• Archive for March, 2005

    CBC Radio Show – பத்ரியின் கருத்துக்களை முன்வைத்து.

    by  • March 31, 2005 • கனடா • 16 Comments

    பத்ரி – நான் இதற்கு நிறைய எதிர்வினைகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். குறைந்தபட்சம் உங்களிடமிருந்தாவது, இரண்டு நாட்கள் கழித்து வந்திருக்கிறது. பெரியதாகிவிட்டதால் வெட்டிவெட்டிப் போடுவதற்குப் பதிலாகத் தனிப்பதிவாக. பொதுவாகவே இந்தத் தொடரை நீங்கள் கடுமையான சார்நிலை விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. என்னைப் பொருத்தவரை இது ஒரு தரமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய புரிதலுக்கான துவக்கம் என்ற வகையில் பார்க்க வேண்டும். கொஞ்சம் உற்று நோக்கினால் உலகில் கனடாவைத் தவிர்த்த பெரும் நாடுகளில் [...]

    Read more →

    தமிழ் ஈழம் குறித்த கனேடிய வானொலித் தொடர்

    by  • March 29, 2005 • கனடா • 1 Comment

    ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களுடன் இந்தியாவிற்கு வெளியே அதிகம் தமிழர்கள் வசிக்கும் மாநகரமாக மாறியிருப்பது டொராண்டோ. இவ்வளவு குறுகிய காலத்தில் புலம்பெயர்ந்து குறிப்பிடத்தக்க அளவிற்கான சமூகத்தை தமிழர்கள் ஒரே நகரில் உருவாக்கிய வரலாறு நானறிந்தவரை முன்னெப்பொழுதும் கிடையாது. ஒரு புறத்தில் புலம்பெயர்ந்தவர்களின் கஷ்டங்கள், இழப்புகள் போன்றவை இருந்தாலும் வந்தவர்களை வரவேற்றுக் குடியமர்த்துவதில் கனேடிய அரசாங்கமும் பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. நல்ல நோக்கங்களுக்குக்காக அகதிகளைக் குடிமர்த்தினாலும் இஸ்லாமிய, சீக்கிய (காலிஸ்தான்), தமிழ்த் தீவிரவாதிகளுக்கான தலைநகராக மாறியிருக்கிறது கனடா என்று [...]

    Read more →

    காதல் மன்னனும் துப்பாக்கிக் குண்டுகளும்

    by  • March 28, 2005 • பொது • 5 Comments

    கடந்த வாரம் மறைந்த காதல் மன்னன் ஜெமினி கணேசனைப் பற்றி நிறைய பேர் வலைக்குறிப்பில் எழுதியிருந்தார்கள். எனக்கு அவரைப் பற்றி அதிகம் தெரியாது. அவர் அழுகை அரசி சௌகார் ஜானகியுடன் எப்படி காதல் செய்திருக்கிறார் என்று பார்க்கவேண்டும் என்று பல நாட்களாக ஆசை இருந்தது. சின்ன வயதில் சினிமா அதிகம் பார்த்ததில்லை (இப்பவும் கூடத்தான்) – வீட்டில் விடமாட்டார்கள் (இப்பவும் கூடத்தான்). ஆனால், இந்தச் செய்தியைப் படித்துப் புல்லரித்துப் போனது. ஜெமினி கணேசன் உடல் காவல்துறை மரியாதைகளுடன் [...]

    Read more →

    ராமானுஜனின் இன்னொரு கணக்கு புரிந்தது

    by  • March 24, 2005 • அறிவியல்/நுட்பம் • 20 Comments

    முப்பத்திரண்டே வருடங்கள் வாழ்ந்து ஸ்ரீனிவாஸ ராமனுஜம் மரித்துப்போய் 85 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அவருடைய கணிதப் புதிர்களில் பல முதல்தர கணிதவியலாளர்கள் மூழ்கியிருக்கிறார்கள். நிரூபணங்கள் இல்லாமல் ராமானுஜனால் தரப்பட்ட பல தேற்றங்களுக்கு அவ்வப்பொழுது நிரூபணங்கள் தரப்படுகின்றன. இந்த வரிசையில் இந்த வாரம் விஸ்கான்ஸின் – மாடிஸன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்ல் மாஹ்ல்புர்க் (Karl Mahlburg) என்ற மாணவன் புதிரின் இன்னொரு துண்டை ஒட்டியிருக்கிறார. உலகின் முன்னணி கணிதவியலாளர்கள் கார்ல்-லின் இந்த நிரூபணத்தை அற்புதமானது என்று சொல்கிறார்கள். ராமானுஜன் [...]

    Read more →

    வசவுகளின் காலம் – சில விளக்கங்களும் ஆயாசமும்

    by  • March 21, 2005 • பொது • 17 Comments

    என்னுடைய கடந்த வாரத்திய வசவுகளின் காலம் பதிவுக்கு நிறைய எதிர்வினைகள் வந்தன. இவற்றில் பலவற்றுக்கு (சரியாகச் சொன்னால் முதல் 26 கருத்துகளுக்கு நான் பதில்கள் எழுதியிருக்கிறேன்). என்னுடைய கருத்துடன் ஒத்துப் போகும் நண்பர்களுக்கு நான் இப்பொழுதைக்கு நன்றியைத் தவிர வேறெதையும் சொல்லத் தேவையில்லை எனக் கருதுகிறேன்; நன்றிகள். இனி தொடர்ந்து மற்ற நண்பர்களுக்குப் பதில்கள் எழுதுகிறேன். விட்ட இடத்திலிருந்து…

    Read more →

    மீண்டு(ம்) வருகிறேன்.

