Archive for August, 2005

தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - நான்கு

ஜாஸின் முக்கியமான இலக்கணங்களில் ஒன்று (ஜாஸிற்கு இலக்கணம் உண்டா?) ஸிவிங் என்று சொல்லப்படும் ஊசல். இதை வரையறுப்பது மிகவும் கடினம். (நோட்ஸ் எல்லாம் எழுதி இன்னும் கொஞ்சம் குழப்ப முடியும்). முதல் விஷயம் இந்த ஊசலை அதிகமாகக் கையாண்டவை பெருங்குழுக்கள் (Big Band Jazz). பல வாத்தியங்கள் இருக்கும் பொழுது ஒவ்வொருவரும் மானாவாரியாக சுயகற்பனையோடு (independent improvisation) என்று சொல்லிக் கொண்டு தனித்தனிப் [...]


Welcome back, Mr. Ganguly

*SC Ganguly 5
V Sehwag 5
Y Venugopal Rao 0
R Dravid 5
Yuvraj Singh 1
M Kaif [...]


அஞ்சலி - ராபர்ட் மோக்

ராபர்ட் மோக் சென்ற ஞாயிறன்று (21.ஆகஸ்ட் 2005) காலமானார். இங்கே பலரும் இந்தப் பெயரை முதல் முறையாக இப்பொழுதுதான் கேட்கக் கூடும். டாக்டர் ராபர்ட் மோக் (Robert Moog, இந்தப் பெயரை Vogue என்பதுபோல உச்சரிக்க வேண்டும்). நவீன இசைக்கருவிகளின் உலகில் மோக்-கிற்கு அதிமுக்கிய இடமுண்டு. சிறுவயதிலிருந்தே இசைக்கருவிகளில் நாட்டம் கொண்டிருந்தவர் மோக் - இசையின் காரணமாக அல்ல, ஒலிகளை உற்பத்தி செய்யும் கருவிகள் என்ற அடிப்படையில். [...]


தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - மூன்று

ஜாஸின் ஆதாரம் improvisation என்று சொல்லப்படும் நொடியில் மாறும் திறம்தான். தமிழ்த் திரையிசையில் (பொதுவாகத் திரையிசையில்) இசைக்கப்படுவது தொகுக்கப்பட்ட இசை (Composed music); அதாவது இசையமைப்பாளர் ஏற்கனவே தீர்மானித்து அதற்கேற்ற வகையில் பாடலாசிரியர் பாட்டெழுதி துல்லியமாகப் பிரிக்கப்பட்டு இசைக்கலைஞர்களிடம் சொல்லப்பட்டு இசைக்கப்படுவது. இந்த இடத்தில் ஜாஸின் அடிப்படை இதயமான சுதந்திர மாற்றங்களுக்குச் சாத்தியமில்லாமல் போவதால் திரையுலகில் ஜாஸ் என்பது ஒரு சொல்முரண்தானா?
இதற்குப் பதில் ஒரு வகையில் ஆம். ஆனால் கொஞ்சம் பொறுமையாக யோசித்தால் இல்லை, [...]


தொலைவிலிருந்து அறுவை சிகிச்சை

சமீபத்தில் கலிஃபோர்னியா இர்வைன் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை மருத்துவ, லேசர், கணினி உலகில் சமீபத்தில் நடந்த முக்கிய முன்னேற்றங்களில் ஒன்று. இர்வைன், தெற்குக் கலிஃபோர்னியா, குவீன்ஸ்லாந்து (ஆஸ்திரேலியா) என்று மூன்று வேறு இடங்களில் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் ஒன்றிணைந்து ஒரே சமயத்தில் இணையத்தின் வழியே லேசர் அறுவை ஒன்றை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள். தெற்குக் கலிஃபோர்னியாவில் இருந்த லேசர் நுண்ணோக்கியின் கட்டுப்பாடுகளை இணையத்தில் இணைக்கப்பட்ட கணினி வழியே இயக்கி செல்களில் கிட்டத்தட்ட் [...]


தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - இரண்டு

ஜாஸ் இசையில் அதிகம் பயன்படும் வாத்தியங்களாகப் பின்வருனவற்றைச் சொல்லலாம்; ட்ரம்பெட், சாக்ஸஃபோன், பியானோ, கிளாரினெட், கிடார் (அக்குஸ்டிக் கிடார், ஸ்லைட் கிடார், மாண்டலின்), பாஸ் கிடார் (டபுள் பாஸ் கிடார்), ட்ரம்ஸ், த்ராம்போன். நவீன ஜாஸ் இசையில் பயன்படுத்தப்படாத இசைக்கருவிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் ஆரம்ப ஜாஸ் வடிவத்தில் இந்தப்பட்டியலில் இருப்பவைதான் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டன. உதாரணமாக வயலின் மிகப் பிரபலமான இசைக்கருவியாக இருந்தாலும் ஜாஸில் இதற்கு அதிக இடமிருப்பதில்லை.


இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் கொலை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிபிஸி செய்தி வெளியிட்டிருக்கிறது.
செய்தி் கொலைக்கான நோக்கம் என்னவென்று தெரியாவிட்டாலும் புலிகளின்மீது சந்தேகமிருப்பதாகத் தெரிவிக்கிறது.
இது இலங்கையில் மெல்லிழையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் அமைதியை மிகவும் பாதிக்கலாம் என்பது கவலையைத் தருகிறது. ஏற்கனவே பாதுகாப்புப் படைகள் கொழும்புவில் சோதனையிடத் துவங்கிருக்கிறார்கள்.


மாநகராட்சிப் பள்ளிகளுக்கு அறிவியல் கருவிப்பெட்டிகள்

இன்றைய இந்துவில் வெளியாகியிருக்கும் இந்தச் செய்தி ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களுக்காக மகிழ்ச்சி தருகிறது. சத்யம் அமைப்பும், எயிட்-இந்தியா தன்னார்வக் குழுவும் இணைந்து வெளியிடும் இந்த அறிவியல் சாதனத் தொகுப்பில் அறிவியல் கருத்துக்களைப் புரிந்துகொள்ள கிட்டத்தட்ட 300 சிறு சோதனைகள் இருப்பதாச் செய்தி கூறுகிறது. சந்தோஷத்தைத் தரும் விஷயங்கள்;
1. மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகளுக்கானது. பல அற்புதமான, புத்திசாலிக் குழந்தைகள் இந்தப் பள்ளிகளில் போதுமான வாய்ப்புகள் இல்லாமல் சரியாக முன்னேறுவதில்லை. [...]


டிஸ்கவரி பத்திரமாகத் திரும்பியது

அப்பாடா ஒருவழியா திரும்ப வந்து சேந்தாங்க. போன ஒரு வாரமா இவங்க என்ன செய்றாங்க அப்படீங்கறதவிட எப்ப, எப்படித் திரும்ப வரப்போறாங்கங்கறதுதான் கவலையா இருந்திச்சி.
விமானிகளுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும், நாஸா-வுக்கு?? - அடுத்த தடவையாவது (அப்படீன்னு ஒன்னு இருந்தா) பத்தெரமா, பாத்து செய்யுங்க.


தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - ஒன்று

இருபதாம் நூற்றாண்டின் இசைவடிவம் எது என்று கேட்டால் உலக அளவில் தயங்காமல் கிடைக்கும் முதல் பதில் ஜாஸ் எனபதாகத்தான் இருக்கும். ஆப்பிரிக்க அமெரிக்க அடிமைக் குடியினரிடம் தோன்றிய ஜாஸ் வடிவம், இப்பொழுது லாட்டின் ஜாஸ், அவான் ஜாஸ், ஆஸிட் ஜாஸ், இந்தோ ஜாஸ் என்று பலவாகக் கிளைத்துப் புகழ் பெற்றிருக்கிறது. ஆரம்பகாலங்கள் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் பிணங்களைத் தூக்கிச் சொல்லும் பொழுது வாசிக்கப்பட்ட இசை ஜாஸ் [...]