அமெரிக்கா விரைவில் தன்னுடைய பயணிகள் விமானங்களுக்கு தற்காப்பு ஏவுகணைகளைப் பொருத்தப் போகிறது. இதற்கான மொத்த செலவு பத்து பில்லியன் டாலர்கள். (இதன்மூலம் அமெரிக்க இராணுவ வியாபாரிகள் சம்பாதிக்கப்போவது பத்து பில்லியன் என்று படிக்கவும்). வெறிபிடித்து அலையும் தற்போதைய அமெரிக்க அரசாங்கத்தின் இன்னொரு அபத்த நடவடிக்கை இது. அமெரிக்கர்களின் கணிப்புப்படி உலகெங்கிலும் மூன்றரை இலட்சம் தோளிலிருந்து ஏவக்கூடிய விமானத்தாக்கு ஏவுகணைகள் இருக்கின்றனவாம். இவற்றில் சில ஆயிரம் கணக்கில் வராமல் காணாமல் போயிருக்கின்றனவாம். இந்த ஆயிரத்தில் சிலவற்றை யாராவது திருடிக்கொண்டுவந்து [...]
Read more →