டிஸ்கவரி பத்திரமாகத் திரும்பியது

Shuttle Return

அப்பாடா ஒருவழியா திரும்ப வந்து சேந்தாங்க. போன ஒரு வாரமா இவங்க என்ன செய்றாங்க அப்படீங்கறதவிட எப்ப, எப்படித் திரும்ப வரப்போறாங்கங்கறதுதான் கவலையா இருந்திச்சி.

விமானிகளுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும், நாஸா-வுக்கு?? - அடுத்த தடவையாவது (அப்படீன்னு ஒன்னு இருந்தா) பத்தெரமா, பாத்து செய்யுங்க.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

/அப்பாடா ஒருவழியா திரும்ப வந்து சேந்தாங்க./ same.
அடுத்த தடவையாவது (அப்படீன்னு ஒன்னு இருந்தா) :-)

நல்ல வேளை டிஸ்கவரி திரும்ப வந்துடுச்சு, இல்லைன்னா அதற்கும் ஈராக் போர், புஷ்ஷின் தவறான தலைமையும், டிக் செய்னியின் சைத்தான்தனமான பிடிவாதமும், வுல்போவிச்சின் உட்டாலக்கடிமுரட்டுத்தனமும், காண்டலிச ரைசின் கையாளாகதனமும் இவர்கள் எப்படி நாஸாவின் தினப்படி காரியங்களில் மூக்கைநுழைத்து சதி செய்தார்கள் என்றும் ஏற்கனவே எழுதிவச்ச அஞ்சு பாக கட்டுரைய இணையத்துல படிக்கவேண்டியிருந்துருக்கும்.

ஆடு நனையுதேன்னு…

.:dYNo:.

எனக்கும் மனசு 'திக்திக்'னு இருந்துச்சு. நல்லபடியாத் திரும்பணுமே கடவுளென்னு இருந்தேன்.

இப்பத்தான் மனசு கொஞ்சம் சமாதானமா இருக்கு.

துளசி

[2] டைனோ - யாரோ உங்கள் கையை முறுக்கிக் கட்டிப் போட்டு உங்கள் மனதிற்கு வேதனை தரும் அமெரிக்க எதிர்ப்புக் கட்டுரைகளைப் படிக்கச் செய்வதாகத் தெரிகிறது. ஆழந்த அனுதாபங்கள்.

உங்களுக்கு இதிலிருந்து சீக்கிரமே விடிவு ஏற்பட்டு ஃபாக்ஸ் நியூஸ் பார்க்க இன்னும் நிறைய நேரம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

சிலர் அமெரிக்கா என்ன செய்யுது எப்ப வழுக்கிவிழும்னு கங்கணம், கோமணமெல்லாம் கட்டிகிட்டு, கண்ணுல விளக்கெண்ணெயும் விளங்காதெண்ணையும் விட்டுகிட்டு காலுல, கக்கத்துல சுடுதண்ணி கொட்டிகிட்டாப்படி கத்தி அலம்பலும் அலட்டலும் பண்ணிக்கிட்டிருகாய்ங்கெய். அமெரிக்கா தப்பே பண்ணல, ஜார்ஜ் புஷ்தான் தங்கத்தலைவனெல்லாம் சொல்லல, ஆனா அதுக்கோசுரம் அமெரிக்க எலி அம்மணமா ஓடுனாலும் அதுக்கு அவிங்கதான் காரணமுங்கறது ஓவரோ ஓவர்தான்.

(கனேடிய) மரம்வெட்டி டீவியும், பிபிஎஸ்சும் (அட! இதுவும் அமெரிக்க டீவியாச்சே?) பார்த்து பீட்டருடுறதுக்கு பாப்கார்னோட பாக்ஸ் பாக்கலாம்.

.:dYNo:.

