Archive for April, 2005
ஒப்பன் ஆபீஸ் தமிழ் விரைவாகத் தரவிறக்க
நானறிந்த வகையில் ஒப்பன் ஆபீஸ் 1.4 தமிழ் வடிவத்தைத் தரவிறக்க அதிகச் சிக்கல்கள் இருக்கின்றன. ஓப்பன் ஆபீஸ் தளத்திலிருந்து போனால் பாரதீய தளத்திற்கு இட்டுச் செல்கிறது. அங்கே சி-டாக்கின் வழங்கிகள் மிக மிக மெதுவாகச் செல்கின்றன.
தமிழா! குழுவின் தளத்திலிருந்தும் ஒப்பன் ஆபீஸ் பொதிகளுக்கு இணைப்பு இல்லை. எனவே, புதிய ஓப்பன் ஆபீஸ் 1.4 (தமிழ் வடிவத்தை) என்னுடைய வழங்கியில் போட்டுவைத்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் இங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
விண்டோஸ் கணினிகளுக்கானது
லினக்ஸ் கணினிகளுக்கானது
சிடாக்கின் சமீபத்திய [...]
நாஸா திறமூல வழியில் இணைகிறது
அமெரிக்க விண்ணாராய்ச்சி நிறுவனமான நாஸா தனக்குத் தேவையான பல நிரலிகளைத் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ராக்கெட்டுகளை இயக்குதல், செயற்கைக்கோள்களை ஏவுதல், விண்வெளியில் படம் எடுத்தல், பிற கோள்களில் இருக்கும் வேதிப்பொருள்களை ஆராய்தல், இன்னும் ஆளில்லா வெளியில் பல தானியங்கி கருவிகளையும் ரோபோட்களையும் இயக்குதல் போன்ற சிக்கலான பல நிரலிகள் நாஸாவுக்குத் தேவையாக இருக்கின்றன. இந்த நிரலிகள் பிழையில்லாமல் இயங்கவேண்டியது மிகவும் முக்கியம், உதாரணமாக, விண்கலனை ஏவும் நிரலி பிழையாகிப் போனால் அதிலிருக்கும் எல்லா கருவிகளுமே பயனற்றுப் [...]
இனியும் அழவேண்டாம் சகோதரி – ஆவணப்படம்
ரஜினி திரணகம தனது முப்பத்தைந்தாவது வயதில் 1989ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பொழுது அவர் யாழ் பல்கலையின் உள்ளுடலியல் (anatomy) துறையின் பேராசிரியையாக இருந்தார். அவருக்கு இரண்டு பெண்குழந்தைகள். இவரைக் குறித்த No More Tears Sister ஆவணப் படம் National Film Board of Canada வால் தயாரிக்கப்பட்டு டொராண்டோவில் தற்பொழுது நடைபெறும் HotDocs என்ற ஆவணப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
நற்செய்தி: அண்ணா பல்கலையில் தளையறு மென்கலன் மையம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் முதல் தளையறு மென்கலன் (Free – Open Source Software) மையம் நிறுவப்படவிருக்கிறது. மத்திய அரசு இதற்கென கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய்கள் அண்ணாவிற்கு மானியம் அளித்திருக்கிறது. நண்பர் சரவணன் அவருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கே.பி. சந்திரசேகர் மையத்தின் தலைவர் திரு கிருஷணமூர்த்திக்கும் இடையில் நடந்த தகவல் பரிமாற்றத்தின் சில பகுதிகளை அனுப்பியிருந்தார். இது குறித்த செய்தி தி ஹிந்து நாளிதழிலும் வெளியாகியிருக்கிறது.
சி-டாக் குறுவட்டு தரும் பாடங்கள் – 2. மென்கலன் பொதியாக்கம்
நான் சிடாக்கின் குறுவட்டை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் அதன் உள்ளடக்கங்களாக அவர்கள் தளத்தில் போட்டுவைத்திருந்தவை எல்லாவற்றையும் தரவிறக்கிப் பார்த்துவிட்டேன். (விரைவில் இதை மற்ற நண்பர்களுக்காக என் தளத்தில் போட்டுவைக்க உத்தேசம். சிடாக்கின் தளம் மிக மிக மெதுவாகச் செல்கிறது). கூடவே நண்பர் பத்ரி என் வேண்டுகோளுக்கிணங்க குறுவட்டின் எல்லா கோப்புகளின் பெயர்களையும் பட்டியலிட்டு அனுப்பினார் (நன்றி). இதைக் கொண்டு அந்தக் குறுவட்டில் என்ன இருக்கிறது என்று நன்றாக ஊகிக்க முடிகிறது.
