• Archive for May, 2005

    Discovery Channel episode from my lab

    by  • May 19, 2005 • அறிவியல்/நுட்பம் • 5 Comments

    நேற்று எங்களுடைய ஆய்வகத்தில் டிஸ்கவரி சேனலின் Daily Planet நிகழ்ச்சிக்காக The Science of Star Wars என்ற ஒரு சிறிய நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டது. நேற்று இரவு இது முதன்முறையாக ஒளிபரப்பானது. (நேற்று முழுவதும் என்னுடைய ஆய்வகப் பொந்திலிருந்த வேலைப்பளுவினால் என்னால் இதைப் பார்க்க முடியவில்லை). என்னுடைய சகாவான மார்க் நான்டெல் (Marc Nantel) பங்குபெறுகிறார். இது எங்களுடைய Ultrafast Laser Micromachining Facility -ல் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. பொதுவில் இந்த Daily Planet நிகழ்ச்சி [...]

    Read more →

    தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்புப் பட்டறை

    by  • May 17, 2005 • இலக்கியம் • 7 Comments

    டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் பிரிவும் கனடா இலக்கியத்தோட்டமும் இணைந்து வழங்கும் வருடாந்திர தமிழ் இலக்கியத்திற்கான ஆயுட்கால பங்களிப்பு இயல்விருது இந்த வருடம் லண்டன் பத்மநாப ஐயருக்கு வழங்கப்படவிருக்கிறது. இது தொடர்பாக இரண்டுநாள் மொழிபெயர்ப்புப் பட்டறை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டறையைப் பேரா. பாலா ரிச்மன் (Prof. Paula Richman, Oberlin College, Ohio, USA) டாக்டர். லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் (Teaches English at University of East Anglia, UK. Scholar, editor and translator) பார்திபன் ((Lecturer, [...]

    Read more →

    சிந்தனைத் திருடர்கள் : மைக்ரோஸாப்ட் சிறுவர் போட்டி

    by  • May 14, 2005 • அறிவியல்/நுட்பம் • 1 Comment

    மைக்ரோஸாப்ட் நிறுவனம் பிரிட்டனில் இருக்கும் 14-17 வயதுவரையான குழந்தைகளுக்கு ஒரு போட்டி நடத்துகிறது. இதற்குச் சிந்தனைத் திருடர்கள் போட்டி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது ஒரு குறும்படப் போட்டி, சிந்தனைத் திருட்டால் தாங்கள் எப்படி பாதிக்கப்பட்டோம் என்று குறும்படம் எடுத்து மைக்ரோஸாப்ட்டுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். முதல் பரிசாக இரண்டாயிரம் பிரிட்டிஷ் பவுண்ட்களுக்கு விடியோ உபகரணங்கள். என்ன அபத்தம்? சிந்தனைத் திருட்டைப் பற்றி சிறுவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட மைக்ரோஸாப்ட் முயற்சிக்கிறதாம். மைக்ரோஸாப்ட் செய்து மாட்டிக் கொண்ட/மாட்டிக் கொள்ளாத சிந்தனைத் திருட்டுகளைப் [...]

    Read more →

    பெரிய வாலு – ஜப்பானில்

    by  • May 13, 2005 • ஜப்பான் • 14 Comments

    நேற்று வீட்டில் எதையோ தேடிக்கொண்டிருந்தபொழுது கையில் சிக்கிய பெரிய வாலு (விக்ரம்) படம். ஐந்து வருடங்களுக்கு முன்னால் எடுத்தது.

    Read more →

    என் அறிவியல் கட்டுரைகளும் மொழிநடையும்

    by  • May 11, 2005 • இலக்கியம் • 22 Comments

    பிரகாஷ் என்னுடைய பின்னூட்டப்பெட்டியில் கேட்டிருந்த கேள்வி தொடர்பாக . (அந்தப் பதிவின் தலைப்புக்குத் தொடர்பில்லாதது என்ற வகையில் இதைத் தனியே போடுகிறேன்). பொதுவாக அறிவியல் விஷயங்களைப் பற்றிப் பேசும் போது, ‘நீங்கள் அனைவரும்’ , எதற்காகவோ, ஒரு இறுக்கமான நடையைக் கையாள்கிறீர்கள். இசை பற்றியோ, சினிமா பற்றியோ, மற்ற பொது விஷயங்கள் பற்றியோ எழுதும் போது, இருக்கும் இளகலான, தோள்மீது கைபோட்டு அணைத்துச் செல்லக்கூடிய பாவனையை, அறிவியல் கட்டுரைகள் எழுதும் போது, வேண்டுமென்றே கழற்றி வைத்து விட்டு, [...]

