• Archive for July, 2005

    மும்பை – பேய்மழையும் பெருவளர்ச்சியும்

    by  • July 30, 2005 • பொது • 12 Comments

    மும்பையில் பேய் மழை அடித்து ஓய்ந்திருக்கிறது. தினசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. வேலையிலிருந்து வீடு திரும்புபவர்கள் பள்ளி விட்டு வரும்சிறுவர்கள் இருபது மணி நேரம் வரை மழையில் சிக்கி முகமறியாதவர்களின் உதவியில் உயிர்பிழைத்திருக்கிறார்கள். வழக்கமான அனுதாபங்கள் எல்லாவற்றையும் ஒருபுறம் இருத்திவிட்டு கொஞ்சம் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள இதை துணைக்கழைப்போம்.

    Read more →

    தமிழ் இலக்கியத்தில் பூக்கள் – சந்தேகங்கள்

    by  • July 28, 2005 • இலக்கியம் • 3 Comments

    நேற்று வீட்டில் பூத்திருந்த ஆர்க்கிட் ஒன்றைப் படமெடுத்துக் கொண்டிருந்தேன். இந்தியாவில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகள், இமய மலைத் தொடர் போன்றவற்றிற்கே விசேடமான அழகான ஆர்க்கிட்கள் பல உண்டு. மேலே இருக்கும் படத்தில் உள்ள பெலனோப்ஸிஸ் வகை ஆர்க்கிட் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை. இவற்றைத் தவிர டென்ட்ரூபியம், சிம்பிடியம் வகை ஆர்க்கிட்களும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை. மேலை நாடுகளிலும், ஜப்பான், ஆஸ்திரேலியா சீனா நாடுகளில் ஆர்கிட்களுக்கு நிறைய மதிப்பிருக்கிறது. இந்தியாவில் இவற்றைப் பற்றி பெரிதும் யாரும் கண்டுகொள்வதில்லை. [...]

    Read more →

    டிஸ்கவரி விண்ணோடம் – ஒரு முடிவின் ஆரம்பம்

    by  • July 26, 2005 • அறிவியல்/நுட்பம் • 5 Comments

    இன்று காலை நாஸாவின் டிஸ்கவரி விண்ணோடம் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கிறது. இது இரண்டு நாட்கள் வானத்தில் இருக்கப்போகிறது. இது நாள்வரை ஏவப்பட்ட விண்கலன்களிலேயே மிகவும் அதிகமாகக் கண்காணிக்கப்படுவது இதுதான். இதற்குக் காரணம் முந்தைய கொலம்பியா விண்ணோடம் வானில் வெடித்தது. உண்மையில் இந்தமுறை விண்ணோடம் என்ன செய்யப்போகிறது என்பதைவிட எப்படித் திரும்பி வரப்போகிறது என்றுதான் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கபடி விளையாட்டில் முக்கிய ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்த நிலையில் கடைசியாக இருக்கும் நோஞ்சான் ஆள் பாடிச் சென்றால் அவர் எத்தனைபேரை அவுட் [...]

    Read more →

    சுஜாதாவாக்கம்

    by  • July 25, 2005 • இலக்கியம் • 33 Comments

    ரவி ஸ்ரீநிவாஸ் சுஜாதா இருத்தலியல் பற்றிய இரண்டுவரி விளகத்தின் அபத்தத்தை விரிவாக எழுதியிருக்கிரார். அதை விகடன் ஆசிரியருக்கு அனுப்பவதாகவும் எழுதியிருக்கிறார். காலம் காலமாக நாமெல்லாம் இந்தச் சங்கை ஊதிக்கொண்டுதானிருக்கிறோம். ஆனால் வர்த்தக மாஃபியா அதுபாட்டுக்கு அறிவு என்ற பெயரில் அறைகுறை விளங்கங்களையும் அபத்தத்தையும் விதித்துக் கொண்டுதானிருக்கிறது. பத்மா க்ளோனிங் பற்றி விகடனுக்கு என்ன எழுதினார் என்று தெரியாது. ஆனால் நான் க்ளோனிங்க் தொடரைப்பற்றி விகடனுக்கு (ஜூனியர் என்று ஞாபகம்) மிக நீளமாக சுஜாதாவின் பல ஒற்றை வரி [...]

    Read more →

    திருவாசகத்தில் இளையராஜாவின் குரல்

    by  • July 20, 2005 • இசை • 25 Comments

    இளையராஜா இசையமைத்த திருவாசகத்திற்கு அவர் குரல் பொருந்தியிருக்கிறதா என்பது தீவிரமாக விவாதிக்கப்பட்டுவரும் இன்னொரு விஷயம். நான் முதல் இரண்டு தடவைகள் கேட்டுவிட்டு அவர் குரலை இந்த இசைத்தொகுப்பின் குறைபாடாகச் சொல்லியிருந்தேன். இப்பொழுது இன்னும் பலதடவைகள் கேட்டும் அதே எண்ணம்தான் இருக்கிறது. கட்டாயமாக இந்தப் பாடல்களில் பல இடங்களில் இளையராஜாவின் குரல் ஒத்துழைக்கவில்லை. ஒரு சிலரைப்போல நான் இளையராஜாவின் குரலை வெறுப்பவனல்லன்; ஆராதிப்பவன். சில பாடல்களை இளையராஜாவைத் தவிர வேறு யாராலும் அப்படிப் பாடியிருக்க முடியாது என்பது எ.தா.அ. [...]