மத்திய அரசுக் குறுவட்டும் கருணாநிதியும்
ஒரு வழியாக சி-டாக்கின் தளத்திலிருந்து கடவுச்சொல் இதியாதி எல்லாம் இல்லாமல் எப்படி குறுவட்டு சமாச்சாரங்களைத் தரவிறக்குவது என்று நோண்டிக் கண்டுபிடித்துவிட்டேன். ஒரு சிறிய shell script எழுதி என்னுடைய லினக்ஸ் வழங்கியில் இறக்கப் போட்டு ஒட்டுமொத்தமாக 90% இறங்கிவிட்டது.
குறுவட்டின் முகப்புகூட இறங்கிவிட்டது. இப்பொழுதுதான் சரியாகப் பார்க்கிறேன். இதில் மன்மோஹன் சிங், சோனியா காந்தி, கருணாநிதி, தயாநிதி மாறன் ஆகியோரின் படங்கள் இருக்கின்றன. முதலும் கடைசியும் புரிகிறது. சோனியா காந்தி ?? ஆளும் கட்சித் தலைவி, வெளியிலிருந்து காக்கும் [...]
இந்தியாவில் இனி மென்கலன் காப்புரிமை கிடையாது
இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே. இன்றைக்கு வெளியான ஒரு நல்ல தகவலின்படி இந்திய அரசாங்கம் மென்கலன் காப்புரிமையை நீக்கியிருக்கிறது. இந்தியத் தளயறு மென்கலன் கழகத்திலிருந்து வெளியான செய்தியின்படி 1970 ஆண்டு இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் மீது மென்கலன் காப்புரிமைப் பிரிவைக் கொண்டுவருவதாக இருந்த சட்டத் திருத்ததை நிறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தத் திருத்த விலக்கலுக்கு இடதுசாரிக் கட்சிகளின் பங்கு தளையறு மென்கலன் நிறுவனத்தால் பாராட்டப்பட்டிருக்கிறது. அது உண்மையாக இருந்தால் இந்தியாவில் நீநீண்ண்ட நாட்களுக்குப் பிறகு இடதுசாரிகள் செய்யும் [...]
தமிழ்மணம் இற்றைப்படுத்துகிறதா?
மத்திய அரசின் குறுவட்டு கற்பிக்கும் பாடங்கள் என்று தலைப்பிட்டு இன்று அதிகாலை நான் எழுதிய பதிவு தமிழ்மணத்தில் தென்படவில்லை. இன்னும் சில நாட்களுக்கு முன்பு நூறு டாலர் மடிக்கணினி பற்றி எழுதியதும் வரவில்லை.
இது சோதனைக்காக எழுதப்படுகிறது. கண்டுகொள்ளாதீர்கள். கண்டுகொள்ள வேண்டிய விஷயம் இதற்கு முந்தைய பதிவில் இருக்கிறது
மத்தியஅரசின் குறுவட்டு கற்பிக்கும் பாடங்கள் – பொருளாதாரம்
1. பொருளாதாரம்
{கடந்த சில தினங்களாக மத்திய அரசினால் வெளியிடப்பட்ட குறுவட்டை நான் முழுமையாகப் பார்க்க மேற்க்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. இந்தக் குறுவட்டில் என்னென்ன இருக்கின்றன, இவற்றில் எவை வர்த்தகக் கருவிகள், எவை திறமூலத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்ற முழுமையான விபரங்கள் எனக்குத் தெரிந்தால் உதவியாக இருக்கும். நாராயணனையும் பத்ரியையும் (நானறிந்த வகையில் இந்தக் குறுவட்டு பெற்றவர்கள்) தொடர்பு கொண்டேன். இன்னும் கிடைக்கவில்லை. யாராவது இந்தக் குறுவட்டின் உள்ளடக்கத்தை என்னுடைய வழங்கியில் போட்டால் (அல்லது அவர்களாக ஒரு இடத்தில் [...]
தேவகாந்தனின் ‘கதாகாலம்’ வெளியீட்டு விழா
டொராண்டோ ஸ்கார்புரோ சிவிக் செண்டரில் 17 ஏப்ரில் 2005 அன்று மாலை தேவகாந்தனின் ‘கதாகாலம்’ நூல் வெளியீட்டு விழா நடந்தது. மிகச் சமீபத்தில் கனடாவிற்குப் புலம்பெயர்ந்திருக்கும் எழுத்தாளர் தேவகாந்தன் இதற்கு முன் சென்னையில் வசித்திருந்தார். மகாபாரதத்தின் மறுவாசிப்பு என்று துணைத்தலைப்பிடப்பட்ட இந்த நூல் காலம் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது.
நூல் வெளியீட்டு விழா இரண்டு அமைவுகளாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. முதல் அமர்வில் சம்பிரதாயமான முறையில் நூல் வெளியிடப்பட்டது. இந்த அமர்விற்கு கவிஞர் கந்தவனம் தலைமை தாங்க, [...]











