Archive for June, 2005
தமிழ்ப்புத்தகத் தகவல் மையம் – விக்கியும் மேலும்
நேற்று இந்த விக்கி முயற்சியைப் பற்றி எழுதும்பொழுதே பத்ரி கேட்ட கேள்வியை யாராவது கேட்பார்கள் என்று நினைத்திருந்தேன். இதைப் பற்றி நேற்ற எழுதாத காரணம் டக்ளஸ் ஆடமின் கொள்கைதான் “முதலில் சாப்பிடலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும், பிறகு எங்கு சாப்பிடுவது என்று முடிவெடுக்கலாம், அப்புறம் என்ன சாப்பிடுவது என்று கவலைப்படலாம்”. எனவே, நான் நேற்று எப்படி சாப்பிடலாம் என்று எழுதவில்லை. இன்றைக்கு அது;
பல நாட்களாக இந்தத் திட்டத்தை ஒத்திப்போட்டு வரக்காரணம் [...]
தமிழ்ப் புத்தகங்களுக்கான தகவல் மையம்
நான் கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது துவக்கி, காலவரையறையின்றி ஒத்திப்போடப்பட்ட ஒரு திட்டத்தின் தொடர்பான விஷயங்களை பத்ரியும், ரவி ஸ்ரீனிவாஸ்-ம் தொட்டுப் பேசியிருக்கிறார்கள். அதிசயமான ஒற்றுமை என்னவென்றால் சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று இதைக் குறித்தும் தொடர்புள்ள இன்னொரு திட்டம் குறித்தும் இங்கே எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துடன் நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருந்தேன். இது சமீபத்தில் இங்கே பரபரப்ப்பாக நடந்த இயல்விருது விழா, பத்னாப ஐயருடனான கூட்டங்கள், புத்தகக் கண்காட்சி போன்றவற்றால் புத்துயிர் பெற்ற நேரத்தில் பத்ரி [...]
தமிழ்மொழி வாரம் : 2005
டொராண்டோவில் பல்வேறு தமிழ் நிறுவனங்களும் தன்னார்வக் குழுக்களும் இணைந்து 26 ஜூன் முதல் 2 ஜூலை வரை தமிழ்மொழி வாரத்தைக் கொண்டாட டுகின்றனர். தமிழ் மொழி மேம்பாடு, தமிழ்மொழிக்கல்வி, தமிழியல் ஆய்வு போன்ற துறைகளில் எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பதாக தமிழ்மொழி வார நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
இந்தியா, இலங்கைக்கு வெளியே மிக அதிகமாகத் தமிழர்கள் வசிக்கும் டொராண்டோவில் (கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் என்று சமீபத்திய கணிப்புகள் காட்டுகின்றன) தமிழ்க்கலை-தொழில்நுட்பக் கல்லூரி, தொறொன்ரோ கல்விச் [...]
எஸ்.பி. பாலசுப்ரமணியமும் பதினான்கு பாடகர்களும்
பொதுவில் தமிழ்த் திரையுலகில் ஒருவர் செய்ததை இன்னொருவர் தன் பாணியில் செய்துபார்க்க முயற்சிப்பதில்லை. இதுபோன்ற முயற்சிகள் சுவாரசியமானவை. உதாரணமாக, பாப் மார்லியின் பிரபலமான I shot the Sheriff பாடல் பிறகு எரிக் க்ளாப்டனால் பாடப்பட்டு மிகப் பிரபலமானது. பாப் டிலனின் Like a Rolling Stones பாடலுக்கு ஜிம்மி ஹென்ட்ரிக்ஸ் தனது அற்புதமான கிடார் இசையைச் சேர்த்தார். இன்னும், கிளாப்டனின் பாடலை பீட்டில்ஸ் பாடுவது, ஜான் லென்னானின் பாடலை மடோனா பாடுவது [...]
மைக்ரோஸாப்ட் செய்தியோடையில் சாக்கடையைக் கலக்கப்போகிறது.
இன்றைக்கு வெளியாகியிருக்கும் அறிவிப்புப் படி மைக்ரோஸாப்ட் RSS (Really Simple Syndication) என்று அழைக்கப்படும் செய்தியோடை தரத்தைக் கையாண்டு நீட்டிக்கப்போகிறதாம் . உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தமிழ்மணத்தின் ஆதார இதயமே இந்த RSS செய்தியோடை திரட்டிதான். வலைப்பதிவு பொதிகள் (ப்ளாகர், நியூக்ளியஸ், வேர்ட்ப்ரஸ், மூவபிள்டைப்,…) எல்லாம் பொதுவான தரக்கட்டுப்பாட்டின்கீழ் வரும் RSS அல்லது Atom [...]