    Read more →

    தமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்

    by  • May 9, 2005 • பொது • 52 Comments

    கொஞ்ச நாளாவே இதை எழுத நெனச்சிருந்தேன். தமிழ்மணம் நட்சத்திர மொறையை நாந்தான் தப்பா புரிஞ்சுகிட்டிருக்கேனா அல்லது எல்லாருமான்னு தெரியல. வெளங்க வச்சா உங்களுக்கு… கடைசில்ல சொல்லேறன். பதிவ மத்தவங்க படிக்கலாமா வேணாமான்னு மத்தவங்களுக்குச் சொல்லத்தான் காசி சாரு இந்த நட்சத்திர சமாச்சாரத்தைக் கொண்டுவந்தாரு. வழக்கமாக ஊருகூடி தேரு இளுக்கறச்ச வார சிக்கல்தான் இங்கயும். சனமெல்லாம் இளுக்க வேணாம் வடத்தைத் தொட்டுக் கண்ணுல ஒத்திக்கிட்டாலே புண்ணியம்னு நெனக்கிது. இப்ப என்னோட பக்கத்தையே எடுத்துகிங்க, அதிகமாபோனா ஒரு பதிவுக்குப் பத்து [...]

    Read more →

    மறுவாசிப்பும் தீர்ப்பும் – சுந்தரவடிவேலை முன்வைத்து

    by  • May 6, 2005 • இலக்கியம் • 5 Comments

    பொதுவிளக்கமும் நோக்கத் திரிப்பு மறுப்பும்: என்னுடைய இந்தப் பதிவு கம்பனை மாத்திரமே மனதில் கொண்டது. ஒரு படைப்பாளி, இலக்கியம் என்ற பார்வையில் மாத்திரமே. சுந்தரின் பதிவு நல்ல சுவாரசியமானது. எழுதப்பட்ட எல்லா கதைகளையுமே மறுவாசிப்பு செய்வது சாத்தியமானதுதானென்று தோன்றுகிறது. மறுவாசிப்புகள் சுவாரசியமனாவையே என்றாலும் அவை படைப்பாளியின்மீது தீர்ப்பாகச் சாற்றப்படுவதில் எனக்கு மறுகருத்துகள் உண்டு.

    Read more →

    நல்ல சேதி – கூகிளின் இணைய முடுக்கி

    by  • May 5, 2005 • அறிவியல்/நுட்பம் • 6 Comments

    உங்களிடம் அகலப்பாட்டை இணைய இணைப்பு இருக்கிறதா? அல்லது நீங்கள் பெரும்பாலான நேரங்களில் பல்கலைக்கழகங்கள் போன்ற அதிவிரைவு இணைப்புச் சூழலில் இருப்பவரா? உடனடியாக ஓடிச் சென்று கூகிளின் புதிய வெளியீடான Google Web Accelarator ஐ நிறுவிக் கொள்ளுங்கள் நான் இன்றைக்குக் காலை இதை நிறுவினேன். ஏற்கனவே என்னுடைய வாழ்க்கையின் இரண்டு நிமிடங்களைச் சேமித்துவிட்டேன். இது இப்பொழுதைக்கு மைக்ரோஸாப்ட் தளங்களுக்குத்தான், லினக்ஸில் செயல்படாது.

    Read more →

    அஞ்சலி: ராபர்ட் ஹன்டர் (1941-2005)

    by  • May 3, 2005 • கனடா • 4 Comments

    நான் டொராண்டோவில் குடியேறிய நாட்களில் அதிகாலை செய்திகளிடையே சிட்டிடிவி என்ற தொலைக்காட்சியில் ஒருவர் குடுமியுடனும், படுக்கையறை அங்கியுடனும் வந்து அன்றைய செய்தித்தாட்களிலிருந்து தான் வெட்டிய செய்திகளைப் பற்றிய விமர்சனங்களைச் சொல்லுவார். Papercuts என்று பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சியில் வருபவரின் பெயர் பாப் (ராபர்ட்) ஹன்டர். சில சமயங்களில் அவருடைய விமர்சனங்கள் எரிச்சலூட்டும், ஆனால் பொதுவில் அவருடைய ஒற்றைவரி எண்ணங்கள் பொருத்தமாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்கும். படுக்கையிலிருந்து உடைகூட மாற்றாமல் வருபவர் என்பதைத் தவிர பெரிதும் அவரைப்பற்றி விசேடமாக நான் [...]

    Read more →