    by  • March 21, 2005 • பொது • 0 Comments

    கடந்த மூன்று தினங்களாக சற்றும் எதிர்பாராமல் பல பரப்புகளுக்கு உள்ளாக நேர்ந்தது. சனிக்கிழமை எங்கள் ஊர் ராயல் பொட்டானிக்கல் கார்டனில் ஆர்க்கிட் கண்காட்சிக்குப் போய்விட்டேன் (நான் ஒரு ஆர்க்கிட் பைத்தியம்). ஞாயிறன்று வீடு முழுவதும் நண்பர்கள். இன்றைக்கு அலுவலில் வருடாந்திர சா(வே)தனையெல்லாம் பட்டியலிட்டு அறிக்கை எழுத வேண்டும். தவிர பணம் கேட்டு எழுதவேண்டிய ஆய்வு விண்ணப்பங்கள், இத்யாதி… மாலை நேரங்களில் கடந்த மூன்று மாதங்களாக அவ்வப்பொழுது தொடரும் செரிப்பு அமிலப் பெருக்கத்தினால் தாளமுடியாத நெஞ்செரிச்சல்… இடையில் பகிர்ந்துகொள்ள [...]

    Read more →

    வசவுகளின் காலம்

    by  • March 17, 2005 • பொது • 53 Comments

    இது இன்றைக்கு ரோசா வஸந்தின் பதிவில் பொடிச்சியின் இந்தக் கருத்தைப் படிக்க நேரிட்டது; ‘பார்ப்பாரப் புத்தி’ என்று திட்டுவதையும் ‘பறப் புத்தி’ என்று திட்டுவதையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்தால் இரண்டுமே தவறாய்த் தெரியும். மிகவும் முற்போக்கான பார்ப்பனர்களே இந்த ‘திட்டுதலில்’ sensitive ஆய் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது… … இங்கே அடிமைத்தளைகள் போனபின்னாலேயே இந்த நிலமை இருக்க, எமது ஜாதி வேறுபாடுகள் ‘இன்னும் இன்னும்’ அப்படியே இருக்கையில் ‘பார்ப்பானைத் திட்டினால் உறைக்காது ஆனால் மற்றவனைத் திட்டினால் [...]

    Read more →

    மண்டபத்துல எழுதிக் கொடுத்த பாட்டு

    by  • March 16, 2005 • இசை • 4 Comments

    கையில காசும் பக்கத்துல அரசியல் பலமும் இருந்தா என்ன செய்யலாம்? எல்லாத்தையும் நான்தான் செஞ்சதுன்னு சொல்லிடலாம். இந்த உலகத்தையே படைத்தவன் நான்தான் என்றாலும் நம்பக் கூட்டம் இருக்கும். ஆனால் சில சமயம் எல்லாமிருந்தாலும் நடப்பதை முழுவதுமாக நிச்சயிக்க முடியாதல்லவா? இன்றைய பாடல் தெரிவு மிகவும் முக்கியமானது. இது காவடிச் சிந்து என்ற வெளியாகாத படத்திலிருந்து வருகிறது. பாடலுக்கு இசையமைப்பு (என்று சொல்லப்பட்டது) கே. பாக்கியராஜ் பாடல் : யாரோ சொன்னாங்க படம்: காவடிச் சிந்து பாடியவர்கள்: எஸ்.பி. [...]

    Read more →

    ஒளிரும் இந்தியாவும் உண்மைகளும்

    by  • March 15, 2005 • பொது • 23 Comments

    நாராயணனின் பெரிய பட்டியல் கவர்ச்சியாக இருக்கிறது. பொதுவில் நான் சொன்ன, அதற்கு அறிவுசார் துறைகளில் மாத்திரம்தான் தகுதியிருக்கிறது என்று நம்புவது தவறானது. நம்மிடையே பல துறைகளில் niche சந்தையை உருவாக்கிக் கொள்ளும், அவற்றில் இந்தியாவை வல்லரசாக்கும் திறமை இருக்கிறது. சொல்லப்போனால் அதற்கான அடித்தளங்கள் ஏற்கனவே நம்மிடையே இருக்கின்றன… …இப்படி ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டால் – ஒரு விசேட இடம் இந்தியாவிற்குச் சாத்தியம். இவற்றில் பல கன முதலீடுகள் தேவையற்றவை. என்ற கருத்துக்குத்தான் நாராயணன், மருந்து தயாரிப்பில் [...]

    Read more →

    இந்தியாவின் தொழில்முனைப்புத் தேவைகளும் சாத்தியங்களும்

    by  • March 13, 2005 • பொது • 7 Comments

    என்னுடைய முந்தைய வலைப்பதிவு (லக்ஷ்மி மிட்டலைப் பற்றியத்) நீண்ட விவாதத்தைத் துவக்கியது. முக்கியமாக பிரகாஷ்க்கும் எனக்கும் நடந்த பரிமாற்றங்கள். இதன் இறுதியாக பிரகாஷ் எழுதிய கருத்துக்களின் அடிப்படியிலானது இப்பதிவு (மிட்டலைவிட்டு நீங்கி இந்தியாவிற்குத் தாவிவிட்டதால் இதைத் தனி இழையாக்கலாம் என்று தோன்றுகிறது). இதன் பின்னணியை அறியத் தயவு செய்து முந்தைய வலைப்பதிவின் மீதான கருத்துக்களைப் பார்க்கவும். பிரகாஷ் சொன்னது: இந்தியாவை ஒரு மெகா எண்டர்பிரைசாக நினைத்துக் கொண்டு, அதன் சீஈஓ நீங்களாக இருக்கும் பட்சத்தில் , முதலில் [...]

    Read more →