வலைப்பதிவுகள் – ஒரு அறிமுகம்
டொராண்டோவில் சமீபத்தில் நிகழ்ந்த மொழிபெயர்ப்புப் பட்டறையின் பொழுது வலைப்பதிவுகளைப் பற்றி அறிந்திராதவர்களுக்காகத் தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகமாக இருபது நிமிடங்களுக்குப் பேசினேன். அப்பொழுது நான் பயன்படுத்திய ஓப்பன் ஆபீஸ் குறிப்புக்காட்டிகளை இங்கே வலையேற்றியிருக்கிறேன். (சென்றமுறை பிடிஎஃப் கோப்பாகப் போட்டதில் சிலருக்குப் படிக்கமுடியவில்லை எனவே மீயுரைக் கோப்பாகப் போட்டிருக்கிறேன்).
http://www.domesticatedonion.net/venkat/blog_intro/blog_intro.html
பலத்த வேலை நெருக்கடிக்களுக்கிடையில் அவ்வப்பொழுது கிடைத்த சில நிமிட இடைவெளிகளில் தயாரித்தது, எனவே சில விஷயங்கள் விட்டுப்போயிருக்கலாம். (பேசுவதற்கு முன்பு ஒருசில விடுதல்களைச் சுட்டிக்காட்டிய மதிக்கு [...]
அஞ்சலி : கார்டினல் சின்
பிலிப்பைன்ஸ் நாட்டின் கத்தோலிக்க மதத் தலைவரான ஜெய்ம் கார்டினல் சின் (Jaime Cardinal Sin) இன்று காலமானார். சில காலமாகவே பல்வேறு நோய்களால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சின் தனது எழுபத்தாறாவது வயதில் மரணமடைந்தார்.
ஏதோவொரு மூலையில் இருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் இறந்துபோன மதத்தலைவரைப் பற்றி நான் ஏன் எழுதவேண்டும்? ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. 1986ஆம் ஆண்டு அங்கே நடந்த மக்கள் புரட்சியில் தன்னுடைய கத்தோலிக்கப் பேராலாயத்தைவிட்டு வெளியேவந்து கொடுங்கோல் அரசனுக்கு எதிராக மக்களை அணிதிரள அழைப்புவிடுத்து [...]
கூகிள் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது.
இருப்பதற்குள்ளே மிக நல்ல இணையத் தேடல்பொறி கூகிள். இதில் விளையாட்டு > கிரிக்கெட் என்ற தலைப்பில் செய்திகளைத் தேடினால் இப்படி வருகிறது.
இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது.
ஃபார்முலா 1 : நாராய்ண் கார்த்திகேயனின் முதல் புள்ளிகள்
இந்த வருடம் (2005) தொடரில் முதன்முதலாகக் கலந்துகொள்ளும் இந்தியரான நாராய்ண் கார்த்திகேயன் முதல் தடவையாக ஃபார்முலா 1 புள்ளிகளைப் பெற்றிருக்கிறார். யு.எஸ் க்ரான் ஃப்ரீயில் நான்காம் இடத்தைப் பெற்று ஐந்து புள்ளிகளைப் பெற்றிருக்கிறார் நாராய்ண். இதே போட்டியில் சென்ற வருடத்தின் அசைக்க முடியாத சாம்பியனாக வந்த மிகைல் ஷுமாக்கர் முதல் முறையாக முதலிடத்தைப் பெற்றிருக்கிறார்.
ஆனால் இந்தப் போட்டி விநோதமான சூழ்நிலையில் நடந்தேறியிருக்கிறது. ஃபார்முலா 1 கார்களுக்கு மிகைலின் அல்லது ப்ரிட்ஜ்ஸ்டோன் டயர்கள் பொருத்தப்படுகின்றன. இவற்றில் [...]
காகிதக் கடிகாரம்
மின்புத்தகங்கள் (eBooks), மின்மசி (eInks), நெகிழ்திரைகள்(Flexible Displays) போன்ற நுட்பங்களில் ஏற்பட்டுவரும் வளர்ச்சியைத் தொடர்ந்து கவனித்துவருகிறேன். இதற்கு முன் என்டெர்ரா (nTera) நிறுவனத்தின் நானோநுட்பத் திரையைப் பற்றியும் சோனியின் மின்புத்தகத்தைப் பற்றியும் எழுதியிருந்தேன். மின்புத்தகத்தின் அடிப்படையில் உள்ள மின்மசி பற்றியும் அதன் இயற்பியல் அடிப்படையான மின்துளைபரவல் (electrophoresis) பற்றியும் ஏற்கனவே எழுதியிருந்தேன். இந்தக் கருவிகள் தொடரில் அடுத்ததாக வெளிவந்திருப்பது வளையும் மின்கடிகாரம் (மின் வளைக்கடிகாரம்?).











