மைக்ரோஸாப்ட் : ஒரு முடிவின் ஆரம்பம் ?? – இரண்டு
ஐபிஎம் ஒரு கிழட்டுச் சிங்கம்தான். ஆனால் அதன் பற்களில் இன்னும் வலுவிருக்கிறது. ஐபிஎம்-ஐ ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்றால் அது ஹெச்பி, சன் மைக்ரோஸிஸ்டம் போன்றவற்றுடன்தான் இருக்க வேண்டும். இவர்கள்தான் வன்கலன், மென்கலன், சிலிக்கன் சில்லுக்கள், வழங்கிகள், தகவல் நுட்பச் சேவைகள் என்று ஐபிஎம்-மின் ஆதார வணிகத்துடன் மோதுகிறார்கள். இந்த நிலையில் பார்த்தால் ஹெச்பி, சன் இரண்டுமே தொடர்ச்சியாக வலுவிழந்து வருகின்றன் நிலையில் ஐபிஎம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது. மிக்ச் சாதுரியமாக தன்னுடைய சிறுகணினிகள் பகுதியை லெனோவோவிடம் இறக்கிவிட்டு சுமை குறைந்திருக்கிறது. மேசைக்கணினி, மடிக்கணினி இவற்றைக் கொண்ட இந்த வர்த்தகம் ஈவு இரக்கமின்றி ஆளைக் கொல்லும் என்பதில் ஐயமில்லை. டெல் என்ற சிறுத்தை இப்பொழுது தன்னுடைய உச்சத்தில் இருக்கிறது. அற்புதமான வணிக முடிவுகளைத் தொடர்ச்சியாக எடுப்பதன் மூலம் டெல் அதி அற்புத வலு நிலையிலிருக்கிறது. (மைக்ரோஸாப்டைப் போல தகிடுதித்தங்கள் அதிகம் இல்லாமல் பெரிதும் விதிகளுக்குட்பட்டு விளையாடும் டெல்-லின் தலைவரான மைக்கேல் டெல்தான் என் கண்களில் இந்தத் தலைமுறையின் அதியுன்னத வர்த்தகராகத் தெரிகிறார்). காலில் வலுவிழந்த நிலையில் கிழச்சிங்கம் தன்னுடைய எடையைக் குறைத்துக்கொள்வதுதான் வேட்டையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள உதவும். அந்த வகையில் இப்பொழுது வெற்றுச் சுமையாக இருந்த சிறுகணினி பிரிவை இறக்கிவைத்துவிட்டு உறுமுகிறது ஐபிஎம்.
பலரும் எதிர்பார்ப்பதைப் போல இது ஐபிஎம்-ஐ முற்றாக சிறுகணினி வர்த்தகத்திலிருந்து விலக்கி வைக்கப்போவதில்லை. மாறாக அதற்கு புதிய சாத்தியங்களை அளிக்கவல்லது. சீனாவில் இப்பொழுது மிகப் பரபரப்பாக லினக்ஸ் மேசைத்தளம் முன்னேறி வருகிறது. லெனோவோ இந்தப் பரபரப்பில் முக்கிய இடத்தை வகிக்கப்போகிறது. கட்டுப்பாடுகளை லெனோவோவுக்குக் கொடுத்துவிட்டாலும் அந்நிறுவனத்தில் ஐபிஎம்மிற்கு முக்கிய பங்கிருக்கிறது. நாளை லினக்ஸ் சிறுகணினிகளில் முக்கிய இடம் வகிக்கத்தொடங்கும்பொழுது ஐபிஎம் தன் லெனோவோ-லினக்ஸ் தொடர்பைப் பயன்படுத்தி மீண்டும் இந்த வியாபாரத்தில் இறங்கக் கூடும். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் லினக்ஸ் மேசைத்தள சோதனையில் நேரடியாக ஈடுபடாமல் ஐபிஎம் அடியாளை வைத்து காரியத்தை முடிக்கும் உத்தியில் இருக்கிறது.
இந்த சுமை இறக்கத்திற்கு முன்பு ஐபிஎம் சென்ற வருடம் இன்னொரு சாதுரிய முடிவை எடுத்தது. அது சூசி லினக்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் நாவெல்-க்கு அந்த நேரத்தில் 50 மில்லியன் டாலர்கள் பணம் தந்து உதவியதுதான். இதன் மூலம் சூசி லினக்ஸை தன் வழங்கிகளின் நிறுவி விற்கும் உரிமையை ஐபிஎம் பெற்றுக்கொண்டது. கடந்த சில வருடங்களாகவே தன்னை திறமூலப் பாதுகாவலனாகக் காட்டிக் கொள்ள ஐபிஎம் முனைந்து செயல்பட்டு வருகிறது. முதலில் தன்னுடைய வெப்ஸ்·பியர் சாதனங்களில் இணையச் சேவை வழங்க அப்பாச்சேயைத் தெரிந்தெடுத்தது. பின்பு பெர்ல்-க்கு ஆதரவு, தன்னுடைய பல காப்புரிமைகளைத் திறமூல நிரலர்களுக்குத் திறந்தது என்று தொடர்ச்சியாக ஐபிஎம் திறமூல உலகை அரவணைத்துக் கொண்டு போகிறது.