டைனோவின் வாதம் எனக்கு புரியவில்லை. என்ன ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலை? இதில் ஆடு எது ஓநாய் எது? அமெரிக்க அரசாங்கத்தை விமர்சிப்பதற்கும் விண்கலம் திரும்பிவந்ததை ஏற்றுக்கொள்வது எந்த வகையில் சம்பந்தமுடியது என்று சொன்னா விளங்கிக்கொள்ளலாம். ஓவரா பாப்கார்ன் பாக்ஸ்சோட உட்கார்ட்ந்திருந்தா கண்ணுல கோளாறு வருமோ என்னமோ? ஏன் 2003 இல் விண்கலம் வெடித்ததே அப்போது எந்த ஓநாய்கள் சிரித்தது என்று டைனோ சொன்னால் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். டைனோ பாப்கார்ன் சாப்பிடுவது டைனோ இல்லை ப்ராண்டோசாரஸ் ;-)

[5] அண்ணாத்தேய் - ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும், நீங்க போட்டு மனத்த அலட்டிக்காதீங்க. புஷ்ஷும் காண்டலீஸா அம்மாவும் அமோகமா இருப்பாங்க. அம்மணமாவோ, கோமணத்தோடயோ ஒட்றவய்ங்க ஒடிக்கிட்டுத்தான் இருப்பானுங்க. நீங்க ஏன் போய் வருத்தப்பட்றீய. ஓட்றவய்ங்கள கவுக்கனும்னா ஓடும்போது காலை நீட்டினா போதும், அவனுங்க நிக்கிறப்போ சும்மா ஒத்தக்காலை உதறிக்கிட்டே இருந்தா உம்ம காலுதாங் கடுக்கும். நீங்க போய் பாப்பகாரனும் பாக்ஸ் டீவியுமா ரெஸ்ட் எடுங்க. அப்பொறமா வரலாம்.

அதுல ஒரு வெசயம் பாருங்க. எளுதினத்துக்கு என்னான்னு கேள்வி கேட்டு வெளக்கம் சொல்றச்சப்போவ, இப்ப எளுதாதத வெச்சுக்கிட்டு ஏன் வெட்டி வேல? நமக்கெல்லாம் வேற சோலி இருக்குதானே! :)

[6] கார்த்திக் - ஆடு நனயுதேன்னு சொன்னது was hitting below the belt. எந்தச் சாவையும் சாதாரணர்களின் இழைப்பையும் நான் ஒருபோதும் நியாயப்படுத்தியதில்லை. இங்க நான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா எல்லாம் பாக்கல. போனதும் பத்திரமா வந்ததும் அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயம். (இத அறிவியல்/நுட்பம் பகுதிலதான் எழுதியிருக்கிறேன்).

என்ன பண்றது, சிலருக்கு தரையே தேவையில்லை, வெறுங்கைய்ய ஊனி அந்தரத்துலயே பல்டி அடிக்கிறாங்க. சோக்கா இருக்குன்னு ரெண்டு தடவை கையத்தட்டிட்டு போக வேண்டியதுதான்.

பை தி வே டைனோ, ஸ்டீவ் ராபின்ஸன் ஷட்டிலோட வெளிப்பாகத்த சரி செய்யப் பயன்படுத்தினது கனடால செஞ்ச ரோபாட்டிக் ஆர்ம்.

ஷட்டில் அரசியல்ல வேணும்னா வேற யாருக்கும் பங்கில்லாம இருக்கலாம், அதுல இருக்கிற தொழில்நுட்பங்கள் பல நாடுகளுக்குச் சொந்தமனவை.

மரம் வெட்டிகளும் சில சமயம் தேவைப்படுகிறார்கள். மரம்வெட்டி டிவியைப் பார்த்திருக்கிறீர்களா? அதுல வர்ற Royal Canadian Air Farce, This hour has 22 min. எல்லாம் பார்த்ததுண்டா?:)

[6]
கார்த்திக்ராமாஸ்,
>>>>நாஸா-வுக்கு?? - அடுத்த தடவையாவது (அப்படீன்னு ஒன்னு இருந்தா) பத்தெரமா, பாத்து செய்யுங்க.
இப்பவாச்சும் ஓநாயும் ஆடும் கண்ணுக்கு தெரியுதா? இல்ல இன்னும் விளக்கமா வேணுமா?