    Read more →

    இளையராஜா, குரல், தலித் அடையாளம், திருவாசகம், இன்னபிற

    by  • July 19, 2005 • இசை • 9 Comments

    இளையராஜாவின் திருவாசகத்தின் மீதான விவாதம் அருளின் பதிவில் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. கடந்த நான்கு நாட்களாக எக்கச்சக்கமான வேலை இருந்ததால் விவாதங்களில் ஆரம்பம் முதலிருந்தே கலந்துகொள்ள முடியவில்லை. இப்பொழுது நிறையபேர் நிறைய விஷயங்களை எழுதியிருப்பதால் என்னுடைய எண்ணங்களைத் தொகுத்து எழுதுகிறேன். (எச்சரிக்கை :இது நீளமாகப் போய் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவாகலாம்). இது அருளின் பதிவில் வந்தவை மாத்திரமல்லாமல் பொதுவில் திருவாசகம் இசைத் தொகுப்பு பற்றிய விமர்சனங்கள், அனுபவப் பகிர்வுகள், இசையைக் கேட்காமலேயே மொழியப்பட்ட தீர்ப்புகள் போன்றவற்றின்மீது ஒட்டுமொத்தமாக என்னுடைய [...]

    Read more →

    நபோ பார்மசூடிகல்ஸ் – இரண்டாம் பாகம்

    by  • July 15, 2005 • அறிவியல்/நுட்பம் • 3 Comments

    இதன் முதல் பகுதி சென்ற வாரம் நபோ இந்தியாவின் க்ளென்மார்க் நிறுவனத்துடனும், இதற்கு முன்னால் சீனாவின் ஏஷியாஃபார்ம் நிறுவனத்துடனும் ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறது. இதன் மூலம் உள்ளூர் சந்தைகளின் வகையறிந்த கூட்டாளிகள்கிடைக்கிறார்கள். மக்கள் தொகை அதிகமுள்ள இந்த நாடுகளின் பெரிய சந்தையை இலக்கு வைப்பதன்மூலம் அதிக அளவில் உற்பத்தி செய்து, விலையை உள்ளூர் சந்தைகளுக்கு ஒப்ப குறைவாக வைத்து விரைவாக விற்கமுடியும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கிறது.

    Read more →

    மருத்துவ விநியோகத்தில் புரட்சி – நபோ பார்மசூடிகல்ஸ்

    by  • July 15, 2005 • அறிவியல்/நுட்பம் • 7 Comments

    பன்னாட்டு மருத்துவ நிறுவனங்கள் தொடர்ச்சியாக வளர்ந்துவரும் நாடுகளின் மருத்துவத் தேவையைப் புறக்கணித்து வரும் நிலையில் புதிய நிறுவனமான நபோ பார்மசூடிகல்ஸின் விற்பனை உத்தி வியப்பூட்டுகிறது; மகிழ்ச்சியளிக்கிறது. நபோ க்ரோஃபெலெமெர் ( Crofelemer) என்ற புதிய மருந்தைச் சந்தைப்படுத்துகிறது . இது வயிற்றுப்போக்கை நிறுத்தவதற்கானது. இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்ட விதம் அதைச் சந்தைப்படுத்தும் முறை எல்லாமே வித்தியாசமானவை. க்ரோஃபெலெமெர் மருந்தைக் கண்டுபிடித்தவர்கள் ஷாமன் பார்மா (Shaman Pharma) என்ற நிறுவனம். 1989-ல் துவக்கப்பட்ட ஷாமன் தொன்னூறுகளில் மிகப்பரபரப்பாக முன்னேறி [...]

    Read more →

    இலவசம் என்பது கெட்டவார்த்தையாகிறது

    by  • July 14, 2005 • அறிவியல்/நுட்பம் • 16 Comments

    பிபிஸி மற்ற ஊடகங்களுக்கு எப்பொழுதுமே முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது. (இதற்கு அது அப்பழுக்கில்லாத ஊடகம் என்று அர்த்தமில்லை. ஆனால் பல நல்ல விஷயங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை). இதற்கு முக்கிய காரணம் பிபிஸி செயல்படும் விதம். இது அரசாங்க மானியம் பெறுவதில்லை. மாறாக அரசியல் சட்ட அமைப்பு மூலம் பயனர்களிடமிருந்து நேரடியாகப் பயனுரிமைப் பணத்தைப் பெறுகிறது. எனவே இதற்கு எந்தவிதமான அரசாங்கக் கட்டுப்பாடுகளும் கிடையாது. (பல நேரங்களில் இதனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு [...]

    Read more →

    கனடாவும் வெடிகுண்டு சாத்தியமும்

    by  • July 13, 2005 • கனடா • 12 Comments

    கடந்த சில நாட்களாக கனேடிய ஊடகங்களில் பெரும் பேச்சாக இருப்பது “அடுத்தது எங்கே குண்டு வெடிக்கும்”? இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னுடைய பதிவில் கருத்தெழுதிய கறுப்பியும் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார். அது குறித்த என் எண்ணங்களை விரிவாக எழுத வேண்டியிருந்ததால் உடனடியாக பதிலெழுதுவதைத் தவிர்த்தேன். கேள்வி மிகவும் பரபரப்பாகக் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அலுவலில் சக நண்பர்கள் கேட்கிறார்கள், அயலில் வசிப்பவர்கள் கேட்கிறார்கள். ரயில், பேரங்காடி, பூங்கா, மைதானம், ஏரிக்கரை என்று எல்லா இடங்களிலும் கவலையோடும், பயத்தோடும், சுவாரசியத்தோடும் கேட்டுக் [...]

    Read more →