இன்றைக்குத் திறமூலத்தின் வெற்றியை உறுதியாகச் சொல்ல ஒரு பொதியைக் காட்டவேண்டுமென்றால் அது அப்பாச்சேதான். என்னமோ முயன்று பார்த்தும் மைக்ரோஸாப்ட் அப்பாச்சேயின் சந்தைப் பங்கைக் குறைக்க முடியவில்லை. இந்த நிலையில் தானும் ஒரு சேவை வழங்கு பொதியைத் தயாரிக்காமால் ஐபிஎம் தெளிவாக அப்பாச்சேயைக் கையாண்டது. ஒரு வகையில் அப்பாச்சேக்கு ஆதரவு அளித்ததன் மூலம் மைக்ரோஸாப்ட்டின் இணையச் சேவைப்பொதி ஐஐஎஸ் பெரிய வெற்றியடையாமல் போக ஐபிஎம் காரணமாகிறது.
இப்பொழுதெல்லாம் அப்பாச்சேயின் முதலிடத்தை முறிப்போம் என்ற பகல்கனவு காணுவதை மைக்ரோஸாப்டே நிறுத்திவிட்டதாகத்தான் தோன்றுகிறது.
Popularity: 3% [?]
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
Comments
I strongly disagree with you on IBM . If you belive IBM making good decision , Lotus 123 should be Numero one Spreadsheet application , NOtes hshould be Numero one Email/Collabrative application . But IBM failed in all fronts whether with notes (iris Associates) or PWC ( Business consulting ). Even after Leveno deal IBM is not performing well due to lack of focus . They are losing revenue to Linux instead of Microsoft. IBM made lot of revenues due to its strength in Mainframe ,after Linux made in roads Sun and IBM loosing revenues. The only Good news is all next genration gaming consoels are based on IBM processors . Even long time ally ( PowerPC ) Apple wants to test water with Intel Inside . so outlook does nt look bright for IBM . but it is better in case of Microsoft . Dell can not be compared to IBM and HP as it is not established as a enterprise vendor ( still a PC mail order business vendor)
வெங்கட், ஐபிஎம்பின் வழியினைப் பற்றி இப்போதுள்ள சூழ்நிலையில் என்னால் சொல்ல முடியாது. ஆனாலும், உலகமெங்கும் அவர்களின் ஆன் டிமெண்ட் இயக்கிகளை பெருமளவில் சந்தைப்படுத்த முயன்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எனக்கென்னவோ மைக்ரோசாப்ட் கணிவிளையாட்டுச் சாதனங்களில் பெருமளவு முன்னேறியிருக்கிறது என்றே தோன்றுகிறது. அவர்களின் எக்ஸ் பாக்ஸ் சோனியின் ப்ளேஸ்டேஷனோடும், நிடடடோன்டோவிடமும் நேரடியாக மோதுகிறது. சோனிக்கு கடந்த 5 வருடங்களாக பட்ட காலிலேயே படும் என்பது போல் தொடர்ச்சியான அடிகள். பானசோனிக் தீடீரென உற்சாகம் பெற்று டிஜிட்டல் விடியோ கேமராக்களில் முந்துகின்றார்கள். எரிக்சஸனுடன் சேர்ந்து செல்பேசிகள் சந்தையில் இருந்தாலும், முதலிரண்டு இடத்தில் இருப்பது நோக்கியாவும், மோட்டரோலாவும் தான். சோனியின் கன்ஸ்யுமபுள் வணிகத்தில் ஏகப்பட்ட கொரிய,தைவானிய,இந்திய [மோசர்-பெயர்] நிறுவனங்களின் ஆதிக்கம். இதில் கணிவிளையாட்டினைப் பொறுத்தவரை ஜப்பானில் நிட்டடோன்டோவும், அமெரிக்க ஐரோப்பிய சந்தையில் மைக்ரோசாப்ட்டோடும் மோத வேண்டிய கட்டாயம். இதில் மைக்ரோசாப்டிற்கு பெரிதாக இழப்பில்லை, ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை அது அவர்களுக்கு இன்னொரு சந்தை வாய்ப்பு, ஆனால் சோனிக்கு அது முதன்மையான வணிகத்தில் ஒன்று. [தொடர்கிறது ....]