.:டைனோ:.

[9]

>>>>வெளிப்பாகத்த சரி செய்யப் பயன்படுத்தினது கனடால செஞ்ச ரோபாட்டிக் ஆர்ம்.
The Shuttle Remote Manipulator System (SRMS) or Canadarm was a joint venture between the governments of the United States and Canada to supply the NASA Space Shuttle program with a robotic arm for the deployment/retrieval of space hardware from the payload bay of the orbiter.

தகவலுக்கு நன்றி

[8]
[11]
>>>>போனதும் பத்திரமா வந்ததும் அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயம். (இத அறிவியல்/நுட்பம் பகுதிலதான் எழுதியிருக்கிறேன்).

அடேங்கப்பா! அறிவியல் லச்சணம்னா இன்னா?

"விமானிகளுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும், நாஸா-வுக்கு?? - அடுத்த தடவையாவது (அப்படீன்னு ஒன்னு இருந்தா) பத்தெரமா, பாத்து செய்யுங்க."

ஓ இதுதான் அறிவியலும் தொழில்நுட்பமுமா? சரி கத்துகறோம்! அந்த இரட்டை கேள்விக்குறி, 'அப்படீன்னு ஒன்னு இருந்தா" இதெல்லாம் என்னா? ஓவர் தெ பெல்ட்டா? இல்ல அறிவியல் நுட்பமெழுதற லட்சணமா?

>>>>was hitting below the belt

விகனுக்கெல்லாம் கேள்விகேட்டு எழுதவறவருக்கு தன்னைக்கேள்விகேட்டா தவிப்பேன்?

"ச்சீ ச்சீ இந்த திராட்சை புளிப்பு"

இது பெல்ட்டுக்கு கிழே அடிக்கறதுக்கு உதாரணம்!

:))

டைனோ,
அதை நான் இத்தனை செலவுடைய ப்ராஜக்ட் இன்னொருமுறை எப்போது நடைபெறுமோ என்றுதான் புரிந்துகொண்டேன். இதை நீங்கள் வெங்கட்டின் அரசியல் பார்வையோடு குழப்பிக்கொள்வது ஒரு மலினமான அரசியலாகத்தான் தெரிகிறது. உங்கள் வாசிப்புக்கு (?) வெங்கட்தான் விளக்கனும்.

[15]
>>>>இதை நீங்கள் வெங்கட்டின் அரசியல் பார்வையோடு குழப்பிக்கொள்வது ஒரு மலினமான அரசியலாகத்தான் தெரிகிறது.

கார்த்திக்ராமாஸ்…

அரசியல் பார்வை பற்றி நான் விளக்கி நீங்கள் புரிந்துகொள்ளுமளவிற்கு உங்களுக்கு தெரியாததில்லை. ஒரு முக்கியமான ப்ரோஜக்ட், உலகமே அவலுடன் எதிர்நோக்கிய இதற்கு முன்பு தவறிய ஒன்றை செவ்வனே செய்து நிரூபிக்க வேண்டிய கட்டாயம் போன்ற நிர்பந்தங்களையெல்லாம் அலசி, அவசரப்படாமல், லாஞ்ச் தேதியை ஒத்தி, விசும்பில் நடந்து பத்தியிட்டு, தாமதமாகவே வெற்றிகரமாக தரையிறக்கிய நிறுவனத்தை பாராட்டாதவரின் அரசியல் உங்கள் கண்களுக்குப்படவில்லை என்பது எனக்கும் ஆச்சரியம்தான்!
>>>>இத்தனை செலவுடைய ப்ராஜக்ட் இன்னொருமுறை எப்போது நடைபெறுமோ என்றுதான் புரிந்துகொண்டேன்.

http://www.Nasa.gov போனால் அடுத்த ப்ரோஜக்ட் பற்றி தெரிந்துவிடப்போகிறது. தேடித்தேடி சுட்டி தருபவர்களுக்கு இது தெரியாதா?

