• Archive for April, 2005

    தகவல் (இல்லாத) அமைச்சர்

    by  • April 18, 2005 • அறிவியல்/நுட்பம் • 5 Comments

    இந்த வார ஜுனியர் விகடனில் “புத்தாண்டில் புது சாதனை” என்று தலைப்பிடப்பட்டு இந்தியாவின் மத்திய தகவல் துறை மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனின் நேர்முகம் வெளியாகியிருக்கிறது. இதில் பல சாதனைகள் பட்டியலிட்டுத் தரப்பட்டிருக்கின்றன. (நேர்முகத்தின்படி அமைச்சரே பட்டியலைத் தயாரித்துக் கொண்டு வந்திருந்ததாகவும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிற கேள்விகளுக்கு முன் அதை ஒப்பித்ததாகவும் தெரியவருகிறது). அமைச்சர் தயாநிதி மாறனின் பேட்டி (PDF கோப்பு வடிவில்) < %image(20050418-maaran_jv.jpg|514|140|maa)%>

    Read more →

    சட்டை மடிக்கத் தெரியுமா?

    by  • April 16, 2005 • ஜப்பான் • 1 Comment

    பல வருடங்களாக இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாலும் இன்றைக்கும் சட்டையை ஒழுங்காக மடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்குக் கிடையாது. வார இறுதியில் இரண்டு நாட்கள் வீட்டிலேயே கழித்தாலும், திங்கட் கிழமை காலை அந்த முக்கியமான மீட்டிங்குக்குச் செல்ல சட்டையை எடுத்துப் போட்டுக்கொள்ளும் பொழுது வலது பக்கம் இரண்டு மடிப்புகளும் இடது தோளில் திராவிடக் கழகம் போல ஒன்றாக ஆரம்பிக்கும் மடிப்பு பணம் இருக்கும் இடமான சட்டைப் பைக்கு அருகில் வந்தவுடன் திமுக, அதிமுக என்று இரண்டாகக் [...]

    Read more →

    100 டாலர் மடிக்கணினி

    by  • April 14, 2005 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    இவ்வார Wired சஞ்சிகையில் $100 டாலர்களில் உலகெங்கிலும் இருக்கின்ற பள்ளிக் குழந்தைகளுக்கு மடிக்கணினி கொடுப்பதைப் பற்றிய தகவல் வந்திருக்கிறது. (முன்பு ஒரு முறை மாஸாசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் ஊடக ஆய்வகத்தின் தலைவர் நிக்கோலஸ் நெக்ரோ·பான்டே இதைப் பற்றி சொல்லிய பொழுதே எழுதவேண்டும் என்று நினைத்துத் தவறிப்போனது). இன்றைய தயாரிப்புச் செலவுப்படி வெறும் திரையைத் தயாரிக்கவே $180 டாலர்கள் ஆகும் நிலையில் எப்படி முழுக்கணினியையும் நூறு டாலர்களில் அடக்குவது?

    Read more →

    ஆப்பிள் மக்கின்டோஷில் தமிழ்

    by  • April 12, 2005 • அறிவியல்/நுட்பம் • 11 Comments

    விரைவில் வெளிவரவிருக்கும் டைகர் இயக்கு தளத்தில் தமிழ் வசதி சேர்க்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் அறிவித்திருக்கிறது. தமிழ் வசதி என்றால் முழுவதும் கணினியைத் தமிழிலேயே இயக்குவதற்கான இடைமுகம் இல்லை. இது தமிழ் பார்வையிடும், தமிழில் எழுதும் வசதி மாத்திரமே. இருந்தபொழுதும் இது ஒரு பெரிய முன்னேற்றம். இதற்கு முன்னால் ஆப்பிள் பயன்படுத்துபவர்கள் தமிழைப் படிக்க முடியாமால் திண்டாடினார்கள். இனி ஸஃபாரி உலாவியில் யுனிகோடு தமிழ் தெரியும். தமிழில் தட்டச்சு செய்யும் வசதி இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் எந்த முறையைப் பயன்படுத்தி [...]

    Read more →

    இடைவெளி

    by  • April 4, 2005 • பொது • 8 Comments

    கடந்த சில நாட்களாக நான் நிறையப் பேசியிருக்கிறேன். யாருக்கும் பயனற்ற இவை தேவையில்லை என்று எனக்கே தெரிகிறது. மனதில் பட்டவை, நேர்மையானவை என்று சொல்லவரும்பொழுதுகூட வார்த்தைகள் நீண்டு கொண்டே போனால் புரிதலைக்காட்டிலும் பிணக்குகளே அதிகரிக்கின்றன. எனக்கு எல்லாவற்றையும்விட நண்பர்கள் மிகவும் முக்கியமானவர்கள். பேச்சைக் குறைக்கும்பொழுது தவறாகப் புரிந்துகொள்வதற்கான சாத்தியங்களும் குறையலாம். எனவே இதைவிட்டு சில நாட்கள் விலகியிருக்கலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். மீண்டும் என் நிலைக்குத் திரும்பி ஆக்கபூர்வமாக எதாவது எழுதமுடிந்தால் எழுதலாம் இல்லையென்றால் சில நாட்கள் இதை [...]

    Read more →

    அசோகமித்ரன் என்ற மனிதன்

    by  • April 3, 2005 • இலக்கியம் • 7 Comments

    அருள்செல்வனின் பதிவின் வழியே அசோகமித்ரனின் அவுட்லுக் கட்டுரையைப் பற்றி அறியக்கிடைத்தது. அவுட்லுக் தளத்திற்குச் சென்று பார்த்ததில் தளத்தில் இருப்பதே முழுமையானதாகவும் அச்சுப்பதிப்பில் இது சுருக்கப்பட்டிருபதாகவும் தெரியவந்தது. அருள் படித்தது சுருக்கப்பட்ட அபத்தமா அல்லது முழு அபத்தமா என்று தெரியவில்லை. ஏனென்றால் அருள் இதன் ஒரே ஒரு பகுதியைப் பற்றி, மிகவும் லேசாக எழுதியிருக்கிறார். அருளைப் போலவே எனக்கும் அசோகமித்ரன் மீது அளவு கடந்த மதிப்பு இருந்தது. டொராண்டோ இலக்கியச் சந்திப்புகளில் பூரணி மகாலிங்கம், அ. முத்துலிங்கம், செல்வம், [...]

    Read more →

    யாருடைய உண்மைகள் – இன்னும் கொஞ்சம் கருத்துக்கள்

    by  • April 1, 2005 • கனடா • 21 Comments

    கனேடிய ஒலிபரப்புக் கழகத்தில் வெளியான “யாருடைய உண்மைகள்” என்ற ஈழப்போராட்டம் குறித்த தொடர் நிகழ்ச்சியைப் பற்றி நான் எழுத அதன் பின்னாக எனக்கும் பத்ரிக்கும் இடையில் எழுந்த உரையாடலின் தொடர்ச்சி. பத்ரி – நீங்கள் சொல்வதில் பல முரண்கள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி பின்னர். முதலில் – போராளிச் சிறுவர்களைப் பற்றிய என் கண்ணோட்டம் என் குழந்தைகளுக்குத் தகப்பன் என்ற பார்வையில். நேற்று மாலை பள்ளிக்கூடத்தில் ஓசி ஸ்கேட்போர்ட்டில் சறுக்கி இரண்டு காலிலும் முட்டியைப் பேர்த்துக்கொண்டு வந்தான் [...]

    Read more →