்பதிவுகள் மாற்றுச் செய்தி/கருத்து ஊடகமாக அங்கீகாரம் பெறுவ்தன் அடுத்த கட்டம் இது.
தமிழில் தேடிப் பார்த்தேன் நன்றாகவே வேலை செய்கிறது. (தமிழ் வலைப்பதிவுகள் பெரும்பாலும் யுனிகோடிலேயே இருப்பது இதற்கு முக்கிய காரணம்). எந்த ஒரு வார்த்தை/வார்த்தைகளையும் உள்ளிட்டுத் தேடும்பொழுது கூடவே அந்தத் தேடலுக்கான செய்தியோடை ஒன்றும் கிடைக்கிறது. உதாரணமாக ‘இலக்கியம்’ என்றொரு வார்த்தையை உள்ளிட்டுத் தேடினால் கிடைக்கும் முதல் பத்து [...]


அமெரிக்கா முதலில் அணுவாயுதத்தைப் பயன்படுத்தும்

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையின்படி அமெரிக்க அதிபருக்கு ‘சந்தேகத்தின் பேரில், அமெரிக்காவின் மீது நடக்கவிருக்கும் பேரழிவைத் தடுக்க அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தும் உரிமை’ வழங்கப்படவிருக்கிறதாம்.
எரிச்சலூட்டுகிறது. யோசித்துப் பாருங்கள் இதேபோன்ற உரிமை நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்திருந்தால் சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று சொல்லி அந்தப் பாலைவனத்தின் ஏழைகளின் தலையில் ஒரு அணுகுண்டைப் போட்டிருப்பார் புஷ். (மாட்டார் என்று சொல்லும் அமெரிக்க வழிபாட்டாளர்களுக்கு - அப்படியென்றால் ஏன் இப்படி ஒரு உரிமை [...]


தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - ஆறு

பாடல் : பளிங்கினால் ஒரு மாளிகை
படம் : வல்லவன் ஒருவன்
பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி
இசை : வேதா
[Audio clip: view full post to listen]

வேதா என்கிற எஸ்.வேதாச்சலம் தமிழ்த் திரை இசையமைப்பாளர்களுள் கொஞ்சம்வித்தியாசமானவர். தான் எங்கிருந்து பாடலை நகலெடுக்கிறேன் என்ற விஷயத்தையெல்லாம் மறைக்க அவர் முயற்சி செய்ததே இல்லை. அந்தக் காலங்களில் (1950-60) ஹிந்திப் பாடல்களை நேரடியாகத் தமிழில் தந்தவர் வேதா. [...]


தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - ஐந்து

பாடல் : நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
படம் : நம்நாடு (1969)
பாடியவர்கள் : டி.எம். சௌந்தர்ராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி
[Audio clip: view full post to listen]

எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் வேற்றுமைகள் துளிர்விடத் துவங்கியிருந்த காலம் அது. தன்னுடைய திரைப்படங்களில் கறுப்பு-சிவப்பு சட்டைகள், உதயசூரியன், கழகம் என்ற வார்த்தைகள் வரும்படியாக வெளிப்படையாக வசனங்கள் அமைத்து, பாடல் வரிகள் அமைத்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வலு சேர்த்துக் கொண்டிருந்த எம்.ஜி.ராமச்சந்திரன், [...]