.:டைனோ:.

டைனோ நீங்கள் இந்த விசயங்களை நேரடியாக முன்னரே எழுதியிருந்தால் நானும் தவறாக உங்களை வாசித்திருக்கமாட்டேன். நன்றி.

[10][11][12][14][16]

டைனோ - அநாவசியமாகக் குழப்பிக் கொள்ளாதீர்கள். நான் இன்னொரு முறை இருந்தால் என்று எழுதியது என்னுடைய தனிப்பட்ட எண்ணம் இல்லை. இது நாஸாவின் (தற்பொழுதைய) முடிவு. விண்ணோடம் மேலே போய் அதில் பழுதிருக்கிறது என்று தெரிந்தவுடனேயே (அதைச் சரி செய்வதற்கு முன்னால்) நாஸா தன்னுடைய விண்ணோடத் திட்டத்தைக் காலவரையறையின்றி நிறுத்தி வைத்திருக்கிறது. இதில் ஆடும் ஓநாயும் எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள்தான் விளக்க வேண்டும். தயவு செய்து நிதானமிழக்க வேண்டாம்.

உதாரணத்திற்கு இந்தச் செய்தியைப் பார்க்க

NASA managers decided to ground their shuttle fleet on Wednesday after a piece of insulating foam fell off Discovery during liftoff.

"Until we fix this, we're not going to fly again," shuttle program manager Bill Parsons said.

அப்புறம் அந்த கனடா ரோபோட்டிக் ஆர்ம் பற்றியும் நீங்கள் அரைகுறை தகவலைத் தந்திருக்கிறீர்கள். நாஸாவுக்காக வெளிநாட்டவர் செய்யும் எல்லா திட்டங்களுமே அமெரிக்கக் கூட்டுத் திட்டங்கள்தான். அந்த அளவில்தான் அதில் அமெரிக்காவின் பங்கு.

நீங்கள் சமர்த்தாக வெட்டி ஒட்டியிருப்பதன் அடுத்த சில வரிகள் இவை;

"Spar was appointed the prime subcontractor to the National Research Council of Canada, now the Canadian Space Agency, in July of 1975 for the Design Development Testing and Evaluation (DDT&E) of the manipulator arm system which was to be supplied to NASA by the Canadian government. Work began on the program in 1975 and in April 1981 the first SRMS was delivered to NASA at a cost of approximately $108 million to the Canadian government."

It was delivered to NASA and Spar tested it before NASA incorporated in Shuttle.

மிகப் பெரியதாக Canada என்று அந்தக் கருவியில் பொறிக்கப்பட்டிருக்கும். இதைப் பற்றிய மேலதிக விபரம் வேண்டுமென்றால் இங்கே பார்க்கவும்.

உங்கள் பார்வையை இவ்வளவு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.

[19]

>>>>கனடா ரோபோட்டிக் ஆர்ம் பற்றியும் நீங்கள் அரைகுறை தகவலைத் தந்திருக்கிறீர்கள்.

[1] From CSA website,
http://www.space.gc.ca/asc/eng/exploration/canadarm/backgrounder.asp...

The first Canadarm cost roughly $100 million to design, develop, build testing models and manufacture. It was given to NASA as Canada's contribution to the Space Shuttle Program. While monies involved are not small, the pay-off has been enormous. Subsequently, NASA ordered four additional units which have resulted in over $600 million in export sales for Canada. Our country has become renowned for its expertise in robotics as the Canadarm firmly established Canadian credibility as scientists and engineers.

Spend $100 million, got back $600 millon. Now who is giving "அரைகுறை" info?

[20] The name of Karthikramas name in the previous comment was a tech glictch. sorry!

[19]
(2) http://www.space.gc.ca/asc/eng/missions/sts-097/kid_canadarm.asp...

NASA was looking for international partners to help build the Space Shuttle so they gave countries a choice in picking and choosing what parts they wanted to build. This elbow room gave Canada a space to move in! After considering all of the options, they decided to create something that would move in space: The Shuttle Remote Manipulator System, now known as the Canadarm.