டெல் நன்றாக இருக்கிறார்கள். ஆனால், இன்னமும் எத்தனை நாட்களுக்கு அவர்களின் வியாபார மாடல் தாங்கும் என்று தெரியவில்லை. DEC-யை காம்பேக் வாங்கி நாசம் பண்ணது போல், எச்.பி காம்பேகினை வாங்கி நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்தளவிற்கு லெனோவாவிடமும், உள்ளூர் கணி வியாபாரிகளோடும் எச்.பி போட்டிப் போட போகிறது என்பது யோசிக்க வேண்டிய விஷயம். ஆனால், எச்.பி, இன்றளவும் அவர்களின் ஆதார வணிகமான, அச்சு வன்பொருள்களில் மிக பலமாக உள்ளது. கொஞ்ச நாட்களுக்கு முன் கர்லீ பிளோரினாவினை வெளியேற்றி, புது தலைமையாளர் வந்தவுடன் வார்டன் மேலாண்மை பள்ளி ஒரு செய்தியினை எழுதியிருந்தனர். அதில் எனக்கு பிடித்து நான் ரசித்த விஷயம், எச்.பி கோடக்,பியுஜி போன்ற நிறுவனங்களோடு இணைந்து, ஆப்பிள் குறிவைத்திருக்கும் டிஜிட்டல் லைப்ஸ்டைல் சந்தையினை நோக்கி நகரவேண்டும். வெறுமனே வன்பொருள் தயாரிப்பில் மட்டுமிருந்தால், நாளை வேறெதாவது இந்திய,சீன,தைவானிய வன்பொருள் நிறுவங்கள் அதனை வாங்கி ஏப்பமிட்டுவிடும். [தொடர்கிறது....]
லினக்ஸ் பற்றிய ஐபிஎம்மின் பார்வை நன்றாக இருந்தபோதிலும், நேரடியாக சந்தையில் பெருமளவில் இருப்பது ரெட் ஹாட் போன்ற நிறுவனங்கள். வெறுமனே ப்ரேம்வொர்க் செய்கிறேன், ஆதரிக்கிறேன் என்று சொல்லாமல், ஆதார நிரலிகளையும், பொதிகளையும் பரவலாக்காமல் எதுவும் ஐபிஎம்மால் செய்யமுடியாது. அப்பாச்சே, மைக்ரோசாப்ட் யுத்தம் என்னளவில் முடிந்துவிட்டது. அப்பாச்செ is way ahead of microsoft servers. இன்றைய சமன்பாட்டில் மைக்ரோசாப்டும், ஆப்பிளும் ஒரே குறிக்கோளை நோக்கி வெவ்வேறு திசையில் பயணிக்கிறார்கள். லாங் ஹார்ன் என்றைக்கு வருமென்று தெரியாது ஆனால் அது 64-பிட் ப்ராசசரில் தான் வேலை செய்யும் என்றும், குறைந்தபட்சம் 512MB ரேம் தேவையென்றும் செய்திகள் வருகின்றன. இந்திய, சீன சந்தையில் இதன் பாதிப்பினை யோசித்துப் பாருங்கள். அவ்வளவு சீக்கிரம் மைக்ரேட் ஆவார்கள் என்று தோன்றவில்லை. ஆக, மைக்ரோசாப்ட் தன்னை முழுவதுமாக நிருபிக்க குறைந்தது 3-4 ஆண்டுகளாகும். நீங்கள் இதில் சேர்க்காதது, லினக்ஸும் செல்பேசிகளும், நோக்கியா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவங்களின் ஹைபிரிட்-செல்பேசிகள் சந்தை, Distributed Computing, Thin Clients [தமிழில் எப்படி இவற்றை சொல்லலாம்?] இன்னும் சில வாழ்வொயில்[Digital Lifestyle-க்கு இப்படி சொல்லலாமா?] பொருட்களின் சந்தை போன்றவைகள்
[1] பாலாஜி – இது ஐபிஎம்மின் நிலையைப் பற்றி ஆராயும் நோக்கமில்லை. மைக்ரோஸாப்ட்டின் பலவீனங்களைப் பட்டியலிடும் நோக்கமே. எனவே முதலாவது டிஜிட்டல் லைப்ஸ்டைல் சந்தையை ஆப்பிளிடம் இழந்துகொண்டிருப்பது. அடுத்ததாக மறு எல்லையில் வெப்ஸர்வர் சந்தையை அப்பாச்சேயிடம் கோட்டை விட்டது (இதற்கு ஐபிஎம் ஒருவகையில் காரணம்). மேலும் ஐபிஎம் லினக்ஸில் பணம் போடுவது உபகாரணிதான்.