Canada was given very specific instructions: build a tool that simulated the movement of a human arm that could work perfectly in the hostile space environment.

சென்ற வருடம் நான் குடியிருந்த பகுதிக்கு அடுத்த தெருவில்தான் நாசா மேரிலாண்ட் தலைமையகம் இருந்தது என்றாலும், நாசா என்னென்ன செய்கிறது என்பெதெல்லாம் எனக்கு ஒன்றுமே
தெரியாது :-D இதில் டைனோவும் வெங்கட்டும் பேசுவதை கொஞ்சம் ஓரமாக நின்று பார்ல்லிறேன். ;-)
இருவரும் ஒரு முடிவுக்கு வந்தாலுஞ்சரியே வராவிட்டாலுஞ் சரியே.

டைனோ - ரொம்பக் குழம்பியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

முதலில் ஆடு ஓநாய் என்றெல்லாம் ஏதோ கதை சொன்னீர்கள். அப்புறம் அது நான் இன்னொரு தடவை இருந்தால் என்று எழுதியதற்காக என்றீர்கள். இது நாஸாவின் கூற்று என்பதை மறந்து/மறைத்து விட்டீர்கள். இப்பொழுது ரோபாட்டிக் ஆர்ம்!

[20]

நான் கனடாவின் தொழில்நுட்பப் பங்களிப்பைப் பற்றித்தான் பேசுகிறேன். ரோபோட்டிக் ஆர்ம் முழுக்க முழுக்க கனடாவில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு நாஸாவிடம் கையளிக்கப்பட்டது. இதை கனடா நாஸாவிற்குத் தானமளித்ததாக யார் கூறினார்கள். அப்படியே அதில் கனடா பணம் சம்பாதித்தால் என்ன தவறு (இது ஒன்றும் எண்ணெய் வியாபாரம் இல்லையே). நேர்மையாக, திறமையா ஒரு சாதனத்தை வடிவமைத்து அதை விற்றுப் பணம் சம்பாதிப்பதில் என்ன தவறு.

எசகுபிசகாகத் தேவையில்லாத பண விபரம் ஏன்?

[22] Dyno :) This is how exactly projects work. The buyer specifies and the provider complies with the requirements. Do you understand those words? "Canada was given very specific instructions" - this does not mean that Americans designed it. Shuttle is a large and complex project and NASA will issue specific instructions to all its suppliers.

"NASA was looking for international partners to help build the Space Shuttle so they gave countries a choice in picking and choosing what parts they wanted to build."

NASA decided to outsource segments of shuttle project. They issue RFQ - all countries (and private companies) compete and the best bid is chosen. So what do you imply by quoting these lines and highlighting some words in it?

[23]
சும்மா கூகிள்ல நாஸா, கனடா, ரோபோட்டிக் ஆர்ம் அப்படீன்னு போட்டு கெடச்சத எடுத்து வுடாதீங்க. நீங்க காட்டியிருக்கெற RFQ க்கும் நாம பேசிக்கிட்டு இருக்கிற கனடா ஆர்ம்-க்கும் ஸ்நானப்பாராப்திகூட கெடயாது.

Posted Date: May 05, 2005
Original Response Date: May 19, 2005
Current Response Date: May 19, 2005

இது நாஸாவோட வருங்காலத்துக்கு. நாம பேசிக்கிட்டு இருக்கறது இப்ப இருக்கெற ஷ்ட்டில்ல பயன்பட்ற ரோபோட். சும்மா இப்படி எசகுபெசகா எதையாவது போட்டு பாக்குறவங்களுக்குப் பிலிம் காட்டாதீங்க.

[24] கார்த்திக் - ரொம்ப குறும்புதான் ஒங்களுக்கு. இதிலெல்லாம் முடிவு வரும்கிறீங்க? :)

[25]

>>>>இது நாஸாவின் கூற்று என்பதை மறந்து/மறைத்து விட்டீர்கள்.
டென்ஷன் ஆயீ, குழம்பீட்டீக போல. ஒவ்வொன்னா வாறேன்! பனைமரத்துக்குக்கீழே பால்குடிச்சாலே கள்ளூம்பாங்க… நீங்க புல் ஸ்காட்சே அடிச்சுட்டு பால்ன்னு சொல்றீங்க!

Hale said he had sent an e-mail to the Discovery crew members Wednesday, telling them: "I was absolutely mortified at the performance of the external tank foam, and we were not going to fly again until we fix it." - CNN

"Until we fix this, we're not going to fly again," shuttle program manager Bill Parsons said. - Your Link

"(அப்படீன்னு ஒன்னு இருந்தா)" …. "காலவரையறையின்றி நிறுத்தி வைத்திருக்கிறது."

அதாவது நாஸாவுக்கு இந்த காலத்துல (ஆயுசுல) அதை சரி செய்வதற்கான அறிவு கிடையாதா? இந்த காலவரையறையை எங்க புடிச்சீங்க? மயக்காமா குழப்பமா இல்ல யார் கவனிக்கப்போறாங்கங்கற அலச்சியமா? அறிவியல்ல இப்படியெல்லாம் ஊகிக்கக்கூடாது. ரொம்பதப்பு. ரெண்டு வரியில எல்லாத்தையும் விளக்கறது எவ்வளவு தப்போ அதைவிட சொந்த சரக்க சொருகறது ரொம்ப ரொம்ப தப்பு! ஜவாப்பு செப்புண்டி வெங்கட்காரூ!

>>>>விமானிகளுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும், நாஸா-வுக்கு?? -
இதை மறுக்க/மறைக்கப்பார்க்கிறீர்களா? யாப்பு எழுதினவருக்கு sentence formation க்ளாஸ் எடுக்கணுமா? இல்ல CONTEXT பற்றி விளக்கணுமா?

.:dYNo:.

[26]
>>>>So what do you imply by quoting these lines and highlighting some words in it?

To show you that Nasa is planning a future project. Take it as an answer to "அப்படீன்னு ஒன்னு இருந்தா"!

[23]
>>>>சும்மா கூகிள்ல நாஸா, கனடா, ரோபோட்டிக் ஆர்ம் அப்படீன்னு போட்டு

உங்களுகெப்படி இதெல்லாம் தெரியுது… தானாவே தோணுதோ… இந்த "காலவரையறை" தோணுன மாதிரி? இல்ல அசரீரி வந்து அவ்வப்போது சொல்லீட்டு போகுமா? இதப்பார்றாப்பா! வெங்கட்டுக்கு தேடாமலேயே எல்லாமே தெரிஞ்சிருக்கு? அறிவுசீவி!

>>>>நாஸாவுக்காக வெளிநாட்டவர் செய்யும் எல்லா திட்டங்களுமே அமெரிக்கக் கூட்டுத் திட்டங்கள்தான். அந்த அளவில்தான் அதில் அமெரிக்காவின் பங்கு

Canada was given very specific instructions. புரிஞ்சதோ? இல்ல விளக்கணுமா?

".மிகவும் அயற்ச்சியாக இருக்கிறது, நேரவிரயம். இதை தொடர்வதில் எந்த பிரியோஜனமுமில்லை!" அப்படின்னு ஒரு டெம்ப்ளேட் வச்சுருப்பீயளே அதத்தான துழாவறீக! குகிள் டெஸ்க்டாப் சர்ச் போடுங்க உடனே கிடைக்கும்

[29] ஹி..ஹி.. கிச்சுக்கிச்சு மூட்டாதீங்க. மேல அனுப்பின ஷட்டில் கீழ வர்றத்துக்குள்ள நாஸாவுக்கு வேறே எதுவும் ஷட்டில் திட்டம் இல்லை. அப்ப எதச் சொல்றாங்க? வருங்காலத் திட்டத்தத்தான?

While the US space agency said the foam did not damage the shuttle on Tuesday's launch, a spokesman said that future flights are on hold until the problem is corrected.