[2] மாமூ – ஐபிஎம் சரியான முடிவுகளை எடுக்கவில்லையாக இருக்கலாம். ஆனால் சரியான முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் (நிகழ்காலம்). எனக்குத் தெரிந்து அவர்கள் லினக்ஸை, அப்பாச்சேயை முன்வைத்து, மேசைக்கணினி வியாபாரத்தைக் கழித்துவிட்டு தங்களை மெலிதாக்கிக் கொள்வது இப்பொழுதைய சூழ்நிலையில் நல்ல முயற்சிதான்.
லோட்டஸ் இன்னபிறவற்றில் தோற்றதற்கு மைக்ரோஸாப்ட்டின் அன்றைய அசுர வளர்ச்சி முக்கிய காரணம். இப்பொழுது மைக்ரோஸாப்ட்டே வளரமுடியாமல் தள்ளாடுகிறது. இந்த நிலையில் தன்னைத் தற்காத்துக்கொள்வதே அதற்கு முக்கிய செயலாக மாறி, அதனுடைய அரக்கத்தனமான அழிப்பு குறைகிறது.
டெல்லையும் ஐபிஎம்-ஐயும் ஒப்பிடக்கூடாது. ஹெச்பி, சன் தான் ஐபிஎம்முக்கு நேரடிப் போட்டி, சமீபத்திய முடிவுகள், நிகழ்வுகள் அடிப்படையில் இந்த மூன்றில் ஐபிஎம் முந்துகிறது என்பதுதான் என்னுடைய பகுதி இரண்டின் சேதி.
[3] [4] [5]
நாராயணன் – நான் இன்னும் நிறைய விளையாடவிருக்கிறேன். இந்த எக்ஸ்பாக்ஸ் விஷயம் பின்னால் வ்ருகிறது (இங்கே மைக்ரோஸாப்ட்டுக்கு வெற்றி தோல்வியில்லை. போர் இன்னும் தொடர்கிறது). நான் முதலில் தோல்விகளைப் பட்டியலிடுகிறேன். பின்னர் போர்கள். கடைசியில் மைக்ரோஸாப்டின் வெற்றித்தளங்களும் வரும். மொத்தக் கணக்கில் அதன் இழப்புக் காட்ட முயற்சிப்பேன்.
ஹெச்பி பற்றி எனக்கு உயர்ந்த அபிப்பிராயம் இல்லை. ஆப்பிளுக்கு, சோனிக்கு இருப்பதைப் போல ஒரு ஸ்லீக் இமேஜ் அதற்கு எப்பொழுதும் கிடையாது. இது இல்லாமல் லைஃப்ஸ்டைல் விஷயத்தில் போட்டியிடமுடியாது. மேலும் இந்த சந்தை கணினியைவிடக் கொடுமையானது. இங்கே இன்னும் பல முக்கிய போட்டியாளர்கள் உண்டு. உதாரணமாக, க்ரியேட்டிவ், ஐரிவர், சாம்ஸங் போன்ற்வற்றுக்கு துள்ளூம் கால்கள் உண்டு. ஹெச்பியின் கால்களில் இரும்புகுண்டுகள் கட்டப்பட்டிருக்கின்றன (அதன் கடந்தகால வரலாறு) கார்லி ஃபியோரினா ஹெச்பியை இன்னும் பின்னுக்குத் தள்ளிவிட்டார். காம்பாக் விஷயத்தில் நீங்கள் சொல்வது சரி.
லாங்க்ஹார்ன் இன்னும் பல சமாச்சாரங்களும் வரும். (எவ்வளவு பேர் இதைப் பற்றி பேச ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைப் பொருத்து
)
ஐரிவர், க்ரியேட்டிவ் இரண்டுமே என்னைப் பொறுத்தவரை செத்துக் கொண்டிருக்கும் நிறுவனங்கள். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். மற்றவை சில நாட்கள் கழித்து பதிகிறேன்.
[10] ஐ-ரிவர் தொழில்நுட்பத்திறனுள்ள நிறுவனம். அதற்குப் பிற துறைகளில் சற்றும் அனுபவம் கிடையாது.
மாறாக க்ரியேட்டிவ் – கணினி ஆடியோவில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். அவர்களின் வாழ்வும் தாழ்வும் ஜென் பிளேயரில் மாத்திரமில்லை. அவர்களுக்கும் தொடர்ச்சியாகத் தொழில்நுட்ப முன்னேற்றத் திறன் இருக்கிறது.












Venkat, konjam details please (P/E analysis, how they did last quarter etc), instead of taking jabs at IIS and other sundry businesses.
My guess from looking at their profile is that even if their OS/Office market saturates, they have enough assets (38B) to buy their way through any market (ERP / Analytics etc).