"Until we're ready we won't fly again," said Bill Parsons, space shuttle program manager.

யாகூ செய்தி

நான் மட்டும் அப்படி நெனச்சுக்கல, எல்லாரும் அப்படித்தான் (உங்களத் தவிர).

ஷ்லாஸ்டாட் விவாதம்

[33]
In which dictionary is

"Until we're ready" => காலவரையறையின்றி

Simple english right? why is it so tough?

[30] அந்த வருங்கால ரோபாட்டிக் ஆர்ம் ஷட்டிலுக்குன்னு நீங்க எப்படி கற்பனை செய்றீங்க?? :)

அந்த RFQ முழுக்க சல்லட போட்டுத்தேடினாலும் ஷட்டில்ங்கற வார்த்தை கிடையாது. நாஸாவுக்கு ஆயிரம் ரோபாட்டிக் ஆர்ம் எத்தனையோ விஷயங்கள்ல தேவைப்படுது.

அதைத் தவிர அந்த வேண்டுகோள் வந்தது மே மாதத்தில், ஷட்டில் திட்டம் ஒத்திப்போடப்பட்டது போன வாரம். எழுதறத்துக்கு முன்னால் கொஞ்சம் யோசன பண்ணிப்பாருங்க.

உதாரணம் சொல்றது தப்பா?
இல்லைங்க!
உதாரணம் பிழையாயிருந்தா தப்பா?
கொஞ்சதப்பு மாதிரிதாங்க தெரியுது.
மத்தவங்க சொன்னத உதாரணம் காட்டறதுல பிழையாயிருந்தா தப்பா?
எல்லோரும் பண்ணற தப்புதாணுங்களே?
மத்தவங்க அறிவியலப்பத்தி சொன்னத உதாரணம் காட்டறதுல பிழையாயிருந்தா தப்பா?
தப்புதானுங்க
அதுலயும் நாம சொந்த சரக்க சேர்த்துவுட்டா?
பெரியதப்புதானுங்க!
அது நம்ம வெங்கிட்டாண்ட சொல்லு!

[34] அய்யா. இன்னும் ரெண்டு வருஷத்துக்குக் கெடயாது. அடுத்த மூனு மாசத்துக்குக் கெடயாது அப்படீன்னு சொல்லன்னா அதுக்குக் காலவரையறையின்றி என்றுதான் அர்த்தம். இதுக்கு டிக்ஷ்னரியைத் தேடினீங்களா?

[31] very specific instruction is different from participating in design/assembly. This does not mean that NASA gave "design" instruction.

[36] Nice :) Have fun!

[35]
rfq Source: Ames Research Center

Go figure what they do at ARC!

[37][38]
>>>>This does not mean that NASA gave "design" instruction.
This also doesn't mean "நாஸாவுக்காக வெளிநாட்டவர் செய்யும் எல்லா திட்டங்களுமே அமெரிக்கக் கூட்டுத் திட்டங்கள்தான். அந்த அளவில்தான் அதில் அமெரிக்காவின் பங்கு"

Why do you keep contradicting what you said earlier? You seem confused and disarranged.

எனது புரிதலின் படி "காலவரையின்றி" என்றால் indefinitely / there's no particular time frame எனப் பொருள்படும் என எண்ணுகிறேன். ஆகையால் வெங்கட் இங்கு "காலவரையின்றி" என்றெழுதியதில் தவறில்லை. நீங்கள் ஏன் காலவரையின்றி எனபதை "இந்த காலத்துல (ஆயுசுல)" என்று கருதுகிறீர்கள் எனத் தெரியவில்லை.

Thanks Stranger!

அடுத்த தடவையாவது (அப்படீன்னு ஒன்னு இருந்தா)

Could you please elaborate on "காலவரையின்றி" in the above context?

வெங்கட், உங்களுக்கு என்ன ஆச்சு? டைனோ மாதிரி அறிவு கெட்ட ஜென்மங்களுக்கு reply பன்றதை முதல்ல நிறுத்துங்க.

Leave a comment

(required)

(required)